ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ப.சிதம்பரத்தின் பொய்முகம் - கி.வெ

எதிர்காலத்தை எரித்து, நிகழ்காலத்தைநிலைநிறுத்தும் முயற்சி - இது தான்இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்முன்வைத்துள்ள வரவு - செலவுத் திட்டம்2008-09.உழவர்களுக்குக் கடன் தள்ளுபடி, நடுத்தரவர்க்கத்திற்கு வருமானவரிச் சலுகை ஆகியஇரண்டை மட்டும் மையப்படுத்தியே இந்த வரவு –செலவுத் திட்டம் விவாதிக்கப்படுகிறது.இலட்சத்திற்கும் மேற்பட்ட உழவர்களின்தற்கொலைக்குப் பிறகு, இந்தியா முழுவதும் உழவர்அமைப்புகளின் நெடிய போராட்டத்திற்குப் பிறகு60,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி திட்டத்தைப.சிதம்பரம் அறிவித்திருக்கிறார்.இரண்டு எக்டேர் (5 ஏக்கர் கூட அல்ல.அதற்கும் கீழே) வரை நிலம் கொண்டுள்ள சிறு,குறு உழவர்களின் கடன்கள் தான் தள்ளுபடிசெய்யப்படும் என்கிறார். மெய்யான துயர் தணிப்பு,எல்லா உழவர் கடனையும் தள்ளுபடி செய்வதாகும்.தமிழ்நாட்டில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில்கடன் வாங்கியிருக்கிற உழவர்களில் பெரும்பாலோர்5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்கள் தான்.ஏனெனில் வங்கி மேலாளர்கள் சிறு விவசாயிகளைநம்பி கடன் தருவதில்லை. எனவே தமிழ்நாட்டைப்பொறுத்த அளவில் ப.சிதம்பரம் அறிவித்துள்ள கடன்தள்ளுபடி பெரும்பாலோருக்கு பயன் தராது.மராட்டியத்தில் விதர்பா பகுதியில் தான் அதிகஎண்ணிக்கையில் பருத்தி உழவர்கள் கடன்தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்கள்.விதர்பா ஜன அந்தோலன் என்ற அமைப்பின்தலைவர் கிN~hர் திவாரி, உழவர் தற்கொலைமிகுந்துள்ள ஆறு விதர்பா மாவட்டங்களில் இக்கடன்தள்ளுபடி பயன் அளிக்காது. சாதாரணமாக, ஆறுஅல்லது ஏழு ஏக்கர் நிலம் உள்ளவர்கள் அங்குமிகுதி என்கிறார்.இரண்டு எக்டேருக்கு மேல் நிலம் உள்ள உழவர்கள் கடனில் அசல்வட்டி இரண்டையும் சேர்த்து 75 விழுக்காடு செலுத்தினால் 25 விழுக்காடு தள்ளுபடி ஆகும் என்கிறார். வட்டியைக்கூட தள்ளுபடி செய்யாத இந்த ஏற்பாடு வசூல் தந்திரம் தவிர வேறு அல்ல. ஒரே நேரத்தில் கடன் தீர்க்கும் திட்டத்தின் கீழ் வணிக வங்கிகள் ஏற்கெனவே இவ்வாறான சலுகைகள் வழங்கி வருகின்றன. கண்துடைப்பான இந்தக் கடன் தள்ளுபடி திட்டத்தின் போலித்தனத்தை எதிர்த்து இந்தியாவெங்கும் கூக்குரல்கள் எழுந்தன. ஆளும் குடும்பத்தைச் சேர்ந்த இராகுல் காந்தியை வைத்து  நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தானே இப்பிரச்சினையை

எழுப்பியது. பதிலளித்த ப.சிதம்பரம் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள நில அளவுகள் குறித்தும், நிவாரணம் பெறுவதற்கு

உள்ள தகுதிக் கால வரையறைகள் குறித்தும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று பொத்தாம் பொதுவில் அறிவித்தார். துல்லியமான அறிவிப்பு இனி வந்தால் தான் அது எந்த நிலையில் உள்ளது என்பது தெரியும்.
 
