மூவர் தூக்கு இரத்து : தமிழகம் எங்கும் விழாக் கோலம்!
மூவர் தூக்கு இரத்து : தமிழகம் எங்கும் விழாக் கோலம்!
பேரறிவாளன் – சாந்தன் - முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை இரத்து செய்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. சதாசிவம் அவர்கள் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, தூக்குக் கயிற்றை அறுத்து வீசி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பை வரவேற்று தமிழகம் எங்கும் தமிழின உணர்வாளர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சென்னை
சென்னை கோயம்பேட்டில் உள்ள தோழர் செங்கொடி அரங்கத்தில், தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதை வரவேற்று, 18.02.2014 அன்று மாலை பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் திரு. தி.வேல்முருகன், இயக்குனர் த.புகழேந்தி, திருச்சி திரு. செளந்தரராசன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழர் குடியரசு முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாச நாராயணன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், நடிகர் சத்தியராசு, இயக்குனர் வ.கவுதமன், அதிர்வு திரைப்பட்டறை திரு. த.மணிவண்ணன், புலவர் இரத்தினவேலவர், வழக்குரைஞர் அங்கயற்கண்ணி உள்ளிட்ட ஏராளமான தமிழின உணர்வாளர்கள் பெரும் திரளாகக் கூடி பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இதில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், வட சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் து.முத்துக்குமார், பல்லாவரம் கிளைத் தலைவர் தோழர் நல்லன்.கோ உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.
அரங்கம் அதிர பறையிசை முழங்க மாணவர்களும், தமிழின உணர்வாளர்களும் ஆடிப் பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை மட்டுமின்றி, ஏற்கனவே வாழ்நாள் தண்டனை பெற்று சிறையிலுள்ள நளினி, இராபர்ட் பயாஸ், செயக்குமார், அருப்புக் கோட்டை இரவிச்சந்திரன் ஆகிய நாள்வரையும் சேர்த்து எழுவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று முழக்கங்கள் எழுப்பபட்டன.
குடந்தை
தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டத் வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பை வரவேற்று, குடந்தையில் காந்தி பூங்கா, நீதிமன்றம் மற்றும் உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகிய இடங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, ம.தி.மு.க., விடுதலைத் தமிழ்ப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நீதியை நிலை நாட்டிய நீதியரசர் சதாசிவம் அவர்களுக்கு நன்றி, மூன்று பேர் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய் உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பட்டன. த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
சாமிமலை
சாமிமலை முதன்மைச் சாலையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கப்பட்டது. பொதுமக்கள் பங்கேற்புடன் நடந்த இந்நிகழ்வை, த.தே.பொ.க. தோழர் தினேசு, த.இ.மு. செயலாளர் தோழர் சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
ஈரோடு
தமிழின உணர்வாளர் கூட்டியக்கம் சார்பில், மூவர் விடுதலைத் தீர்ப்பை வரவேற்று ஈரோடு பேருந்து நிலையம், பன்னீர் செல்வம் பூங்கா, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம், தமிழ்த் தேச விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோந்த தமிழின உணர்வாளர்களும் ஒன்று கூடி பட்டாசு வெடித்தும் இனிப்பு ...
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment