மதுரை ‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட்டம்!
இந்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆகத்து 7 முதல் 13ஆம் நாள் வரை, ‘சமற்கிருத வாரம்’ கொண்டாட வேண்டுமென நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரிய ஆட்சி நடத்தும் பா.ச.க.வின் இந்த முடிவுக்கு எதிராக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள் கடைபிடிக்கப்படுகின்றன.
மதுரையில், சமற்கிருதத் திணிப்பை எதிர்த்து 13.08.2013 அன்று காலை மீனாட்சி பசார் தலைமை அஞ்சலகம் முன்பு த.தே.பொ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. மதுரை மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு தலைமையேற்றார். விடுதலைச் சிறுத்தைகள் பொறுப்பாளர் தோழர் கனியமுதன், தமிழ்ப்புலிகள் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தோழர் முகிலரசன், மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, தமிழ்த் தேசியக் குடியரசு இயக்கத் தோழர் கரிகாலன், மக்கள் விடுதலை மாவட்டத் தலைவர் தோழர் ஆரோக்கியமேரி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்திக், சமநீதி வழக்குரைஞர் சங்க வழக்கறிஞர் இராசேந்திரன், சித்திரை வீதி தானி ஓட்டுநர் சங்கச் செயலாளர் தோழர் இராசேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
Leave a Comment