இதற்கான நிதி ஒதுக்கீடு வரவு செலவுத் திட்டத்தில் முன் வைக்கப்படவில்லை. இது பற்றி கடுமையான விவாதங்கள் எழுந்ததற்குப் பிறகு இந்த நிதியாண்டிலிருந்து நான்கு ஆண்டுத் தவணையில் வங்கி களுக்கு ரூ.60,000 கோடி கொடுத்து ஈடு செய்யப்படும் என அறிவித்தார். இது சட்டவலுவில்லாத அறிவிப்பு. ஏனெனில் வரும் நான்கு நிதியாண்டு களுக்கான நிதி ஒதுக்கீட்டை இந்த வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைப்பதற்கு ப.சிதம்பரத்திற்கும் அதிகாரம் கிடையாது; இப்பொழுதுள்ள நாடாளுமன்றத்திற்கும் உரிமை கிடையாது. சேம வங்கியின் (ரிசர்வ் வங்கி) மூலமாக உறுதியான நிதி ஏற்பாடு அளிக்கப்பட்டாலே தவிர இதற்கு  உத்தரவாதம் கிடையாது.
 

உழவர் உற்பத்திப் பொருட்களுக்கு இலாபவிலை கிடைக்கவும், சந்தை வாய்ப்பு பெருகவும் எந்த ஏற்பாட்டையும், இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கவில்லை. அது மட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங்கள் நம் தாயாகிய விலைநிலங்களை, பூச்சி மருந்து உரம் வேதிப்பொருட்களால் நஞ்சாக்கி, மலடாக்கிவிட்டன. மான்சாண்டோ போன்ற உயிர் கொல்லி நிறுவனங்கள் மரபீனி மாற்று விதைகளைக் கொண்டு வந்து, மரபுவழிப்பட்ட விதைகளை அழித்து, நீடித்து விளைச்சல் தராத புதிய விதைகளைக் கொடுத்து, உழவர்களை ஓட்டாண்டி

ஆக்கிவிட்டன. இந்தக் கொள்ளை நோயைத் தடுக்கவும், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு இலாப விலை கிடைக்கவும் துரும்பைக்

கூட அசைக்கவில்லை சிதம்பரம் வரவு செலவுத் திட்டம் சிறப்புப் பொருளியல் மண்டலங்களுக்காக, விளை நிலங்களை அபகரித்து,

கிராமங்களைக் காலி செய்யும் பன்னாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த எந்த முன்மொழிவையும் இத்திட்டம் கூறவில்லை.

நாட்டின் பொருளியல் வளர்ச்சி அடைந்து வருவதாகப்  போலித் தோற்றம் காட்டி வந்த மன்மோகன்-ப.சிதம்பரம் வாய்வீச்சு இந்த வரவு செலவுத் திட்டத்தில் அம்மணமாக அம்பலமாகிவிட்டது. இந்த ஆண்டு செலவில், மிக அதிக விகிதத்தைப் பெற்றிருப்பது நடுவண் அரசின் திட்டங்களோ மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரிப் பங்குத் தொகைகளோ அல்ல. நடுவண் அரசு கட்ட வேண்டிய வட்டித் தொகை தான் அது! மொத்தச் செலவில் 21 விழுக்காடு வட்டி செலுத்த மட்டுமே போகிறது. அசலைக் கட்டுவதற்கான அறிகுறி தொடுவானத்திற்கப்பால் கூட தெரியவில்லை. அத்துடன் புதுக்கடன் இவ்வாண்டு ஏராளமாகத் திரட்டப்போகிறார்கள். மொத்த வரவில் 14

விழுக்காடு கடன் வாங்குவதன் மூலம் வரும் தொகையாகும். ஆனால் உண்மையில் 14 விழுக்காட்டிற்கும் மேல் பல்லாயிரம்

கோடி கடன் வாங்க உள்ளார்கள்.
 
அரசின் வரவு – செலவுத் திட்ட ஆவணத்தில் சென்ற ஆண்டு

வரை கடன் வரவை முழுமையாக காட்டினார்கள். ஆனால் இந்த

வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் அது முழுமையாகக் காட்டப்பட

வில்லை. மாறாக இந்த ஆவணத்தின் இணைப்பில்

வௌ;வேறு வகை கடன் ஏற்பாடுகள் காட்டப்படுகின்றன.

