ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க! - கவிபாசுகர்


வெளியாரை வெளியேற்று - இது
தமிழ்த் தேசியத்தின்
உயிர் முழக்கம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின்
முதன்மை முழக்கம்!

இங்கே..
விடுதலையே
முதல் விதி! இதற்கு
யார் தடையென்றாலும்
ஓங்கி மிதி!

தாய்ப்பாலில் தண்ணீர் கலந்தால்
குடிக்க முடியாது!
இனத்தில் அயலார் கலந்தால்
பொறுக்க முடியாது!

இந்திய ஒருமைப்பாட்டின்
ஓட்டை வழியாக நுழைந்து
வேட்டையாடுகிறார்கள்...
இந்திக்காரர்கள்! அந்த
இந்தியக் காரர்கள்..

தமிழீழத்தில் சிங்கள மயம்
தமிழ்நாட்டில் இந்திய மயம்!

பாகப் பிரிவினைக்கு
பட்டா தூக்கி வரும்
பங்காளிகளைப் போல் வருகிறார்கள்
மார்வாடிகளும், மலையாளிகளும்!


அயலார் மந்தையைத்
திறந்துவிடுகிறது
இந்தியா! - இது
யார் மண்! யார் நாடு?

இந்தியா
வல்லரசுக்கான
வளர்ச்சியில் இல்லை!
தமிழினத்திற்கு வாய்க்கரிசி போடும்
சூழ்ச்சியில் இருக்கிறது!

உலகமயப் புள்ளியில்
இந்திய மயம்
வெளியார் மயத்திற்கு
வெளிச்ச மூட்டுகிறது!

நாக்கின் நரம்பு இற்றுவிழும் வரை
முழக்கமிடுகின்றனர் சில
புரட்சிப் பூசாரிகள்
தமிழ்நாட்டில்..!

ஈழத்தில்
சிங்களவன் குடியேறினால் -அது
ஆக்கிரமிப்பு!

தமிழ்நாட்டில்
மார்வாடி.. மலையாளி
குசாரத்தி பீகாரி குடியேறினால்
அவர்கள் ஏழைப் பாட்டாளி!

இது
வர்க்கப்பார்வையா?
வஞ்சகப்பார்வையா?
இதற்கு நாங்கள் வைக்கிற பெயர்
கங்காணித்தனம்!

மலையாள
மலைப் பாம்புகள்
விலை கொடுத்து
தலைவாங்குகிறது
நகை வணிகத்தில்!

தங்க வந்தவன்
தங்கம் விற்கிறான்
சங்கம் வைத்தவன்
எங்கே இருக்கிறான்?

அன்றைய இலவச
அன்னச் சத்திரங்கள் மடிந்து
எங்கள் தமிழ்ப் பாட்டியின்
இட்டிலிக் கடைகள் முளைத்தன!
அந்த
முச்சந்திக் கடையோடு முடிந்தது
தமிழனின் உணவு முகவரி!

இன்று!
காகிதத்தில் தயாரித்த
வாழை இலையோடு வந்து
வரிசையில் நிற்கிறான்
வடநாட்டுக்காரன்!
எல்லா உணவகங்களிலும்!

ஏறுபூட்டி
சோறுபோட்டத் தமிழன்
வேர் அறுந்து கிடக்கிறான்
வேற்று இனத்தானே - இங்கு
வேர் ஊன்றி நிற்கிறான்!

அமெரிக்க வல்லாதிக்க முகம்
கே.எப்.சி. அரிதாரம் பூசி
பீட்சாவையும், பர்கரையும் திணித்து
தமிழர் குடலை அறுக்கிறது

எந்தத் தமிழன்
அமெரிக்கா வீதிகளில்
முனியாண்டி விலாஸ் வைத்து
அவர்களின் உணவைக்
கெடுக்கிறான்?

தமிழ்நாட்டில்
மலையாளிகள் ஐயப்பன்
கோயில் கட்டுகிறார்கள்!
கேரளத்தில் எந்த இடத்தில்
அய்யனார் அரிவாளோடு
நிற்கிறார்!

ஓணம் பண்டிகைக்கு
தமிழகத்தில் விடுமுறை
பொங்கல் பண்டிகைக்கு
கேரளத்தில் விடுமுறையா?

பண்பாட்டைப் பாடையில்
ஏற்றுவதற்கே! தமிழ்நாட்டில்
பிறமொழிப் பண்டிகை..!

திரைகடல் ஓடியும்
திரவியம் தேடு! என்று
சொன்ன தமிழன்
கியூபாவிற்குச் சென்று
குடியரசு தலைவர் ஆகவில்லை!

வந்தாரையெல்லாம்
வாழவைப்போம் என்று
வாய் தவறி
சொல்லிவிட்டோம்!
வந்தவனெல்லாம் வாழ்கிறான்
சொந்த மண்ணில் பிறந்தவன்
நொந்து  கொண்டிருக்கிறான்!

வேடந்தாங்லுக்கு
இரைதேடவரும் பறவைகள்
பருவகாலம் முடிந்ததும்
பறந்தோடும்!
பறவைகளுக்கு உள்ள
பண்பு
வேலை தேடிவரும்
வெளியாருக்கு இல்லை!

வெள்ளையனே வெளியேறு
என்று சொன்ன இதே உதடு!
இந்தியே.. வெளியேறு!
இந்தியாவே.. வெளியேறு!
என்றும் சொல்லும்!..

இராபர்ட்கிளைவ் துப்பாக்கி
எங்களை இந்தியாவில்
வலுக்கட்டாயமாக கட்டி வைத்தது!
நாங்கள் கயிறு அவிழ்த்து
தமிழ்நாட்டை
கைப் பிடித்து கூட்டி வரும் நாள்
நெருங்கிவிட்டது!
இந்தியா விரைவில் இளைத்து விடும்!

நாங்கள் தற்காத்து கொள்வது
தீவரவாதமன்று
அறம்!

அவனவன் நாட்டில்
அவனவன் வாழ்க!
அவனவன் விடுதலை
அவனவன் கையில்!

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.