ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பாலஸ்தீன இனப்படுகொலையை நடத்தும் இஸ்ரேல், அமெரிக்காவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல், அமெரிக்க நடத்தும் இனப்படுகொலையை கண்டித்து நேற்று (25-7-2014) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இவ் ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தைத் தோழர் பிரவின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர் ஆளூர் ஷாநவாஸ், திராவிட விடுதலை கழகத் தோழர் வழக்கறிஞர் அருண், மனித நேய மக்கள் கட்சித் தோழர் சலீம் அகமது, இந்திய தவ்கீத் சமாத் கட்சித் தோழர் எஸ்.எம்.பார்கர், இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் உமர்கையான், பொறியாளர் தோழர் ஏழுமலை மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்பாட்டத்தை மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்தது. இஸ்ரேல் அமெரிக்க நாடுகளை கண்டித்தும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையை நினைவு படுத்தியும் பதாகைகை ஏந்தி முழக்கங்கள் எழுப்ப பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளும் உணர்வாளர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துக் கொண்டனர். 


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி,சென்னை நகரச் செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், பல்லாவரம் தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.நல்லன் உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.








No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.