ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சந்தர்ப்பவாதமும் சர்வதேசியமும் - அமரந்த்தா

சந்தர்ப்பவாதமும் சர்வதேசியமும் - அமரந்த்தா

தோழர்களே!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘இலத்தீன அமெரிக்க நட்புறவுக் கழகம்’ வெனிசுவேலாவின் பொலிவாரிய குடியரசுத் தலைவர் ஹூகோ சாவேஸ் கடந்த 04.09.2009 அன்று லிபியாவில் வெளியிட்ட அறிக்கைக்கு இக்கடிதம் மூலம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது. அந்த அறிக்கையில் அவர்,

“அழிக்கவே முடியாத பயங்கரவாத அமைப்பு என்று கருதப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக அழித்தொழித்த ராஜபக்சே நமது பாராட்டுக்கு உரியவர். இத்தகைய பயங்கரவாத அமைப்புகளால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு இலங்கை ஒரு முன்னுதாரணம்” என்று கூறியிருக்கிறார்.

ஏகாதிபத்திய ஊடகங்களை நம்பி, ராஜபக்சே இலங்கைத் தீவின் தமிழ் மக்களுக்கு இழைத்திருக்கும் வரலாறு காணாத கொடுந்துரோகத்தினை சாவேஸ் அலட்சியம் செய்துள்ளார்; புலிகளின் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று கூறி பல்லாயிரம் தமிழ் மக்களைக் சர்வதேசியமும் சந்தர்ப்பவாதமும் கொன்று குவித்து, இன்று மீதமுள்ள மூன்றரை லட்சம் தமிழர்களையும் முள்கம்பி வேலியிட்ட கூரையில்லா சித்திரவதை முகாம்களில் அடைத்து வைத்திருப்பதையும், அங்கு மின்சாரம், குடிதண்ணீர், உணவு, மருந்துகள், கழிப்பறை வசதி போன்றவை ஏதுமில்லாமல் கொடூரமான உளவியல் பாதிப்புகளுடன் தமிழர்கள் குற்றுயிராய்க் கிடப்பதையும் கண்டும் காணாததுபோல் இருக்கிறார்.

அது மட்டுமல்ல் அவர் தன் வாயால் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என அழைக்க வேண்டுமானால், பதவிக்கு வருமுன் தான் கடந்து வந்த பாதையை சாவேஸ் மறந்துவிட்டார் என்று தான் பொருள்.

இந்நிலை எங்களிடையே அபாய அறிவிப்பாக ஒலிக்கிறது; நாடுகள் மட்டுமின்றி, பிற மூன்றாமுலக நாடுகளின் விடுதலைக்குமான சர்வதேச முனைப்புகளில் சாவேசின் பங்களிப்பு முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம்.
‘ஆல்பா’(லத்தீன் அமெரிக்காவிற்கான பொலிவாரிய பொருளாதாரத் திட்டம்), “தெற்கு வங்கி” போன்ற வலிமை வாய்ந்த ஆயுதங்களால் ‘வடக்கிலுள்ள பூதத்தை’ எதிர்க்க லத்தீன் அமெரிக்க ஒருங்கிணைவை ஏற்படுத்த விழையும் தலைவர்கள் கீழ்க்காμம் தகவல்களை அறியாமல் இருப்பது அபாயகரமானது:

(1). ஞாயமான தங்களது உரிமைகளுக்காக அறுபதாண்டுகளுக்கு மேலாகப் போராடி வரும் ஈழத்தமிழர்கள், அனைத்து ஜனநாயக வழிமுறைகளிலும் முயன்று தோற்றுப் போயினர். சிங்களப் பேரினவாத அரசு ஆயிரக்கணக்கில் அவர்களைக் கொன்று போராட்டங்களை ஒடுக்கியது. இறுதியில் போராட்டத்திற்கு தலைமையேற்ற விடுதலைப்புலிகள் இயக்கம் வேறுவழியின்றி ஆயுதப் போராட்டத்தில் இறங்க வேண்டியதாயிற்று.

அதாவது, ஞாயமான ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இலங்கையில் தமிழர்கள் ஆயுதப்போராட்டத்தைத் தேர்ந்தெடுத்தனர். இதற்கு முற்றிலும் மாறாக வெனிசுவேலாவில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு தோல்வியுற்ற பின்பு சாவேஸ் தேர்தல் மூலமாக ஆட்சியைப் பிடித்தார்.

(2). விடுதலைப்புலிகளை அழிப்பதாகக் கூறி கடைசி கட்டப் போரில் மட்டும் இலங்கை அரசு ஒரு லட்சம் தமிழர்களைக் கொன் றொழித்துள்ளது.

(3). ஏறக்குறைய பத்து லட்சம் தமிழ் மக்கள் உலகெங்கிலும் அகதிகளாக வாழ்கிறார்கள்.

(4). போர் முடிந்து நான்கு மாதங்கள் முடிந்துவிட்ட போதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் முள்கம்பி வேலிக்குள் ஆடுமாடுகளைவிடக் கேவலமான நிலையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் முகாம்களுக்கு பத்திரிக்கையாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்விதமாக தமிழ் இனப் படுகொலையை சாட்சியமின்றி இலங்கை அரசு அரங்கேற்றியுள்ளது.

