ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மரபீனி மாற்றுத் தொழில் நுட்பம்

மரபீனி மாற்றுத் தொழில் நுட்பம்
தமிழக வேளாண்மையை அழிக்க வரும் பி.ட்டி நெல்

ஒரு உயிரிலிருந்து மரபீனிகளைப் பா¢த்து எடுத்து, வேறொரு உயி¡¢க்குள் செலுத்தி அந்த உயி¡¢க்குச் சில புதிய குணங்களை உருவாக்கும் முயற்சிதான் மரபீனி மாற்றுத் தொழில் நுட்பம்.

நெல்லுக்குப் பகையான சில பூச்சிகளைக் கொல்லும் திறன் சில பாக்டீ¡¢யாக்களுக்கு இருக்கின்றன. இந்தத் தன்மைக்கு அந்த பாக்டீ¡¢யாவில் இருக்கும் சில மரபீனிகளே காரணம். இந்த மரபீனிகளை நெல்லுக்குள் செலுத்தினால் நெற்பயிர்கள் தங்களைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்லும் அளவுக்கு தற்காப்புத் திறன் பெற்றவையாக மாறிவிடும் என்று எதிர்பார்த்தனர். அவ்வாறு உருவான ஒன்றுதான் பி.ட்டி நெல் ஆகும்.

இதற்கு அடிப்படையாக இருப்பது பேசில்லஸ் து¡¢ஞ்செனிசிஸ் என்ற பாக்டீ¡¢யா ஆகும். இதனைத்தான் சுருக்கமாக பி.ட்டி என்கின்றனர். பேசில்லஸ் து¡¢ஞ்செனிசிஸ் குர்ஸ்டாகி என்ற பாக்டீ¡¢யா உருவாக்கும் Cry 1Ab, Cry 1Ac என்ற நஞ்சுகள் நெல்லுக்குப் பகையான தண்டு துளைப்பான், இலை சுருட்டுப் புழு ஆகியவற்றை அழிக்கவல்லவை.

பேசில்லஸ் து¡¢ஞ்செனிசிஸ் குர்ஸ்டாகி பாக்டீ¡¢யாவிலிருந்து மரபீனியைப் பி¡¢த்து, நெல் விதைக்குள் செலுத்தினால் உருவாகும் புதிய நெல் விதையிலிருந்து முளைக்கும் நெற்பயிர் மேற்சொன்ன நஞ்சுகளைச் சுரந்து, இலைச் சுருட்டுப் புழுக்களையும், தண்டு துளைப்பான்களையும் கொன்று விடும் என்று கண்டறிந்தனர்.

இந்த வகை மரபீனி மாற்று நெல்தான் பி.ட்டி நெல் (bt rice) ஆகும். இதற்க அமொ¢க்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த மான்சான்டோ என்ற பன்னாட்டு நிறுவனம் காப்பு¡¢மை பெற்றுள்ளது.

பொதுவாக மரபீனி மாற்றுத் தொழில் நுட்பம் இன்னும் குழந்தை நிலையில்தான் உள்ளது. மரபீனிகளின் செயல்தளம் இன்னும் வி¡¢வாகக் கண்டறியப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் மரபீனி மாற்றுப் பயிர்களை மக்கள் பயன்பாட்டுக்கு அவசரப்பட்டுக் கொண்டு வந்து விடக்கூடாது.

சாதாரணமாக மரபீனிகள் ஓய்வு நிலையில் இருக்கும். வெளியிலிருந்து இன்னொரு மரபீனி செலுத்தப்படும் பொழுது அக்கம் பக்கத்திலுள்ள மரபீனிகள் எல்லாம் தீவிரமாகச் செயல் வேகம் பெற்றுவிடும். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி நிலையில் மரபீனியை இன்னொரு மாற்றுத் தளத்தில் செலுத்துவது என்பது எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அது ஒட்டும் இடத்தைப் பொருத்து எண்ணிக்கைப் பெருக்கம் அடைய வாய்ப்புண்டு. அதன்பிறகு அதன் கட்டுப்பாடு நம் கையில் இல்லை. நெல்லில் ஒரு மரபீனியை மாற்றீடு செய்ய நாம் முயலும் போது அது செலுத்தப்படும் நெல்லின் ஒட்டு மொத்த மரபீனித் தொகுப்பையே சிதைத்தவிடும் ஆபத்தும் உண்டு. அவ்வாறாயின் அக்குறிப்பிட்ட நெல் வகையில் ஏற்கெனவே இருந்த நல்ல தன்மைகளும் சேர்ந்து குலைந்து விடும். அல்லது அவற்றில் வேறுவகையான நச்சுப் பொருள்கள் உருவாகி விடலாம். இது விளைச்சலைப் பாதிப்பதோடு, உண்பவருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

பி.ட்டி அ¡¢சியை எலிக்குக் கொடுத்து உண்ணச் செய்தபோது அதற்கு உடலில் முடி உதிர்தல, குடல் தொடர்பான நோய்கள் போன்ற ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. Cry 1Ac என்ற நச்சு இவ்வாறான விளைவை ஏற்படுத்தியது. இதே போன்ற ஒவ்வாமைகள் பாலூட்டியான மனிதர்களுக்கும் வரும் ஆபத்து உண்டு - என்று முனைவர் ஜேனட்டு காட்டர் என்ற அறிவியலாளர் எச்சா¢க்கிறார்.

எனவே பி.ட்டி நெல் தமிழ் நாட்டில் தடைசெய்யப் படவேண்டும். அந்நெல்லுக்கு ஆய்வுப் பண்ணைகள் அமைக்கவும் அனுமதிக்கக் கூடாது.

நன்றி : தமிழர் கண்ணோட்டம் - டிசம்பர் 2006.

இந்த வகையான நெல் தமிழ்நாட்டில் - கோவை மாவட்டத்தில் - ஆலங்குடி என்ற சிற்றூ¡¢ல் ரங்கராஜன் என்பவரது பண்ணையில் விளைவிக்கப்பட்டு முதிர்ந்து நின்றது. இந்த நெல் எப்படிப்பட்டது என்பதே அவருக்குத் தொ¢யாது. பசுமை அமைதியின் செயல்வீரர்களும், விவசாயத் தலைவர்களும், பசுமை இயக்கத்தினரும் - முனைப்போடு சென்று தேடி, கண்டுபிடித்து - இதனை அழித்துள்ளனர். இவர்கள் இது பற்றி மக்களுக்கும் பத்தி¡¢கைகளுக்கும் விளக்கமளிக்கும் நிகழ்வில் பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாச்சல அடிகளார் கலந்து கொண்டு இச் செயலை வாழ்த்தியுள்ளார் - இந்த மண்ணைக் காக்க வேண்டியதன் கட்டாயத்தை எடுத்துரைத்துள்ளார். ( இன்னம் எங்கெல்லாம் இந்த நெல் விளைவிக்கப் பட்டுள்ளதோ யார் அறிவார்? இவர்கள் நுழைய அனுமதி தந்தது யார்? )

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.