ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மாபெரும் மக்கள் கலைஞர் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் !

மாபெரும் மக்கள் கலைஞர் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் !
நாட்டுப்புற இசைக் கலைஞரும் புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியருமான முனைவர் ஏ.குணசேகரன் உடல்நலக் குறைவால் 17.1.2016 அன்று புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

நீரிழிவு நோயின் காரணமாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அண்மையில் சிறுநீரகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பின்னர் ஏற்பட்ட தொற்றின் காரணமாக அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.

நாட்டுப்புறக் கலை மரபை நவீன நாடக அரங்கில் வெளிப்படுத்தியவர் தோழர் கே.ஏ. குணசேகரன். இடதுசாரி மேடைகளைத் தனது ஆற்றல்மிகு குரலால் எழுச்சிகொள்ள வைத்தவர். தமிழ்நாட்டில் தலித் நிகழ்த்துக் கலை அரங்கத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் தனித்துவ மிக்க கலைஞரான கே.ஏ.குணசேகரன். ”தன்னானே” என்ற இசைக்குழுவை உருவாக்கி அதன் வழி மேடைகள் தோறும் எழுச்சிப் பாடல்களை வார்த்தெடுத்தவர்.

தவில்,உடுக்கை, நாதசுவரம், போன்ற தமிழரின் பாரம்பரிய இசைக்கருவிகளை இவரது குழு இசைக்க ஆரம்பத்தால், மேடை புத்துணர்ச்சி பெறும். எப்போதுமே அரங்கத்தின் முன்னே குழுமியிருக்கும் மக்கள் கூட்டத்தை வசியப்படுத்தும் வலிமை இவரின் குரலுக்கு உண்டு. சமற்கிருத அரங்கவியலுக்கு மாற்றாக மண்ணின் மக்களுக்கான அரங்கவியலை உருவாக்க பெரும் பாங்காற்றியவர்.

சத்திய சோதனை, அறிகுறி, தொடு, மாற்றம், விருட்சம், பலியாடுகள், உள்ளிட்ட பல்வேறு நாடங்களை உருவாக்கியவர். இதில் “மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என்ற பாடலும் 'பலி ஆடுகள்' நாடகமும் மிக முக்கியமானவையாகும்.

தமிழர் பண்பாட்டு கலை இயக்கியத்தை நாடகங்கள் வழியாகவும், பாடல்கள் வழியாகவும், இறுதிவரை உயர்த்திப்பிடித்து ஒரு புதிய எழுச்சியை உருவாக்கிய தமிழ் மண்ணின் ஒப்பற்ற கலைஞராய் வாழ்ந்த கே. ஏ.குணசேகரன் அவர்களுக்கு தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

வீரவணக்கம்!

புதுச்சேரியில், 18.01.2016 அன்று காலை நடைபெற்ற அய்யாவின் இறுதி வணக்க நிகழ்வில், தமிழ்த் தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் தோழர் வேல்சாமி, தோழர்கள் வெ. கார்த்திகேயன், க. மதியழகன், ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தித் தொடர்பகம்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.

பேச: 9841604017, 7667077075
முகநூல்: www.facebook.com/tha.ka.e.pe
ஊடகம்: www.kannottam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.