(5). போர் நடந்த பகுதிகளையோ, தமிழ் மக்களின் முகாம்களையோ காண ஐ.நா. அமைப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது (அண்மையில் யுனிசெப் பணியாளர் ஒருவர் தொடர்ச்சியான கொலை மிரட்டல்களுக்குப் பின் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டது அனைத்து உலக ஊடகங்களிலும் அறிவிக்கப்பட்டது).

(6). முகாமில் தங்கியிருப்போரில் இளம் பெண்களும் ஆண்களும் இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கும் சித்திரவதைக்கும் பலியாவதும், குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதும், கணவன் மனைவி வெவ்வேறு முகாம்களில் அடைக்கப்படுவதும், தற்போது தப்பிப் பிழைத்து வந்த சாட்சிகள் வாயிலாக அம்பலப் படுத்தப்பட்டு விட்டன.

எந்த லாப நோக்கம் கருதி சாவேஸ் இலங்கை அரச பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார் என்று தெரியவில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது இலங்கையைப் போல் சொந்த நாட்டு மக்களை ஒடுக்கும் அரச பயங்கவாதத்திற்கு ஆதரவளிப்பதை உள்ள்ள்ள்ள்ளடக்கியதாக இருக்குமானால், ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையின் இலக்கு விளிம்புநிலை மனிதர்களை அதிகாரப்படுத்துவதாக இருக்க வாய்ப்பில்லை. ஏதுமறியா அப்பாவி மக்களை பலியிடும் தன்னலத்திற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று பெயரிட முடியாது. ‘பயங்கரவாத எதிர்ப்பு’ என்ற பெயரில் தமிழினத்தைத் துடைத்தழித்த ராஜபக்சேவுக்கு ஆதரவளிப்பது 21ஆம் நூற்றாண்டு சோசலிசத்தை கட்டியெழுப்பும் சாவேஸின் நோக்கத்திற்கு முற்றிலும் முரணானது.

அரசுக்கு எதிரான இராணுவக் கிளர்ச்சியைத் தலைமையேற்று நடத்திய சாவேஸ், ஏகாதிபத்திய ஊடகங்கள் அடையாளப் படுத்துவதைப் போல பயங்கரவாதி என்றும் சர்வாதிகாரி என்றும் வரலாற்றில் இடம்பெறுவதை விரும்பமாட்டார் என்பதில் ஐயமில்லை. அப்படியானால், ‘பயங்கரவாதத்தை துடைத்தழிப்பது’ பாராட்டுக்குரியது என்று அவர் கூறுவது எப்படி ஞாயமாகும்?
இலத்தீன் அமெரிக்க நாடுகளின் நண்பர்களாகிய எங்களுக்கு, இந்த முற்போக்கு அரசுகளும் ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிப்பது மிகுந்த ஏமாற்றம் தருவதாக உள்ளது. இந்நாடுகளின் இடதுசாரி அறிவுஜீவிகளும், இடதுசாரி அரசியல் கட்சிகளும் இலங்கை அரசின் தமிழ் இன அழிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் மவுனமாகப் பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? இலத்தீன் அமெரிக்காவின் இடதுசாரிக் கட்சிகள் கட்டமைத்து வரும் 21ஆம் நூற்றாண்டு சோசலிசத்தில் தமிழர்களுக்கு இடமில்லையா?

ஏகாதிபத்திய ஊடகங்களின் சித்தரிப்பைப் புறக்கணித்து உண்மை வரலாற்றை சீர்தூக்கிப் பார்க்கும் நாங்கள், மேற்குலகில் சாவேசின் பணியை மதிக்கிறோம். பொலிவாரின் கனவை நனவாக்குவதும், ஹொசே மார்த்தியும் சே குவேராவும் எழுப்பிய தார்மீகமான அடித்தளத்தின் மீது சர்வதேச ஒருங்கிணைவை உறுதிப் படுத்துவதுமான வரலாற்றுக் கடமை சாவேசுக்கு இருப்பதையும் நாங்கள் அறிவோம்.

எனவே, சேகுவேராவின் சர்வதேசியத்துடன் தம்மை இணைத்துக் கொள்ளும் வண்ணம் ஃபிதெல், சாவேஸ், ஈவா மொரேலஸ், இன்னபிற லத்தீன் அமெரிக்க இடதுசாரி அறிவுஜீவிகள் யாவரும் கடந்த 60 ஆண்டுகளாகப் போராடி வரும் ஈழத்தமிழரின் தேசிய விடுதலைக்கு ஆதரவு அளிக்க வேண்டும்; இஸ்ரேல் விசயத்தில் செய்தது போல் ஸ்ரீலங்காவுடனான அரசாங்க ராஜ்ய உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.

அமரந்த்தா,
இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம்.

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் அக்டோபர் 2009 இதழிலிருந்து...)

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.