கவிபாஸ்கர் தந்தையார் மறைவுக்கு - ஐயா பெ. மணியரசன் இரங்கல்!
கவிபாஸ்கர் தந்தையார் மறைவுக்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் இரங்கல்!
தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவரும் திரைப்படப் பாடலாசிரியருமான பாவலர் கவிபாஸ்கர் அவர்களின் தந்தையார். ஐயா கு. சுப்பிரமணியன் அவர்கள் (அகவை 72) உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தவாறே சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் 11.10.2020 ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் நள்ளிரவு 1.30 மணிக்கு தஞ்சை மாவட்டம் நெய்வாசல் கிராமத்தில் தமது இல்லத்தில் காலமானார்.
திரு. சுப்பிரமணியன் – திருவாட்டி மயிலம்பாள் இணையர் தங்கள் மகன்கள் இரவீந்திரன், கவிபாஸ்கர் மகள் பூமாது ஆகியோரை நன்கு படிக்க வைத்தனர். பண்பான முறையில் வளர்த்தனர்.
ஐயா சுப்ரமணியன் அவர்கள் மறைவிற்குத் துயரத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன். துயருற்றிருக்கும் இல்லத்தார் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு: இறுதி ஊர்வலம் இன்று 11.10.2020 மாலை 5 மணிக்கு அவர்கள் இல்லத்திலிருந்து புறப்படும்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment