சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட குடும்பத்துக்கு சமத்துவ புறத்தில் வீடு இல்லை .சமூக நீதி பேசும் திராவிட மாடல் அரசின் சாதனை
===============
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட குடும்பத்துக்கு சமத்துவ புறத்தில் வீடு இல்லை .சமூக நீதி பேசும் திராவிட மாடல் அரசின் சாதனை
===============
கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம் , தொளார் பெரியார் நினைவு சமத்துவபுர வீடுகள் மொத்தம் 100 ஆகும். இதில் 78 வீடுகள் கட்டப்பட்டு,78 நபர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் 22 வீடுகள் கட்டப்படாமல் இருக்கிறது. இதில் வீடு, நிலம் உள்ளவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது .ஒரே குடும்பத்தில் இரண்டு மூன்று பேருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது .மேலும் 15 குடும்பங்களுக்கு மேல் தகுதி இருந்தும் அவர்களுக்கு வீடு வழங்கப்படவில்லை .
இதில் குறிப்பாக ராஜேஸ்வரி( செல்லப்பெருமாள்- கண்ணாயிரம் o.கீரனூர் காலனி ) -கௌதமன்( கருப்புசாமி- சின்னப்பொண்ணு தொளார் கொல்லத்தங்குறிச்சி ) இவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். கௌதமன் வன்னியர் வகுப்பை சார்ந்தவர். ராஜேஸ்வரி பட்டியல் குல வகுப்பை சார்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு சாலை ஓரத்தில் குடிசை போட்டு வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் ( கவிராஜன் வயது14 ரிஷி வயது13)ஒரு பெண் குழந்தை(பூமிகா வயது 10) சில நாளுக்கு முன்பு கௌதமன் விபத்தில் சிக்கி கால் நடக்க முடியாமல் சாலை ஓரத்தில் மிதிவண்டி பஞ்சர் கடை வைத்து பிழைத்து வருகிறார்.
ராஜேஸ்வரி அவர்கள் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டு மருத்துவம் செய்து கொண்டிருக்கிறார் .நெருக்கடியான நிலையில் இந்த குடும்பம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. உறவுக்காரர்கள் கைவிட்ட நிலையில், ஊர் மக்களுடைய ஆதரவும் இல்லை. அவர்களுக்கு சொந்தவீடு இல்லை .
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு தொளார் பெரியார் சமத்துவபுரத்தில் வீடு வேண்டி விண்ணப்பத்தை கொடுத்து இருக்கிறார்கள். அதன் பிறகு பல முறை மனு கொடுத்தும் அவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை. இந்த செய்தி தினத்தந்தி நாளேடுகளிலும், குமுதம் ரிப்போர்ட்டர் மாத இதழிலும் செய்தி வெளியானது .இதேபோல் தோழா மீடியா என்ற வலையொலியில்(youtube ) இவர்களுடைய அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது .
இதனை அறிந்த இடத்துக்குச் சொந்தக்காரர் வீட்டை காலி செய்து வெளியேறுமாறு கூறிவிட்டார். யாரும் உதவ முன் வராத நிலையில் சமூக நீதிப் பேசும் திராவிட மாடல் அரசு தான் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் சமத்துவபுரத்தில் அவர்களுக்கு தகுதி அடிப்படையில் வீடு வழங்கி அவர்களை வாழ வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் சமத்துவ புரத்தில் முறைகேடாக வழங்கிய வீடுகளை ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் சார் ஆட்சியர் அவர்களையும் ,தமிழ்நாடு
அரசையும் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழ் பேசிய பேரியக்கம் தொடர்ந்து போராடி நீதியை பெற்றுத்தரும்
இந்நிகழ்வில் தமிழ் தேசிய பேரியக்க துணை தலைவர் க. முருகன், தலைமையில் தமிழ்த் தேசிய பேரிக்க தலைமை செயற்குழு உறுப்பினர் மா. மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் அரா
கனக சபை, சாத்துக்குடல் கிளைச் செயலாளர் தே. இளநிலா. காரையூர் கிளைச் செயலாளர் சசிகுமார், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோகுல கிறிஸ்டிபன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன், பாதிக்கப்பட்ட ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு விருத்தாசலம் சார் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.
இணைப்பை சொடுக்குக.
https://youtu.be/mHsT3qJchb0?si=HDlsptPDZgveGxUV
க. முருகன் துணைத்தலைவர் தமிழ்த்தேசியப் பேரியக்கம்
9443904817
Leave a Comment