"சந்தை நிலை நிறுத்தல் திட்டம்" என்ற வழியில் திரட்டப்படும் கடன்

இந்த ஆண்டு ரூ.13,958 கோடி. இது சென்ற ஆண்டை விட மூன்று

மடங்கு அதிகம். இது தவிர எண்ணெய் நிறுவனக்கடன்

பத்திரங்கள் மூலம் ரூ.5519 கோடியும், உணவுக்கழக கடன்

பத்திரங்கள் மூலம் ரூ.1319 கோடியும் திரட்டுவது வேறு.

இவையனைத்தும் கடன் வரவில் காட்டப்படவில்லை.

ஒட்டு மொத்த நிதிப்பற்றாக்குறை என்று அவர் கணக்குக் காட்டியிருப்பது ரூ.1,33,287 கோடியாகும். உண்மையான பற்றாக்குறை

இதைவிடக் கூடுதலாகும். வேளாண் கடன் தள்ளுபடிக்கு

இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.25,000 கோடி, அதே போல்

நடுவண் அரசு ஊழியர் 6வது சம்பளக் குழு பரிந்துரைப்படி

தரவேண்டிய ஊதிய உயர்வான ரூ.20,000 கோடி ஆகியவையும்

சேர்த்தால் பற்றாக்குறை இன்னும் அதிகமாகும்.

இவ்வளவு பற்றாக் குறையையும் எப்படி ஈடுகட்டப்

போகிறார்கள். கடன்வாங்கியும், அரசுத்துறை உற்பத்திப்

பொருட்களின் விலையை உயர்த்தியும், புதுவரிகளைக்

கண்டுபிடித்தும், வரி உயர்வு செய்தும், கணக்கை மீறி ரூபாய்த்

தாள்களை அச்சிட்டும் தான் ஈடுகட்டப் போகிறாhர்கள். விலை

உயர்வு, பணவீக்கம், பொருளியல் மந்த நிலை என்பவை தான்

இதனால் உண்டாகும். வரவு – செலவுத் திட்டம் முன்

வைக்கப்படுவதற்கு 15 நாள்களுக்கு முன்னால் பெட்ரோல்,

டீசல் விலை உயர்த்தபட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பொருளாதாரத்தை முன்னேற்றுவது  என்பதற்கு பதிலாக தனியார் நுகர்வின் மூலமாகவும், கடன் வாங்கி கட்டடங்கள் எழுப்பப் படுவதன் மூலமாகவும் ஏற்படும் வளாச்சியையே வளர்ச்சி முறையாக மன்மோகன் சிங் அரசு கொண்டுள்ளது. வருமானவரி சலுகைகள் ஆண்டுக்கு ரூ.4,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப் படுவதன் நோக்கம் சேமிப்பை  அதிகப்படுத்துவதற்காக அல்ல. மாறாக நுகர்வை து}ண்டி அதன் மூலம் தொழில் உற்பத்தியை பெருக்குவது என்பது தான் தனது நோக்கம் என்பதை பட்ஜெட் உரையிலேயே ப.சிதம்பரம்

குறிப்பிட்டார்.
 
இரு சக்கர வாகனங்கள், மகிழுந்துகள் மற்றும் பிற மின்னனு நுகர்வுப் பொருட்கள் மீதான வரி ஏற்கெனவே இருந்ததை விட 4%குறைக்கப் பட்டுள்ளதன் நோக்கம் இது தான். ஆனால் ஏழை எளிய

மக்கள் பயன்பெறும் பொது வழங்கல் திட்டத்திற்கு தேவைப்படும் உணவு மானியத்தை உரிய அளவு உயர்த்தவில்லை. சென்ற ஆண்டை விட 1,100 கோடி ரூபாய் தான் உயர்த்தப் பட்டுள்ளது. பண வீக்கத்தைக் கணக்கில் கொண்டால் உண்மை அளவில் உணவு மானியம் உயர்த்தப்படவில்லை என்பது புலனாகும். வேளாண் வளர்ச்சிக்கு எந்த திட்டமும் முன் வைக்காத இந்த வரவு – செலவுத் திட்டம் இந்த நிதியாண்டில் கோதுமை, அரிசி போன்றவை வெளிநாட்டி லிருந்து இறக்குமதி செய்ய வேண்டியதிருக்கும் என கூறுகிறது. இந்த உணவு இறக்குமதிக்கு மட்டும் நிதி ஒதுக்கிட போதுமான உபரி உள்ளதாக ப.சிதம்பரம் கூறுகிறார்.

