ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்த்தேசியப் போராளி தோழர் கோவேந்தனுக்கு வீரவணக்கம் ஐயா பெ. மணியரசன் இரங்கல்!



தமிழ்த்தேசியப் போராளி 
தோழர் கோவேந்தனுக்கு வீரவணக்கம்

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
 ஐயா பெ. மணியரசன் இரங்கல்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினரும், தமிழர் கண்ணோட்டம் மாத இதழ், அலுவலகப் பொறுப்பாளருமான தோழர் வி.கோவேந்தன் என்கிற கோபிநாத் அவர்கள் உடல் நலம் இன்றி தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று (25.08.2021) பிற்பகல் காலமான பெரும் துயரச் செய்தி பேர் இடியாய் விழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நோய்க்கான சிகிச்சை பெற்று வந்த தோழர் கோவேந்தன் காலமானது தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்குப் பேரிழப்பாகும்.
முதுகலைப்  பட்டம் பெற்ற கோவேந்தன் கணிப்பொறி செயல்பாடுகளிலும் போராட்ட ஒருங்கிணைப்புகளிலும் சிறந்து விளங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழுநேரச் செயல்பாட்டாளராகப் பணியாற்றினார். தோழருடைய இழப்பு சொல்லொணாத் துன்பம் தருகிறது.
தோழர் கோவேந்தன் அவர்களுடைய இறுதி ஊர்வலம் அவருடைய சொந்த ஊரான கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரம் ஒன்றாவது வார்டு சிவ சண்முகம் தெருவில் உள்ள அவர்களது இல்லத்தில் இருந்து நாளை (26.08.2021) வியாழக்கிழமை பகல் 12.00 மணிக்குப் புறப்படும் என்பதைத் துயரத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ்த்தேசிய உணர்வு நிரம்பிய தோழர் கோவேந்தன் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய பெற்றோருக்கும் அன்பு உடன் பிறப்புகளுக்கும் ஆருயிர் துணைவியார் செந்தாமரை அவர்களுக்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெ. மணியரசன்
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.