ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பிப்ரவரி 25 அன்று தமிழ்நாடெங்கும்... “தமிழர் தற்காப்பு அரசியல்” தமிழ்த்தேசிய நாள் சிறப்புக் கூட்டங்கள்!

பிப்ரவரி 25 அன்று தமிழ்நாடெங்கும்... “தமிழர் தற்காப்பு அரசியல்” தமிழ்த்தேசிய நாள் சிறப்புக் கூட்டங்கள்!
இன்றைக்குப் பலராலும் பேசப்படும் “தமிழ்த்தேசியம்” என்ற அரசியல் முழக்கம், 1990 பிப்ரவரி 25 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்து நடத்திய “தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாட்டில்” தெளிவான வரையறுப்புகளோடு முன்வைக்கப்பட்டது. அம்மாநாடு, தமிழ்நாட்டு அரசியலில் புதிய திசைவழியைக் காட்டியது! 

அந்நாளை “தமிழ்த் தேசிய நாள்” என ஒவ்வொரு ஆண்டும் பேரியக்கக் கொடியேற்றம், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்வுகளின் வழியே நினைவு கூர்ந்து வருகின்றோம். 

இன்று, தமிழ்நாட்டு அடிப்படை அரசியலின் நிகழ்ச்சி நிரலை முன் வைப்பதாக “தமிழ்த்தேசியம்” வளர்ந்து வரும் சூழலில், வரும் 25.02.2018 அன்று தமிழ்த்தேசிய நாள் கொடியேற்ற நிகழ்வுகளும், சிறப்புப் பொதுக் கூட்டங்களும் “தமிழர் தற்காப்பு அரசியல்” என்ற தலைப்பில் தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ளன.

காவிரி உரிமை மறுப்பு, வெளியார் திணிப்பு, அணுஉலை - மீத்தேன் - நியூட்ரினோ - கெயில் - சாகர் மாலா - நீட் திட்டங்கள் திணிப்பு என பறிக்கப்பட்டுக் கொண்டுள்ள தமிழர்களின் வாழ்வாதாரங்கள் குறித்து பரந்துபட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. 

இந்நிகழ்வுகளில், தமிழின உணர்வாளர்களும், தமிழ்த்தேசிய ஆற்றல்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.