ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பனைமரத்தடியில் அம்பானிகள் - மு.நியாஸ் அகமது

ஏப்ரலும் மேயும் அதிக அளவில் கள் (கள்ள தனமாக) இறக்கப்படும் மாதங்கள். ஒரு லிட்டர் கள்ளின் விலை பத்து ரூபாய் மட்டும் தான். ஆனால் அதே அளவு  மதுபானத்தின் விலையோ குறைந்தது 240 ரூபாய். கள் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானதென்றால் டாஸ்மாக் மதுபானம் மட்டும் ஆரோக்கியமானதா? கள்ளைத் தடை செய்யும் அரசு மதுபானத்தை தடை செய்யாமல் இருப்பதன் பொருள் என்ன?
கள் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லதா..? கெட்டதா..? என்ற விவாததிற்கு நாம் செல்லும் முன் டாஸ்மாக்கில் விற்கும் மதுபானங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு கிராமவாசியின் ஒரு நாள் சராசரி வருமானம் 100 ரூபாய் என்று வைத்துக்
கொண்டால் கூட இருபது முதல் முப்பது ரூபாய் கள்ளிற்காக செலவு செய்ததுபோக
மீதமுள்ளதைக் குடும்பத்திற்குச் செலவிட முடியும். ஆனால் கள் தடை  செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே 100 ரூபாயை மற்ற மதுபானங்களுக்காக செலவிட அரசு அனுமதித்துள்ளது. அதன் மூலம் அரசு வருமானம் 10,000 கோடி
என்று கூறி புளகாகிதம் அடைகிறது. இதன் பொருளென்ன? கள் விற்பனையைப்  பெரும் முதலாளிகள் நடத்த விரும்பினால் உறுதியாக அதற்கான தடை நீங்கும். அதாவது ரிலையன்ஸ், டாடா போன்ற பெரும் நிறுவனங்கள் கள் விற்க ஆசைப்படும் போது அரசு தன் விதிகளைத் தளர்த்தி கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கும். சில அறிவு ஜீவிகளை விட்டு கள் குடிப்பது உடல் நலத்திற்கு
நல்லது என்று அறிக்கை விடச் செய்யும். தவறானதாகக் கருதப்பட்ட ஒரு பொருள் புனிதம் பெரும். பங்குசந்தையில் பங்கு விற்பனை சு10டு பிடிக்கும். 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரை லிட்டர் கள்ளின் விலை ரிலையன்ஸ் ஃபிரசல் 'ரூ.100ஃ- மட்டும். குடிப்பதற்கு முன் குலுக்குங்கள்' (Sheke before use)என்ற வாசகங்களுடன்
அழகாக பேக் செய்யப்பட்ட பாட்டிலில் விற்பனை செய்யப்படும். சாரூக் கானும், அமீர் கானும் நம்மை கள் குடிக்க சொல்லி சிபாரிசு செய்வார்கள். ஆனால் நம்
பனை மரங்களை தடை விதிக்கப்படும்.

கள்ளைத் தடை செய்த அரசினால் ஏன் மற்ற மதுபானங்களைத் தடை செய்ய
இயலவில்லை? வோட்கா, மெக்டவுள், போன்ற மதுபானங்கள் பன்னாட்டு
நிறுவனங்களுடையவை. ஆனால் பனை மரங்களை வளர்ப்பவர்களோ சாதாரண கீழ்த்தட்டு மக்கள். கள்ளின் மீது விதிக்கப்பட்ட தடை நீங்கினால் ஓர் இனத்
திற்கான வேலைவாய்ப்பு கிடைக்கும். மாறாக வோட்கா, சிக்னேச்சர் போன்ற பகாசுர மதுபான கம்பெனி முதலாளிகளுக்கு நட்டமேற்படக் கூடாது என்பதற் காகவே கள் மீது தடை விதித் திருக்கிறது. அரசுக்கு குடிமக்களின் உடல்நலனைப் பற்றியெல்லாம்
அக்கறையில்லை. அரசின் கவலையெல்லாம் மைடாஸ் போன்ற திமிங்கில நிறுவனங்ள் நட்டமடையக் கூடாது என்பது தான். 2000 ஆண்டுத் தொன்மை
யான ஒரு தொழிலை அழித்துவிட்டு, ஓர் இனத்தின் வேலை வாய்ப்பைப் பறித்துவிட்டு, பெரு முதலாளிகளின் கொள்ளை அதிகரிக்க அரசே துணை
போகலாமா?

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.