காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் கைது! 03.10.2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் கைது! 03.10.2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள இந்திய அரசைக் கண்டித்து, நேற்று (03.10.2016) தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்தனர்.
குடந்தை தோழர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை சொந்த பிணையில் விடுதலை செய்தனர். இதனையடுத்து, இரண்டாம் நாளாக இன்றும் நரேந்திரமோடி உருவபொம்மையை எரித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மன்னார்குடி
மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், பேருந்து நிலையம் அருகில், நரேந்திர மோடியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளர் திரு. கலைச்செல்வம் உள்ளிட்ட தோழர்களை காவல்துறையினர் கைது மன்னார்குடி காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.
புளியங்குடி
நெல்லை மாவட்டம் - புளியங்குடியில், பேருந்து நிலையம் அருகில் இன்று காலை, தமிழ்த்தேசியப் பேரியக்க புளியங்குடி அமைப்பாளர் தோழர் க. பாண்டியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், வட்டாரப் பொறுப்பாளர் தோழர் முத்துப்பாண்டியன், இராயகரி செயலாளர் தோழர் சொக்கையாபாண்டியன், கடையநல்லூர் வட்டாரப் பொறுப்பாளர் தோழர் முத்துப்பாண்டியன், மகளிர் ஆயம் அமைப்பாளர் தோழர் மு. துரைச்சி உள்ளிட்டோர் நரேந்திர மோடியின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மதுரை - தென்காசி மையச்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட தோழர்களை தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்து, அவர்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம் - திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்க ஒன்றியத் துணைச் செயலாளர் தோழர் சை. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் ப. சிவவடிவேலு, தமிழக உழவர் முன்னணி கோட்டூர் ஒன்றியச் செயலாளர் திரு. இரா. தனபாலன், உழவர் முன்னணி பொதுக்குழு உறு்பபினர் திரு. சா. கோவிந்தசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.
புதுச்சேரி
புதுச்சேரி இராசா திரையரங்கம் அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழர் தேசிய இயக்கச் செயலாளர் திரு. இரா. அழகிரி, உலகத் தமிழ்க் கழகம் திரு. தமிழ் உலகன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் திரு. செகன்னாதன், தமிழர் களம் புதுச்சேரி செயலாளர் தோழர் கோ. அழகர், தமிழ் தமிழர் இயக்கப் பொறுப்பாளர் திரு. மகேசு, பெரியார் அறிவியல் மன்றத் தோழர் சடகோபன், நண்பர்கள் தோட்டம் திரு. திருநாவுக்கரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் தோழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒசூர்
ஒசூர் காந்தி சிலை முச்சந்தியில் இன்று காலை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து தலைமையில், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவைச் செயலாளர் தோழர் முத்துவேல், தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் கதிரவன், மகளிர் ஆயம் தோழர் அபிராமி உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள், நரேந்திர மோடியின் உருவபொம்மையை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி பிரிவு.
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
Leave a Comment