ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. புதுச்சேரியில் 07.07.2017 அன்று மாலை.. காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்!

கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. புதுச்சேரியில் 07.07.2017 அன்று மாலை.. காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்! 
 
கதிராமங்கலத்தில் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியக் காவல்துறையினரைக் கண்டித்தும், புதுச்சேரியின் காரைக்கால் - பாகூர் பகுதிகளில் பெட்ரோல், மீத்தேன் உள்ளிட்ட ஐட்ரோகார்பன்களை எடுக்கக் கூடாதென வலியுறுத்தியும், வரும் வெள்ளியன்று (07.07.2017) புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரிலுள்ள சுதேசி மில் அருகில், 7.7.2017 அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இவ் ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கம், நாம் தமிழர் கட்சி, உலகத் தமிழ்க் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் பங்கேற்கவுள்ளனர்.

புதுச்சேரி பொது மக்களும், தமிழின உணர்வாளர்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு


பேச: 76670 77075, 94432 74002
www.kannotam.com
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.