ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வள்ளலார் சபையை மீட்க வேண்டும்.

வள்ளலார் சபையை மீட்க வேண்டும்.

டாக்டர். ஜெய. இராஜமூர்த்தி


.... வள்ளற் பெருமான் தமிழ்நாட்டில் தோன்றி அகில் உலக சகோதரத்துவத்தையும், ஆன்ம நேய ஒருமைப்பாட்டையும் அவனிக்கு அறைந்து சென்ற அருளாளர்.அந்த முக்கிய லட்சியத்தை அடையத் தடைகளாக இருப்பவை சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள், வருணம், ஆச்சிரமம் முதலிய உலகாச்சார சங்கற்ப விகற்பங்கள் எனத் தமது கைப்பட எழுதி கையப்பமும் நாட்டியுள்ளார்.

ஒரு கடவுளே வலியுறுத்திய வள்ளலார், அந்த ஒருகடவுளையும் ஒளியுறுவில் அருட்பெருஞ்சோதியாகக் கண்டவர். அந்த அருட்பெருஞ்சோதி என்னும் ஒளிவடிவ இறைமையை தா¢சிக்க, வடலூ¡¢ல் ஏற்படுத்தப்பட்டதே சத்தய ஞான சபை. எல்லா மதத்தினரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே ஒளி வழிபாடு. ஒளியை எந்த மதத்தினரும் வணங்கலாம். அதற்கு யாதொரு தடையும் இல்லை.

மேலும் சத்திய ஞானசபை என்பது உண்மை அறிவை வெளிப்படுத்தும் அவை. அது கோயில் அல்ல. உத்தர ஞான சிதம்பரம் என்று அழைக்கப்படும் வடலூருக்கு அருகாமையில் சிதம்பரம், திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலம், திருப்பாதி¡¢ப்புலியூர் முதலிய சைவத் தலங்கள் கோபுரங்களோடு காட்சியளிக்கும் வேளையில் வள்ளலார் இந்த சபையை வித்தியாசமாக வடலூ¡¢ல் ஏன் நிறுவினார் என்பதை யோசிக்க வேண்டும்.

எந்த சைவக் கோயிலின் வாசலிலும் கொலை புலை தவிர்த்தவர்கள் மட்டும் உள்ளே வரவும் என அறிவிப்புக் கிடையாது. அந்த அறிவிப்பு ஞானசபையில் உண்டு.

இந்த சபையின் வழிபாட்டு முறையும் வித்தியாசமானது என்று அன்றைய கலெக்டர் ஜே.எச். கர்ஸ்டின் தன்னுடைய கெஜட்டில் பதிவு செய்துள்ளார்.(தென்னார்காடு மாவட்ட கலெக்டர்)

அத்தகைய ஞானசபையில் சைவசமயத்தின் சின்னமான சிவலிங்க வழிபாட்டை நடத்தித் திருநீறு முதலியவற்றைத் தந்து அதனை ஒரு சமயக் கோயிலாக ஆக்குவது வள்ளலாருக்குச் செய்யும் துரோகம் ஆகாதா?

சபாநாத ஒளி சிவாச்சா¡¢யார் என்னும் பார்ப்பனர் வடலூர் சத்திய ஞான சபையில் ஒருபக்கம் சிவலிங்கத்தை வைத்துப் பூசை செய்து வருகிறார். வள்ளலார் நெறி நிற்கும் பெருமக்கள் சிவலிங்கத்தை எடுத்து விடுமாறு கூறியும் அவர் அதை எடுக்க மறுத்துப் பெரும் சிக்கலை உண்டாக்கி வருகிறார். அத்துடன் சிவன் கோயில்களில் நடப்பது போல் மாதா மாதம் பிரதோஷம் கொண்டாடுகிறார்.

வள்ளலார் இந்த சிவலிங்கத்தை வைக்கவா ஞானசபையைக் கட்டினார்? ஞானசபையின் ஒவ்வொரு படிக்கும், வாசலுக்கும், சன்னலுக்கும், தூண்களுக்கும் அதன் பிரகாரங்களுக்கும் மேற்கூரைக்கும் தத்துவா£தியான பொருள் உண்டு. அதில் சிவலிங்கத்திற்கு என்ன வேலை?

