ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பாமனி ஊராட்சியில் நடக்கும் ஊழல் - முறைகேடுகளின் மீது குற்றவியல் நடவடிக்கைக் கோரி ஆர்ப்பாட்டம்..!


திருத்துறைப்பூண்டி ஒன்றியம் - பாமனி ஊராட்சியில் நடக்கும் ஊழல் - முறைகேடுகளின் மீது  குற்றவியல் நடவடிக்கைக் கோரி ஆர்ப்பாட்டம்..!

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் - பாமனி ஊராட்சியில் நிலவும் ஊழல் முறைகேடுகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, நேற்று (07.01.2016) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக உழவர் முன்னணி தோழர் ச. கோவிந்தசாமி தலைமையேற்றார். ஆம் ஆத்மி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் தோழர் வே. இராமதாசு, காவிரி உரிமை மீட்புக் குழு திரு. இரா. தனபாலன், இலஞ்ச ஊழல் எதிர்ப்பு மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் வழக்கறிஞர் இ. தனஞ்சேயன், தோழர் சித்திரைச் செல்வன், மின் இறைமைத் திட்ட விவசாயிகள் சங்கத் தோழர் பழனிகுமார் உள்ளிட்டோர் கண்டண உரையாற்றினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்க ஒன்றியச் செயலாலர் தோழர் சிவ வடிவேலு, மூத்த தோழர் இரா. கோவிந்தசாமி, தோழர் தனபாலன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.