ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கூடங்குளம் அணுமின் திட்டம் அணுசக்தி கழகத்தின் அறிவியலுக்கு புறம்பான ஆய்வு – 2 . ரா. இராமேஷ், பத்மநாபன், வீ. புகழேந்தி


26) உறுதிகுறைந்த இந்த வண்டல் குவியல் கள் கூடங்குளம் அமைவிடத்திற்கு வெகு அருகா மையில் அமைந்துள்ளன. கிழக்குக் குமரி வண்டல் குவியலானது சுமார் 90 கிலோமீட்டர் தொலை விலும், கொழும்பு வண்டல் குவியல் சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன.

1994 ஆம் ஆண்டில் மன்னார் வளை குடாவின் கடல்தரையில் நி.ஸி.ரி. மூர்த்தி குழு வினரால் கண்டறியப்பட்ட எரிமலையின் முகவாயானது கிழக்குக் குமரி வண்டல் குவிய லுக்குக் கீழ்தான் அமைந்துள்ளது. இந்த வண்டல் குவியல்களின் செயல்பாடுகளை தெற்கு வடக்காக நீளும் இந்திராணி நிலப்பிளவின் செயல்பாடுகள் பாதிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று வெஸ்டால் குழுவினர் கருதுகிறார்கள்.

27) மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் உள்ள இந்த வண்டல் குவியல்களுக்கு அருகா மையிலும், ஊடாகவும் 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதியன்று வி 5.8 சக்தியைக் கொண்ட பூகம்பமும், 1991 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதியன்று வி 5.2 சக்தியைக் கொண்ட பூகம்பமும் நிகழ்ந்துள்ளன. இவை இரண்டும்  கூடங்குளம் அணு மின் நிலைய அமைவிடத்தில் இருந்து 160 கிலோமீட்டர் தென் கிழக்கிலும், தென் மேற்கிலும் நிகழ்ந்தன. கூடங்குளம் அமைவிடத்தின் பாதுகாப்பிற்கு வண்டல் குவிய லில் ஏற்பட வாய்ப்புள்ள நிலச்சரிவின் மூலம் சுனாமியை உருவாக்க வல்ல இந்த பூகம்பங்களை மத்திய அரசின் வல்லுனர் குழுவின் அறிக்கை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது. மத்திய அரசு வல்லுனர் குழு மேற்கோள் காட்டும் கி.ரி.கோஷ் அவர்களின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பூகம்பப் பாதுகாப்பு குறித்த ஆய்வறிக்கையில் இந்த பூகம்பங்கள் குறிப்பிடப் படாத காரணத்தாலேயே மத்திய அரசு வல்லுனர் குழுவின் அறிக்கையில் அது குறிப்பிடப்பட வில்லை என்று சந்தேகம் கொள்ளத் தோன்று கிறது.

இதன் காரணமே அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்கூடங்குளம் அணுமின் நிலை யத்தின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பார்வையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.

28)  2011 நவம்பர் 19 ஆம் தேதியன்று குமரி முனைக்குத் தெற்கே உள்ள குமரி முகட்டின் அருகாமையில் 5.2 ரிக்டர் சக்தியைக் கொண்ட பூகம்பம் கடலுக்கடியில் ஏற்பட்டது. இதன் அதிர்வலைகள் கொழும்பிலும், திருவனந்தபுரத்திலும் உணரப்பட்டன. இது குறித்து கேரளத்தில் உள்ள Center for Earth Science Studies, India Meteorological Depart ment  மற்றும் ஹைதராபாத்தில் உள்ள INCOIS ஆகிய நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டன. மன்னார் வளைகுடாவின் தரையில் அமைந்துள்ள வண்டல் குவியல்களின் இயக்கத்தைத் தீர்மாணிக்கும் திறனைக் கொண்ட இந்திராணி நிலப்பிளவில்தான் இந்த பூகம்பம் நிகழ்ந்துள்ளது. எனவே, இதுகுறித்த அறிக்கையை கூடங்குளம் அணுமின் நிர்வாகிகள் வெளியிடுவார்கள் என்று அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் எதிர்பார்த்திருந்தது. அப்படிப்பட்ட அறிக்கை வெளியாகாத காரணத்தால், இந்த பூகம்பத்தை அணுமின்நிலையத்தின் பூகம்பமாணி பதிவு செய்ததா? அவ்வாறு பதிவு செய்திருந்தால் அதன் முடிவுகளை வெளியிடுக என்று அணுசக்தி நிர்வாகத்திடம் PMANE பத்திரிகைகள் வாயிலாகக் கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்கு அணுஉலை நிர்வாகமோ, மத்திய அரசின் வல்லுனர் குழுவோ இன்றுவரை பதிலளிக்கவில்லை.

29) இதுபோன்ற பூகம்பங்களின் போது கிழக்குக்குமரி மற்றும் வண்டல் குவியல்களில் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் களிமண்கற்கள் (Clay stones) நிறைய இருப்பதாக கடந்தகால பெட்ரோல் துரப்பணி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே நிலச்சரிவுகள் எளிதில் நடந்திடும் அபாயம் உள்ளது. அப்படிப்பட்ட நிலச்சரிவினால் சுனாமிகள் உருவாக வாய்ப் புள்ளது. அந்த சுனாமிகள் 100 மீட்டர் உயரத்தைக் கொண்ட மெகா சுனாமிகளாகக் கூட இருந்துவிட வாய்ப்புள்ளது.

30) கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களையும் தகர்த்துவிடும் தன்மையைக் கொண்ட இதுபோன்ற நிகழ்வு களுக்கான சாத்தியங்கள் குறித்து அறிந்து கொள்ள அணுமின் நிலைய நிர்வாகம் இன்றுவரை அக்கறை காட்ட மறுத்து வருகிறது.

31)  கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வழிசெய்யும் Tsunami Hazard Study, Volcanic Hazard Study ஆகியவற்றை அணுமின் நிலைய நிர்வாகிகள் இன்றுவரை மேற்கொள்ளா மலேயே அணு உலையை இயக்க அவசரப்படுகிறார்கள். ரஷ்ய உலைகளின் தொழில்நுட்ப உன்னதத்தை பெரியஅளவில் பேசி தங்களின் அறிவியலுக்குப் புறம்பான நடத்தைகளை மறைக்க முயன்று வருகிறார்கள்.

32) அதிகாரிகளின் அவசரத்துக்கு இணங்கி மத்திய மாநில அரசுகள் அணு உலையை இயக்க முடிவு செய்தால், பிதுங்கு எரிமலைப் பாறைகளாலும், கார்ஸ்ட்பாதாள சுண்ணாம்புக் குகைகளாலும், சிறிய அளவிலான எரிமலை வெடிப்புகளாலும், சரிந்து சாயும் வண்டல் குவியல்களால் ஏற்பட வாய்ப்புள்ள மெகா சுனாமிகளாலும், உறுதி குறைந்த கடலோர நிலவியல் தன்மைகளால் ஏற்பட வாய்ப்புள்ள கடலோர உடைப்புகளாலும், ஒற்றை நீராதாரத் தினை நம்பியிருப்பதால் ஏற்பட போகும் புக்குஷிமா போன்ற குளறுபடிகளாலும் உருவாக வாய்ப்புள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை உறுதியுடன் கூற முடியும்.  

33)  இப்படிப்பட்ட சூழ் நிலையில்தான் கூடங்குளம் அணுமின் நிலையத்தினை மூடிட வேண்டும் என்ற தமிழக மற்றும் கேரள மக்களின் போராட்டம் நடந்து கொண்டி ருக்கிறது.

34)  அணுசக்தி என்ற பொருளாயத சக்தி குறித்து மக்களுக்கு அச்சம் உள்ளது. என்றாலும் கூட அதனைக் கையாளும் அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான செயல்பாடுகள் குறித்தே அவர்கள் கூடுதல் அச்சத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

35)  அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தைப் போக்க மத்திய அரசால் உருவாக்கப் பட்ட நிபுணர்குழு இன்றளவும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதனால் முன் வைக்கப்பட்ட 38 பக்க அறிக்கை இந்த அச்சத்தைப் போக்குவதற்கு பதிலாக அதனை அதிகரிக்கும் பணியையே செய்துள்ளது.

36)  இந்த அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் மத்திய வல்லுனர் குழுவின் 38 பக்க அறிக்கையை நிராகரிக்க வேண்டும்.

37)  கூடங்குளம் அணுமின் நிலைய அமைவிடத்தின் நிலவியல், கடலியல் மற்றும் நீரியல் தன்மைகள் குறித்துப் படிக்கத் தவறிய அணுசக்திக் கழகம் மற்றும் அணுசக்திக் கட்டுப் பாட்டுக் கழகத்தின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைக் கமிஷனை மத்திய - மாநில அரசுகள் உடனே அமைக்க வேண்டும். இந்த விசாரணையை வெளிப்படையாக நடத்த வேண்டும். தவறிழைத்தவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங் கப்படல் வேண்டும்.

38) கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவிடத்திற்கான சுனாமி பேரிடர் ஆய்வு, எரிமலைப் பேரிடர் ஆய்வு, மாற்று நீராதாரம், கடற்கரை உறுதி குறித்த ஆய்வுகள் ஆகியவற்றை செய்யுமாறு மத்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.

39)  அந்த ஆய்வுகளின் முடிவுகளை மக்களின் முன் வெளிப்படையாக வைக்க வேண்டும்.

40)  அதுவரை கூடங்குளம் அணு உலைகளை இயக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும்

41)  இப்படிப்பட்ட நடவடிக்கையே அணுசக்தி அதிகாரிகளின் பொறுப்பற்ற, அறிவியலுக்குப் புறம்பான நடவடிக்கையைக் கண்டு மக்கள் மனதில் எழுந்துள்ள அச்சத்தை நீக்க உதவும். இதுவே மக்களின் நலம் குறித்து அக்கறை செலுத்தும் அரசின் நடவடிக்கையாக இருக்க முடியும்.

ஆதாரம்

 1 .  http://arti cles.latimes.com/2009/jul/30/nation/na-yucca30 OF

2 . http://www.hindu.com/2005/07/16/stories/2005071615080300.htm ;

3.  http://arti cles. timeso findia.indiatimes.com/2009-06-28/chennai/28156215_1_bulk-water-purchase-agreement-mld-of-potable-water-kattupalli

4.  http://tamil. onei ndia.in/news/2005/05/23/sea.html

பிற கருவி நூல்கள் பட்டியல் இடநெருக்கடிக்காரண மாக விடப்பட்டது.

இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 சனவரி 1-15 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர்கள் ரா.இராமேஷ், பத்மநாபன், வீ.புகழேந்தி.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.