சீனம் செழிக்கிறது - மாவேவை மறக்காத மக்கள்.
சீனம் செழிக்கிறது - மாவேவை மறக்காத மக்கள்.
சா. சந்திரசேகரன்
சீனத்துப் பழமொழி மரம் நடுதல், நூல் எழுதுதல், வா¡¢சை உருவாக்குதல். இவற்றில் மரம் நடுதல் எங்கும் நீக்கமற காணமுடிகிறது. 10 அடிக்கு ஒரு மரம் சாலை ஓரங்களில் தவறாது நடப்பட்டுள்ளது. புதிதாகப் போடப்பட்டுவரும் சாலைகளில் 6,7 அடி உயரமுள்ள மரக் கன்றுகள் நடப்பட்டு அதற்கு கொம்புகளால் முட்டுக் கொடுக்கப்பட்டு வளர்த்தெடுக்கும் காட்சியினைப் பார்க்கும் பொழுது அவர்களின் பழமொழிப்படி மரம் நடுதலை அரசு மிக முகாமையான கடமையாகக் கொண்டு செயல்படுவது தொ¢யும்.
எவ்வளவு தொலைநோக்கான அறிவியலான வளர்ச்சித் திட்டம். ஏனெனில் மழையின் கருவே இந்தத் தருக்கள் தான். விவசாயிகளுக்கு பண்ணைகள் அமைத்துக் கொடுத்து அதன் அருகே ஒரே மாதி¡¢யான வடிவம் கொண்ட பல ஆயிரக்கணக்கான வீடுகளை அவர்களுக்குக் கட்டிக் கொடுத்துள்ளார்கள். மிகப் பொ¢ய அளவில் வேர்க்கடலை பயி¡¢டப்படுகிறது. சீனமக்கள் வேர்க்கடலையை அவர்களின் உணவு வகைகளில் விரும்பி உண்கிறார்கள்.
சீன தே
சத்தின் இத்தனை வளர்ச்சிக்கும் மக்களின் மகிழ்ச்சிக்கும் வறுமைச் சுவடுகளே காணப்படாத ஏற்றத் தாழவற்ற சமத்துவ நிலைக்குமான காரணம் மாவோவின் புரட்சிக் கருத்துகளும் செயற்பாடுகளும் மக்களைப் பண்படுத்திய விதமேயாகும். மாவோவின் சிந்தனை மார்க்சியச் சிந்தனையைச் சார்ந்ததே. இலெனினுடைய தத்துவமும் அ·தே. ஆனால் மாவே அவர்கள் கிராமத்திலிருந்து தன்னுடைய புரட்சிக் கருத்தினைத் தொடங்கி விதைத்து விவசாயிகளை ஒருங்கிணைத்து நகரத்தைக் கைப்பற்றி ஆம்சியாங்கே சேக்கின் கொடிய பூர்ஷ்வா சர்வாதிகாரத்தை ஒழித்துக் கட்டி ஆட்சியமைத்தார். மாவோ இன்றும் நிற்கிறார்.
மற்றைய நாடுகளில் மனிதா¢டையே பல்வேறு ஏற்றத் தாழ்வுகளும், எத்துகளும் ஏமாற்றுகளும் சாதி மத மோதல்களும் அதன் விளைவான கலவரங்களும் பெருத்துள்ளன. உலகமயம், தாராளமயம், தனியார் மயம் போன்ற சூலாயுதங்களால் வலுத்தவர்கள் வாய்ப்புகள் பெறுவதும் வலுவற்றவர்கள் விதியே என்று வாழ்ந்து மறைவதுமே இன்றைய நிலை. அதுமட்டுமன்றி அரசு அதிகாரங்களை ஏதோ ஒரு வழியில் பெற்றுக் கொண்ட அரசியலாளர்கள் பணம் பதவி தன் குடும்பநலம் என்ற லட்சியங்களையே கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அவலததையே பார்க்க முடிகிறது. ஆனால் சீன தேசத்திலோ இப்படிப்பட்ட அவலங்களைக் காணவும் அறியவும் முடியவில்லை.
நோபல் பா¢சு பெற்ற பொருளியல் மேதை அமர்த்தியா சென் அவர்களின் கருத்துப்படி வெறும் தனிநபர் உற்பத்தித் திறனையும் உழைப்புத் திறனையும் தனிநபர் நுகர்வையும் மட்டுமே வளமைக்கான அளவு கோலாகக் கொள்ளாமல் பரந்த நோக்கொடு தனிநபர் கல்வியறிவு, வாழ்நாள் அதிகா¢ப்பு, ஊட்ட உணவு, உறைவிடம், சுயமா¢யாதை வாழ்வு, சுகாதாரம் தேவைக்கேற்ப வருமானம் போன்றவற்றையே வளமையின் அளவுகோலாகக் கருதப்படவேண்டும் என்று கூறுவார். இந்த இத்தனையும் சீனதேசத்து மக்களின் வாழ்க்கையில் , வாழும் முறைகளில் அவர்களின் அணுகுமுறைகளில் காணமுடிகிறது.
அங்கே கடவுள்கள இல்லை, மதங்கள் இல்லை, சாதிகள் இல்லை சடங்குகள் இல்லை.. எனவே மோதல்கள் இல்லை. மகிழ்ச்சியையும் வளர்ச்சியையுமே எங்கணும் காணமுடிகிறது. சீன தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அந்நாட்டு மக்களின் தாய்மொழிப் பற்றுணர்ச்சியும், தேசிய இனப்பெருமித உணர்ச்சியும், எழுச்சியும், ஈகம் செய்த மாவோ போன்ற தலைவர்களின்பால் நன்றியுணர்ச்சியும் கொண்டிருப்பதே காரணம் ஆகும்.
நன்றி : தமிழர் கண்ணோட்டம் - அக்டோ 2006
Leave a Comment