ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சென்னை பல்நோக்கு மருத்துவமனையில் இட ஒதுக்கீடு கிடையாது என்ற அறிவிப்பை எதிர்த்து சென்னையில் ஆர்ப்பாட்டம்!

சென்னை பல்நோக்கு மருத்துவமனையில் இட ஒதுக்கீடு கிடையாது என்ற அறிவிப்பை எதிர்த்து சென்னையில் ஆர்ப்பாட்டம்!


சென்னை அரசுப் பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க முடியாத என்ற தமிழக அரசின் முடிவைக் கண்டித்தும், இட ஒதுக்கீடு அடிப்படையிலேயே பணிநியமனம் செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று(25.01.2014), திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தி.வி.க. பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் தலைமையேற்றுப் பேசினார். சமூகநீதிக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜீ.ஆர்.இரவீந்திரநாத், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொழிற்சங்கத் தலைவர் திரு. சைதை கு.சிவராமன், தமிழ்நாடு மக்கள் கட்சி சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி கலந்து கொண்டு கண்டனவுரையாற்றினார். இட ஒதுக்கீடு கிடையாது என்ற அறிவிப்பின் மூலம் அயல் மாநிலத்து மருத்துவர்களுக்கு தமிழக அரசே அரசுப் பணி வழங்குவது நடைபெறும் எனவும், ஏற்கெனவே தமிழகத்தில் குடியேறியுள்ள அயலார் இங்கேயே நிலைபெற்று மருத்துவக்கல்வி பயின்று அரசு மருத்துவமனைகளில் இருப்பது கவனிக்கத்தக்கது எனவும் தோழர் அருணபாரதி சுட்டிக்காட்டிப் பேசினார். மேலும், 'சூப்பர் ஸ்பெசாலிட்டி' என்ற வார்த்தையால் தான் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது தடைபடுமேயானால் அந்த வார்த்தையை அழிக்கும் போராட்டத்தை நாம் அனைவரும் சேர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

நிகழ்வில் திரளான தி.வி.க. தோழர்களும், பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.