ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஓவியர் வீரசந்தானம் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு!

ஓவியர் வீரசந்தானம் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு!
 "தமிழ்த்தேசியப் போராளி" ஓவியர் வீரசந்தானம் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நகழ்வு, 31.07.2017 மாலை சென்னையில் நடைபெற்றது.

சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மாலை நடைபெற்ற நிகழ்வில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, ஓவியர் வீரசந்தானம் அவர்களின் படத்தைத் திறந்து வைத்தார். உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன் முன்னிலை வகித்தார். இயக்குனர் வ. கவுதமன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். முன்னதாக வீரசந்தானம் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.

நிகழ்வில், பாவலர்கள் அறுவுமதி, தஞ்சாவூர்க் கவிராயர், கவிபாஸ்கர் உள்ளிட்ட பாவலர்களும், நடிகர் சிவக்குமார், கலை இயக்குநர் ஜெ.கே. ஓவியர்கள் ட்ராட்ஸ்கி மருது, விஸ்வம், கீதா, இயக்குநர்கள் வசந்தபாலன், புகழேந்தி தங்கராஜ், எழுச்சிப் பாடகர் புதுவை செயமூர்த்தி, ஊடகவியலாளர் கார்ட்டூனிஸ்ட் பாலா உள்ளிட்ட பல்வேறு துறை கலைஞர்களும் பங்கேற்று நனைவேந்தல் உறையாற்றினர்.

அதன் பிறகு நடந்த அரசியல் தலைவர்கள் உரையரங்கில், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ. நெடுமாறன், இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி மூத்த தலைவர் தோழர் இரா. நல்லக்கண்ணு, தமிழுரிமைக் கூட்டமைப்பித் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஓருங்கிணைப்பாளர் திரு. சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், தந்தை பெரியார் தி.க. பொதுச் செயலாளர் தோழர் கோவை கு. இராமகிருட்டிணன், பேராசிரியர் மு. நாகநாதன, த.கே.வி.இ. தலைமைக்குழு உறுப்பினர் தோழர் தியாகு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்ச, இயக்கத் தலைவர்கள் நினைவேந்தல் உரையாற்றினர்.No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.