ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்து

இந்திய அரசு தானே முன்வந்து  தமிழீத்திலும், உலக நாடுகளிலும் பரவி வாழும் தமிழீத் தமிழர்களிடம் தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் அளிக்கும் தீர்ப்புக்கேற்ப ஐ.நா பேரவை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நடைபெறவிருக்கும் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் கூடவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கையில் தமிழருக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை புரிந்ததற்காக இராசபட்சே கும்பல் மீது விசாரணை நடத்த தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்க தீர்மானம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
தஞ்சை


தஞ்சையில் 20.02.2014 அன்று மாலை 05.00 மணியளவில் தொடர்வண்டி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமையேற்றார் .

 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் தோழர் பெ.மணியரசன் , விடுதலை தமிழ் புலி கட்சியின் விவசாய பிரிவு செயலாளர் தோழர் தங்கராசு, நாம் தமிழர் கட்சி தோழர் சதா முத்துகிருட்டிணன், மனித நேய மக்கள் கட்சி தோழர் கலந்தர், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தஞ்சவூர் மாவட்டத் தலைவர் எம். கனேசன் உள்ளிட்ட தோழர்கள் விளக்க உரையாற்றினர்.

..டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மதிவாணன் நன்றி உரையாற்றினார் .

இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழின உணர்வாளர்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பாக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை, தோழர் பழ.இராசேந்திரன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தஞ்சை நகர செயலாளர் தோழர் இராசு.முனியாண்டி உள்ளிட்ட தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

மதுரை


மதுரை ஆறுமுச்சந்தி பேச்சியம்மன் படித்துரையில் 20.02.2014 வியாழன் மாலை 6.00 மணிக்கு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசிய இயக்கம் தோழர் எம்.ஆர் மாணிக்கம் தலைமையேற்றார்.

தமிழ்த் தேசிய இயக்கம் பொதுச் செயலாளர் தோழர் .பரந்தாமன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் மதுரை மாநாகரச் செயலாளர் தோழர் ரெ. இராசு, மதச்சார்பட்ற ஜனதா தளம் . ஜான்மோசஸ், நாம் தமிழர் கட்சி பொறி. வெற்றிக்குமரன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் கதிர்நிலவன், தமிழ் தமிழர் இயக்கம் பரிதி, எஸ்.டி.பி.., சுப்பிரமணியன், தந்தை பெரியார் திரவிடக் கழகம் தமிழ்பித்தன் உள்ளிட்ட இயக்கம் தோழர்கள் கண்டன உரையாற்றினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் . ஆனந்தன் எழுச்சி முழக்கங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை தமிழ்த் தேசிய இயக்கம் தோழர் வே..கனேசன் நன்றி உரையாற்றினார்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.