ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"தமிழீழம் விடுதலை, தமிழ்நாடு விடுதலைக்கு வாய்ப்பு உண்டா? அதற்கான முயற்சிகள் எப்படி இருக்க வேண்டும்?"


 "தமிழீழம் விடுதலை, தமிழ்நாடு விடுதலைக்கு வாய்ப்பு உண்டா? அதற்கான முயற்சிகள் எப்படி இருக்க வேண்டும்?" 

========================== 

"இரண்டுக்குமே வாய்ப்பு உண்டு. குறிப்பிட்ட கால எல்லையை இதுக்கு எல்லாம் சொல்ல முடியாது. அதற்கான சர்வதேச சூழ்நிலை, உள்நாட்டு சூழ்நிலை உருவாகணும். மக்கள் முயற்சிகள் எடுக்கணும். நாங்க சொல்றது தமிழ்நாட்டு விடுதலைக்குத்தான் நாம பாடுபடணும். நம்ம வேலைத்திட்டம் அதுதானே தவிர, ஈழ விடுதலை என்பதற்கு நாம ஆதரவுதான் அளிக்கணும். நாம் ஈழத்துக்கு முதன்மை சக்தி கிடையாது. ஈழவிடுதலைக்கு ஈழத் தமிழர்கள்தான் முதன்மை சக்திகள். அவர்களுடைய பலம்  அவர்களுடைய போராட்டங்களைச் சார்ந்துதான் தீர்மானிக்கப்படும். நாம துணை ஆதரவு சக்தி. நாங்க என்ன சொல்றோம்னா ஈழ விடுதலைக்கு ஆயுதப் போராட்டம் எல்லாம் நடத்தாதிங்க இப்போ. அது நடத்தி உச்சத்தில் போயி ஒரு பாதிப்பு, பின்னடைவு எல்லாம் வந்துருக்கு. அது இருக்கட்டும். மக்கள் திரள் போராட்டம் நடத்துங்க. இராணுவத்தை திரும்பப் பெறணும், குடிமை உரிமைகள் வேணும். இதற்கான போராட்டங்கள் நடத்தும்போது அவங்க அனுமதிக்காமல் இருக்கலாம். துப்பாக்கிச்சூடு நடத்தலாம். அதுலே சில சாவுகள் வந்தா வரட்டும். நம்ம ஊருல வர்றதில்லையா, அந்த மாதிரி சாவுகள்? சில பேரை ஜெயில்ல புடுச்சுப் போடலாம் பல வருசங்களா. அந்த மாதிரி வரலாம். அது ஒரு சர்வதேச தாக்கத்தை உண்டாக்கும். 


மக்கள் திரண்டு மக்கள் திரள் போராட்டங்கள் நடத்தணும். புதிய தலைமை அதுக்கு உருவாகணும். புதிய தலைமை என்பது சம்பந்தர் எல்லாம் தலைமை தாங்க முடியாது. முடிஞ்சு போச்சு. அவங்க எல்லாம் இரண்டு பேருக்கும் நடுவிலே பேசிக்கிட்டு இருக்கறவங்க. இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் நடுவிலே. புதிய தலைவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் தலைமை தாங்கி புதிய பாதையிலே மக்கள் எழுச்சிப் போராட்டங்களைக் கட்டமைச்சு வரும்பொழுது அதனூடாக கருத்து வாக்கெடுப்பு கோரணும். 


ஐ.நா., மேற்பார்வையிலே கருத்து வாக்கெடுப்பு நடத்தணும் என்பதை வலியுறுத்திக் கொண்டே வரணும். மக்கள் அந்தக் கருத்திலே ஆதரவாத்தான் இருக்காங்க. எழுச்சி வரவர சர்வதேச சூழ்நிலையில் மாற்றம் வரும்பொழுது கருத்து வாக்கெடுப்புக்கான வாய்ப்பு வரும். அப்படித்தான் விடுதலை கிடைக்கும்னு நம்புகிறேன். தமிழ்நாட்டுத் தமிழர்கள் தொடர்ந்து ஆதரவு போராட்டங்கள் நடத்தணும். ஆதரவு குரல்கள் எழுப்பணும்". 👍


ஐயா பெ.மணியரசன் அவர்கள், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம். 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.