ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

 
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை இராணுவத்தாக்குதலையும் 300க்கும்மேற்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற சிங்களகடற் படையைக் கண்டித்தும்,இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும்இந்திய அரசைக் கண்டித்தும்பழ.நெடுமாறன் தலைமையில்சென்னை மெமோரியல்மண்டபம் அருகே 22.03.08 ஆர்ப்பாட்டம் நடைபெறும்என அறிவிக்கப்பட்டது.இந்த ஆர்ப்ாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. பழ.நெடுமாறன்,த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தேவேந்திரகுலவேளாளர் சங்கத் தலைவர் பசுபதி பாண்டியன் பெரியார் திராவிடர்கழகத்தின் ஆனூர் ஜெகதீசன் உள்ளிட்டோர் தடையை மீறிஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் இந்திய அரசின்போக்கைக் கண்டித்தும், அப்பாவித் தமிழர்களை கொன்று குவிக்கும்சிங்கள இராணுவத்தைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பழ.நெடுமாறன்,பெ.மணியரசன், ஆனூர்ஜெகதீசன், பசுபதி பாண்டியன் உள்பட 200பேர் கைது செய்யப்பட்டனர். இதில் த.தே.பொ.க. தோழர்கள் 38பேர். புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம்,தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாயினர்.கைதானவர்கள் கொண்டித்தோப்பு அருகே உள்ள மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.