தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா ! சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட்தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கல் !
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா ! சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட்தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கல் !
தமிழினத்தின் மரபுவழிப்பட்ட மறமும் - மானமும் மங்கவில்லை - மறையவில்லை என்பதை நிலக்கோளம் அறிய நிலை நாட்டிய, தமிழீழ விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (26.11.2016) காலை 7 மணிக்கு, சென்னை எண்ணூரில், தமிழீழ ஆதரவுத் தொழிலாளர் இயக்கம் ஒருங்கிணைப்பில், தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வுக்கு, தமிழீழ ஆதரவுத் தொழிலாளர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திரு. வந்தியத்தேவன் தலைமையேற்றார். திரு. விஜயகுமார் (ம.தி.மு.க. தொழிலாளர் அணி), தோழர் நெடுமாறன் (தொழிலாளர் சனநாயகப் பேரியக்கம்) உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளரும், தொழிலாளர் சனநாயகப் பேரியக்கத் தலைவருமான தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள், தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த. வெள்ளையன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் தோழர் வன்னியரசு ஆகியோர் தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.
முன்னதாக, “சிந்தனைச் சிற்பி” ம. சிங்காரவேலர், அண்ணல் அம்பேத்கர், அண்ணா ஆகியோரின் சிலைகளுக்குத் தலைவர்கள் மாலை அணிவித்தனர். நூற்றுக்கணக்கானத் தொழிலாளர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பிறந்தநள் வாழ்த்துகள்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
Leave a Comment