இந்து மதத்திற்குள்ளேயே வைணவர்கள் சிவலிங்கத்தை ஏற்றுக் கொள்வார்களா? ஒரு லிங்கத்தைக் கொண்டு போய் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கருவறைக்குள் வைத்து பிரதோஷம் தோறும் வழிபாடு செய்ய முடியுமா? வைணவர்கள் திருநீறு பூசுவார்களா?

இது இப்படியிருக்க எம்மதத்தினரும், யாவரும் வந்து வணங்கக் கூடிய சத்திய ஞானசபையை மற்ற இந்துக் கோயிலைப்போல ஆக்கி அங்கே உண்டியல் முதலியன வைத்து அதன் நோக்கத்தைச் சிறுமைப் படுத்துகிறார் அவர்.

இன்னும் சொல்லப்போனால் வடலூர் தெய்வ நிலையங்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதையே ஏற்றுக் கொள்ள முடியாது. அதனை அத் துறையிடமிருந்து பி¡¢த்து தனி நிறுவனமாக ஆக்கினால்தான் வள்ளலா¡¢ன் புகழ் அகில உலகம் முழுவதும் வேகமாகப் பரவும். அதற்கும் யாராவது முயற்சி செய்தால் நல்லது.

ஞான சபை விளக்க விபவ பத்தி¡¢கை ஒன்றை 18-7-1872 இல் வள்ளலார் எழுதி அதில் சபையின் வழிபாட்டு விதிமுறைகளைத் தெளிவாக எழுதியுள்ளார்கள். அந்தப் பத்தி¡¢கையில் யார் உள்ளே சென்று விளக்கேற்ற வேண்டும், அவர்களது தகுதிகள் என்னென்ன என்பதையும் விளக்கமாகத் தந்துள்ளார்.

அந்தத் தகுதியின் அடிப்படையில் வைத்துப் பார்ப்பினும் இன்றைக்கு ஞானசபையில் பூசை முதலியன செய்து கொண்டிருக்கும் சபாநாத ஒளி சிவாச்சா¡¢யாருக்கு எந்தத் தகுதியும் இல்லை.

வடலூர் பெருமக்கள் வள்ளலாருக்குத் தானமாகத் தந்த 82 ஏக்கர் நிலத்தையும் சர்க்கரையா பண்டா¡¢யா (வேட்டவலம் ஜமீன்தார்) ஆடூர் சபாபதி சிவாச்சா¡¢யார் என்னும் பார்ப்பனருக்கு டிரான்பர் ஆப் டிரஸ்ட் பத்திரம் மூலமாக மாற்றினார். அப்பொழுது சாலையை நிர்வகித்த மு.அப்பாசாமி செட்டியார் சர்க்கரையா பண்டா¡¢யாருக்கு எழுதிய கடிதத்தில்...

"கிளியை வளர்த்துப் பூனைக்கு கொடுத்தாற்போல் ஒப்புவித்து விட்டீர்கள். நமக்கு சாபம் நோ¢டும்" என எழுதினார்.

இதில் முக்கியமான இன்னொரு செய்தி. வள்ளலார், சபைக்கு "சமரச சுத்த சத்திய ஞானசபை" என்றும் சாலைக்கு "சமரச சுத்த சத்திய தருமச் சாலை" என்றும் பெயா¢ட்டு விளக்கமளித்து கையப்பமிட்டிருக்கிறார். சபாபதி சிவாச்சா¡¢யாரோ வள்ளலார் மறைவுக்குப் பின்பு தன்னுடைய டிரஸ்டி விளம்பரத்தில்,...

"ஞானானந்த வல்லி சமேத ஆனந்த நடராசப் பெருமாளும் தனிப்பெருங் கருணாநாயகி சமேத அருட்பெருஞ்சோதீஸ்வரரும் வெள்ளியம்பலநாதர் பொன்னம்பல நாதரும் எழுந்தருளியிருக்கும் தேவஸ்தானம்" என்று ஞான சபையையும் தரும ஸ்தாபனம் என்று சத்திய தருமச்சாலையையும் அழைத்து அச்சிட்டு உள்ளது எவ்வளவு பொ¢ய அயோக்கியத்தனம்.

