ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

‘Pursuit of Justice’ - ஆங்கில ஆவணப்படம் வெளியீடு!



தமிழீழ இனப்படுகொலையைப் பேசும். ‘Pursuit of Justice’ - ஆங்கில ஆவணப்படம் வெளியீடு! 

தமிழின உணர்வாளரும் தமிழ்த் திரைஇயக்குனருமான திரு. வ.கெளதமன் இயக்கத்தில், தமிழீழப் படுகொலையை விளக்கும் ‘Pursuit of Justice’ - என்ற ஆங்கில ஆவணப்படம், இன்று உலகெங்கும் வெளியிடப்பட்டது.

சென்னை வடபழனி ஏ.வி.எம் திரையரங்கில், அதன் வெளியீட்டு விழா இன்று (25.03.2015) மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், உலக நாடுகளின் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கூடும் ஐ.நா. அவையில் இப்படம் திரையிடப்பட்டது.

நிகழ்வின் தொடக்கத்தில், ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர். திரு. சத்யராஜ், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் திரு. ஜவாஹிருல்லா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த. வெள்ளையன், இயக்குநர் வெ. சேகர், ஓவியர் திரு. வீரசந்தானம், திருவாட்டி அற்புதம் அம்மையார், தோழர் டி.எஸ்.எஸ். மணி உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைவர் தோழர் பெ. மணியரசன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

நிகழ்வை இயக்குனர் வ. கௌதமன் மற்றும் தயாரிப்பாளர் த. மணிவண்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்த இந்நிகழ்வில், திரளான தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.