அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகிட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தடையா ..? திருச்சியில் நாளை (02.01.2016) மாலை த.க.இ.பே. சார்பில் கருத்தரங்கம்!
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகிட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தடையா ..? திருச்சியில் நாளை (02.01.2016) மாலை த.க.இ.பே. சார்பில் கருத்தரங்கம்!
“அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகிட உச்ச நீதிமன்றத் தீர்ப்புத் தடையா?” என்ற தலைப்பில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், நாளை (02.01.2016) மாலை, திருச்சியில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள இரவி சிற்றரங்கில் நடைபெறும் இக்கருத்தரங்கிற்கு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி செயலாளர் பாவலர் நா. இராசாரகுநாதன் தலைமையேற்கிறார். முன்னதாக, தோழர் கே. இனியன் வரவேற்புரையாற்ற, பாவலர்கள் மூ.த. கவித்துவன், பொறியாளர் ப. மாதேவன் ஆகியோரின் பாவீச்சு நடைபெறுகின்றது.
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், “செந்தமிழ்வேள்விச் சதுரர்” திரு. மு.பெ. சத்தியவேல் முருகனார் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். நிறைவில், திரு. ப. அன்புச்செல்வன் நன்றி நவில்கிறார்.
இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், ஆன்மிகச் சமூக நீதி ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
தொடர்புக்கு: 94435 32268, 94439 75784
செய்தித் தொடர்பகம்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.
பேச: 9841604017, 7667077075
Leave a Comment