ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

செங்கிப்பட்டியில் எழுச்சியுடன் நடைபெற்ற ஈகி ந. வெங்கடாச்சலம் நினைவேந்தல்! பொதுக்கூட்டம்





மனித உரிமைப் பாதுகாப்பு - சாதி ஒழிப்புத் தளங்களில் தஞ்சை வட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டு, சாதி ஆதிக்க வெறியர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஈகி ந. வெங்கடாச்சலம் அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, செங்கிப்பட்டியில் நேற்று (21.09.2015) மாலை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை வட்டம் - செங்கிப்பட்டி கடை வீதியில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் பி. தெட்சிணாமூர்த்தி தலைமையேற்றார்.

மக்கள் பாடகர் மதுரைச் சந்திரன் அவர்களின் நாட்டுப்புற இசை நிகழ்வும், மாதுரான் புதுக்கோட்டை அம்பேத் அவர்களின் சலங்கை மேளம் தப்பட்டமும், காண்போரை எழுச்சி கொள்ளச் செய்தது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ. இராசேந்திரன், தோழர் நா. வைகறை, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் ஆ. தேவதாசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ. கருணாநிதி உள்ளிட்டோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.

நிறைவில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புரையாற்றினார். முன்னதாக, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று, தொடர்ந்து அமைப்புப் பணியாற்றி வரும் மூத்த தோழர்களை, தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் சிறப்பு செய்து பாராட்டினார்.

த.தே.பே. கிளைச் செயலாளர் தோழர் ப. மலைத்தேவன் நன்றி கூறினார்.

கூட்டத்தில், திரளான தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.