சிலைகள் - தமிழ்ச்செல்வா
பிம்பங்களின் பிணம்
சிலைகளாய் விட்டன
நடுத்தெருவில்
சிலைகளாய் விட்டன
நடுத்தெருவில்
எடுக்கவோ புதைக்கவோ முடியாத
அழுகிய உடலாய்
நாற்றமெடுக்கிறது
அதன் ஆளுமை
உதிர்ந்து
உருக்குலைந்து போன
சவஊர்தி
சாகும் தருவாயில்
முடிந்த வரலாறாய்
இடிந்த கல்லறைகள்
இன்னும் கனக்கிறது
இனத்தின் பெயர் எழுதி
கதவடைப்பு நாளாய்
கண்ணும் காதும்
மூடிக் கிடக்கிறது
ஏதும் செய்யாமல் தடுக்க
யாதேனும் தேடி தொலைக்க
இருளை அப்பி விட்டு
விலகி நிற்கிறது வெளிச்சம்
Leave a Comment