ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதியால் கிடைக்கப் பெறும் பயன்கள் - கருத்தரங்கம் 26-2-2023

புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை சார்பில் புதுச்சேரியில் 26-2-2023 அன்று மாலை “புதுச்சேரிக்குத தனிமாநில தகுதியால் கிடைக்கப்பெறும் பயன்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் பற்றி தமிழத் தேசியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் க. அருணபாரதி:


மனநிறைவான கருத்தரங்கம்
===========================!
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!” என தமிழர்களின் மொழிஇன உணர்வை தம் பாடல்கள் வழியே தட்டியெழுப்பிய - உணர்ச்சிப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் புதுச்சேரியின் மிக முக்கிய அடையாளம்! அவரது பெயரன் ஐயா கோ. செல்வம் அவர்கள், பாவேந்தரின் வழியில் தமிழ் - தமிழர் உயர்வுக்காக “புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை” என்ற அமைப்பை நடத்தி செயல்பட்டு வருகிறார்.
அவ்வமைப்பின் சார்பில், நடைபெறும் கருத்தரங்கத்தில், புதுச்சேரிக்குத் தனிமாநிலத் தகுதி தேவை என்பது குறித்து நான் கருத்துரையாற்ற வேண்டும் என ஐயா செல்வம் அவர்கள் கேட்டுக் கொண்டது எனக்கு நெகிழ்வைத் தந்தது. மாநிலத் தகுதி குறித்து நான் இயற்றிய நூலைப் படித்த அவர், அதை பிறருக்கும் சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தில் இந்த நல் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். இந்நல்வாய்ப்பே ஒரு பெறும்பேறுதான்!
அதன்படி, இன்று மாலை - புதுச்சேரி வைசியாள் வீதியிலுள்ள ஜோதி கண் மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் நடைபெற்ற கருத்தரங்கில், விளக்கப் படங்களுடன் - "புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதியால் கிடைக்கப் பெறும் பயன்கள்" என்ற தலைப்பில் 7 மணிக்குத் தொடங்கி 8.30 மணி வரை கருத்துரையாற்றினேன். அதன்பின் 9 மணி வரை கேள்வி பதில்கள் இடம்பெற்றன. பலரும் தங்கள் ஐயங்களை வினாவாக எழுப்பி தெளிவு பெற்றதாக உணர்ந்தேன். புதுச்சேரி மாநிலத் தகுதி குறித்து நான் எழுதிய நூலை பலரும் வாங்கிச் சென்றனர்.
உரை முடிந்த பிறகு, ஐயா செல்வம் அவர்களுடன் எங்கள் வீட்டு மழலைச் செல்வங்கள் இனியன், நிறைமதி, சாய் கண்மணி மற்றும் தங்கை இராதிகா ஆகியோருடன் குழுவாகப் படமெடுத்துக் கொண்டோம்.









பாவேந்தர் வழியில் தொடர்ந்து, தமிழுக்கும் தமிழர்க்குமாக உழைப்போமென உறுதியெடுத்துக் கொண்டோம்!
தோழமையுடன்,
க. அருணபாரதி

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.