ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

விடுதலை - கவிபாஸ்கர்


இருபத்து மூன்று
ஆண்டுகளுக்குப் பிறகு
உப்புக் கண்ணீர்
இனித்தது!

தமிழர் உரிமைப் போராட்டம்
உயிர்த்தெழுந்தது
ஏழு தமிழர் விடுதலை!

“விடுதலை”
வார்த்தையைக் கேட்டு
வேலூர் சிறைச் சுவர்கள்
அழுது சிரித்திருக்கும்..
அற்புதம்மாளின்
விழிக்கிணறு
பொங்கி சிரித்தது போலவே!

சாவுக் கயிறின்
சாம்பலை
நீதிக் கடலில்
கரைத்தார்
சதா சிவம்!

நாங்கள்
செங்கொடி நெருப்பின்
விடியலைப் பார்த்தோம்!

இது நாள் வரை
பூட்டிக் கிடந்த
சட்டமன்றச் சாளரம்
“மனிதம்” பேசும்
ஓசை கேட்டு
பூத்திருக்கிறது!

பொய்யான இந்தியா
பொய்யாகப் புனைந்த கதை
பொய்த்து விட்டது!
நன்றாக உற்றுப்பார்!

தூக்குக் கயிற்றில்
தொங்குவது
இந்தியத்தின் தலை!
பிணத்தை திரும்பி பார்க்காமல்
நடந்துவா!

அடுத்து…..!
தமிழ்நாடு விடுதலை..!

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.