சென்னைப் பல்கலைக்கழக ஊழல் - முறைகேடுகள்! பேராசிரியர் மணிவண்ணன் துறைத்தலைவர் பதவிபறிப்பு!
சென்னைப் பல்கலைக்கழக ஊழல் - முறைகேடுகள்! பேராசிரியர் மணிவண்ணன் துறைத்தலைவர் பதவிபறிப்பு! சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் - முறைகேடுகளைக் கண்டித்தும், ஊழல் துணைவேந்தர் தாண்டவனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், பேராசிரியர் ராமு. மணிவண்ணன் அவர்களை மீண்டும் துறைத் தலைவராகப் பணியில் அமர்த்தக் கோரியும், இன்று (03.09.2015) மாலை, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழ்த் தேச மக்கள் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழர் முன்னிணி ஆகிய அமைப்புகள் இணைந்து, இவ் ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன் தலைமையேற்றார்.
தமிழர் தேசிய முன்னணித் தலைவர் அய்யா பழ. நெடுமாறன் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி அனீபா, தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் தியாகு, பேராசிரியர் சிவக்குமார், மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சித் தலைவர் தோழர் துரை. சிங்கவேல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு. குபேரந்திர குணபாலன், அறிவாயுதம் ஆசிரியர் வழக்கறிஞர் அமர்நாத், தமிழ்நாடு மாணவர் நடுவம் தோழர் ஜோ. பிரிட்டோ, தமிழ்நாடு மாணவர் இயக்கத் தோழர் இளையராஜா, தமிழ் இளைஞர்கள் மாணவர்கள் கூட்டமைப்பு தோழர் பிரபாகரன், மாற்றம் மாணவர் இளையோர் இயக்கம் தோழர் பிரதீப்குமார், தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு தோழர் செம்பியன், சென்னைப் பல்கலைக்கழக மாணவத் தோழர் ராஜ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி கண்டன உரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், தென்சென்னை தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் வெற்றித்தமிழன் உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.
தமிழக அரசே!
சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தில் நடைபெறுகின்ற ஊழல் - முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துக!
முறைகேடுகளுக்குக் காரணமான துணைவேந்தர் தாண்டவனை பதவி நீக்கம் செய்திடுக!
பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்களை மீண்டும் அரசியல் ஆய்வுத் துறைத் தலைவராக பணியமர்த்து!
அரசியல் அறிவியல் துறையை முடக்க 130 மாணவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கிய நடவடிக்கையைக் கைவிடுக!
மக்கள் நலனுக்காகப் போராடி மாணவர்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிடுக!
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment