கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய் உடைப்பு ஏற்பட்டு தீப்பற்றி எரிகிறது! அக்கிராமத்திலுள்ள ஓ.என்.ஜி.சி. குழாய்கள் அனைத்தையும் செயல்படாமல் உடனடியாக முடக்க வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சருக்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில், வனதுர்க்கை அம்மன் கோயில் அருகிலுள்ள இன்று(30.06.2017) காலையிலிருந்து பெட்ரோலிய குழாய்களிலிருந்து உடைப்பு ஏற்பட்டு, ஆறு இடங்களில் கச்சை எண்ணெய் வெள்ளம் போல் வழிந்து ஓடுகிறது. இதனால் சில இடங்களில் கச்சா எண்ணெய் தீப்பற்றி எரிகிறது!

இதனையடுத்து, அவ்வூர் மக்களும் பக்கத்து ஊர் மக்களும், பீதியில் இருக்கின்றனர். காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, கதிராமங்கலம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து எண்ணெய் மற்றும் எரிவளிக் குழாய்களும் செயல்படாமல் முடக்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
WWW.Kannotam.com
www.Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

Related

பெ. மணியரசன் 4674766328452389352

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item