மறுபுறம் இராணுவச் செலவிற்கு சென்ற ஆண்டை விட

10 விழுக்காடு அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. 1,05,600 கோடி ரூபாய் படைச்செலவிற்கு என்று சொல்லப்பட்டாலும் எல்லைப் பாதுகாப்புப் படை, வேறு சில சிறப்பு படை செலவு களையும் சேர்த்தால் இது 1,40,000 கோடியாகும். கடந்த பத்தாண்டுகளில் இராணுவத் திற்கான ஒதுக்கீடு மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் இராணுவமயமாகி வருவதன் அடையாளம் இது.
 
சேவைத்துறையைச் சார்ந்ததாக இந்தியப் பொருளியல் மாற்றப்பட்டு வருவதை பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறோம். சேவைத்துறையைச் சார்ந்த பொருளியல் என்பது பெரிதும் அமெரிக்கச் சந்தையை சார்ந்

திருக்கிறது. ஆனால் அமெரிக்கப் பொருளாதாரமோ நிலைகுலைந்து

கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 300 கோடி டாலர் (ரூ.12,000

கோடி) கடன் வாங்கி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது

அமெரிக்க வல்லரசு. அந்நாட்டின் மிகப்பெரிய வங்கியான பேர்ஸ்

ஸ்டேர்ன்ஸ் (Bear Stearns Bank) வங்கி திவாலாகும் நிலைக்கு வந்து 'ஜேபி மார்கன்' நிறுவனத்தால் 93 விழுக்காடு கழிவில் ஜப்தி விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் தீராத நோயில் வீழ்ந்து கிடப்பதன் அடையாளம் இது. இந்தத் தொற்று நோய்

இந்தியப் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. சேவைத்துறை ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது. அத்துடன் டாலர் மதிப்பு வீழ்ந்ததன் விளைவாக அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி பாதிப்படைந்தது.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக

ஏற்றுமதி சார்ந்த இந்தியத் தொழில்களில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 2 இலட்சம் வேலை இழக்கப்பட்டுள்ளது

என்றும், திருப்பூரில் மட்டும் 80,000 வேலை இழப்பு நேர்ந்துள்ளது

என்றும் இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் 2008 மார்ச் 4-ஆம் நாள் நாடாளுமன்றத்தில் அறிவித்தது கவனங்கொள்ளத் தக்கது. ப.சிதம்பரத்தின் வரவு - செலவுத் திட்டம் இந்த வேலை

இழப்பை சரி செய்வதற்குக் கூட எந்த உருப்படியான முயற்சி

யையும் முன் வைக்கவில்லை. மருத்துவ நலத் திட்டங்களுக்குக் கடந்த ஆண்டை விட 15 விழுக்காடு நிதி அதிகமாக  துக்கிவிட்டதாக ப.சிதம்பரம் தம்பட்டம் அடிக்கிறார்.
 
தனியார் மருத்துவமனைகளுக்குச் சலுகைகளை வாரி வழங்கியுள்ளார். கிராமப்புறங்களில் அமைக்கப்படும் தனியார் பன்முகச்சிறப்பு மருத்துவமனைகளுக்கு (Multispeaciality hospitals) ஐந்தாண்டு களுக்கு வரி ஏதும் கிடையாது. இவை உண்மையில் மையக் கிராமப் பகுதிகளில் அமையாது. மாநகராட்சி, நகராட்சியை ஒட்டியுள்ள கிராமத்தில் மருத்துவமனையை நிறுவிக் கொண்டு, வரிவிலக்குப் பெறுவார்கள். அவ்வாறான மருத்துவமனைகள் ஏற்கெனவே நோயாளிகளைக் கொள்ளை யடிப்பது நாடறிந்த உண்மை. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்களில், நட்சத்திர விடுதிகள் கட்டும் முதலாளிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வரி கிடையாது என்கிறார் ப.சிதம்பரம். ஆனால் அதே கிராமப்பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ள ஏழை உழவனுக்கு வட்டித் தள்ளுபடி செய்யக்கூட மறுக்கிறார்.
 