கடவுள் ஒருவரே என்பதும் அவரே அருட்பெருஞ்சோதி என்பதும் வள்ளலார் கூற்றாக இருக்க இவர் அருட்பெருஞ்சோதீஸ்வரர் என்பதால் சோதி வடிவத்துக்கு மேல் ஈஸ்வரர் சொரூபம் ஒன்று உள்ளதென்று இவர் கருத்தைத் திணிக்கிறார்.

இந்த ஆடூர் சபாபதி சிவாச்சா¡¢யார் ஆதியில் சிதம்பரத்திற்குப் பக்கத்தில் ஒர் குக்கிராமத்தில் ஐயனார் கோயிலில் பூசை செய்து கொண்டு இருந்தார். அதில் இவருக்கு தக்க வருமானம் இல்லையென்றதும் வடலூர் வந்து வள்ளலாரைச் சந்தித்து தன்னை அவா¢டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டினார்.

வள்ளலாரோ அவா¢டத்தில் எங்கள் கூட்டத்தில் சேர்வது எனில் சாதி, சமய,மத பேதங்கள் இருக்கக்கூடாது. உம்முடைய பிராமணிய கோலத்தை விடவேண்டும் எனச் சொல்ல அவரும் தன்னுடைய குடுமியை எடுத்துவிட்டு, பூணூல் முதலியவற்றை அறுத்தெறிந்துவிட்டே வள்ளலா¡¢டம் ஐக்கியமாகியுள்ளார்.

ஆனால் வள்ளலா¡¢ன் மறைவுக்குப் பின் இவர் பழையபடி வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாக பழைய கோலம் மேற்கொண்டு தன்னுடைய பார்ப்பனக் கூட்டத்திடம் "நான் இதுநாள் வரை சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து பாவியாகி விட்டேன்" என்றும், "அந்த தோஷத்தைப் போக்க இராமேஸ்வரம் முதலான இடங்களுக்குச் சென்று பிராயசித்தஞ் செய்து கொண்டேன்" என்றும் கூறியுள்ளார்.

மேலும் வள்ளலார் மறைவுக்குப் பிறகு இவரது கனவில் ஆண்டவர் தோன்றி வடலூர் பெருவெளியில் விநாயகர் கோவில், சுப்பிரமணியர் கோயில் முதலியன கட்டச் சொன்னதாக வடலூர் மக்களிடம் சொல்லி நாடகமாடியுள்ளார். அன்றைய சன்மார்க்க அன்பர்கள் எதிர்த்ததால் இவர் அதைக் கட்ட முடியவில்லை. அந்த பரம்பரையில் வந்த சபாநாத ஒளி சிவாச்சா¡¢யார் இன்று ஸ்படிக லிங்கத்தை வைத்துக் கொண்டு ஞானசபையின் உள்ளே பிரதோஷம் தோறும் வழிபாடு செய்கிறார். அதற்கு அங்குள்ள பார்ப்பனர்கள் சிலர் ஒத்தாசை செய்கின்றனர்.

விவரம் தொ¢ந்த சன்மார்க்க அன்பர்கள் இது தவறு என்று தொ¢ந்திருந்தும் நமக்கேன் வம்பு என சென்று விடுகின்றனர். மற்ற கோவில்கள் போல் எண்ணி வடலூர் வரும் மற்ற பாமரர் கூட்டத்திற்கு இந்த விவரம் பு¡¢யாது. இப்பொழுது தொண்டல்குல. வெ.பெருமாள் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபின் விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மூலம் நல்ல தீர்ப்புக் கிடைத்துள்ளது.

இதனை எதிர்த்து சபாநாத ஒளி அறநிலையத்துறை ஆணையா¢டம் மறு விசாரணை கோ¡¢னார். அதற்கான விசாரணை நாள் 27-12-06 எனத் தொ¢விக்கப் பட்டுள்ளது.

பொது நெறி, சன்மார்க்க நெறி, உலகளாவிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுநெறி வழிபாடான ஒளி வழிபாடு நடக்கும் இடத்தில் சைவ சமய வழிபாட்டு முறைகளைப் புகுத்தி அதையும் மற்ற கோயில்களைப் போல் ஆக்கச் சதித்திட்டம் தீட்டும் வைதிகப் பார்ப்பனக்கூட்டத்திடம் இருந்து வடலூர் சபையை மீட்டெடுக்க வேண்டும்.

நன்றி : தமிழர் கண்ணோட்டம் - சனவா¢ 2007.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.