கிராமப்புறங்களில் மருத்துவமனை, நட்சத்திர விடுதி என்று இந்திய முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளையும் அனுமதிப்பதன் மூலம் மனைத்தொழில் இறக்கை கட்டிப்பறக்கப் போகிறது. 2007 சனவரி முதல் மனைத் தொழிலில் (Real Estate}ற்றுக்கு நுறு வெளிநாட்டு முதலாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் நுழையும் வெளிநாட்டு மூலதனத்தில் 2003-04 இல் 4.5 விழுக்காடாக இருந்த மனைத்தொழில் மூலதனம் 2006- 2007-இல் 26 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்ற விவரம், அபாயத்தின் தீவிரத்தை உணர்த்தும். தங்கள் தாய் மண்ணை இழந்து, நாடோடிகளாக நம்மக்கள் மாறுவர். மனைத் தொழிலில் ஒரு சில ஆண்டுகளில் 130 மடங்கு வரை லாபம் கிடைக்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.(செமினார் ஆங்கில இதழ், 2008 பிப்ரவரி - ஸ்ரீவத்சவா, பக்கம் 60) மார்க்கன் ஸ்டேன்லி, ப்ளாக் ஸ்டோன் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி டாலர்களை கடந்த சில மாதங்களில் இந்திய ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளன. (ASSOCHAM அறிக்கை -2007) வருமானவரி, மதிப்புக் கூட்டுவரி, உற்பத்திவரி ஆகியவற்றில் சில இனங்களில் வரியைக் குறைத்துள்ளார். அதே வேளை கம்பெனி வருமான வரியைக் குறைக்கவே இல்லை. காரணம், முன்னவை மாநிலங்களுக்கும் பங்கு கொடுக்கப்படவேண்டியவை.
 

கம்பெனி வருமானவரி, அதற்கான துணை வரி ஆகியவற்றில் மாநிலங்களுக்கு எந்தப் பங்குத் தொகையும் கிடையாது. மொத்த வரி வருமானத்தில் கம்பெனி வருமானவரி தான் மிக அதிக விகிதம் கொண்டது. அது 24 விழுக்காடாகும். மாநிலங்கள் மேலும் மேலும் இந்திய அரசை நோக்கி பிச்சைப்பாத்திரம் ஏந்தும் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு வரிப்பங்கீட்டில் கூடுதல் தொகை ஒதுக்குவதுடன், கம்பெனி வருமானவரியில் குறைந்தது 50 விழுக்காடாவது ஒதுக்க வேண்டும். நேரடியான மக்கள் நலத் திட்டங்களான, கல்வி, நலத்துறை, வேளாண்துறை, சாலை வசதி போன்றவற்றை செயல்படுத்துபவை மாநிலங்களே. பொருளியல் வளர்ச்சி (புனுP) நடப்பாண்டில் (2007-2008) 10 விழுக்காடு வரும் என்று கூறிக்கொண்டிரந்தனர். மன்மோகனும் சிதம்பரமும். அது கடந்த ஆண்டை விடவும் குறைந்து 8.7 விழுக்காடு தான் வந்துள்ளது. இதில், வேளாண் உற்பத்தியின் பங்களிப்பு வெறும் 2.6 விழுக்காடு மட்டுமே. கடந்த ஆண்டு (2007-2008) உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 9.4. சுருக்கமாகச் சொன்னால் ப.சிதம்பரம் முன்வைத்துள்ளது மக்கள் விரோத – மாநில விரோத உலகமய வரவு செலவுத் திட்டம் ஆகும். n

 

 

 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.