உங்களை அறிந்தோம் - அ.நாகராசன்
உங்களின்
அரூப ஆக்கிரமிப்புகளை
உணரத் தொடங்கிவிட்டன
எங்களின் புலன்கள்
அரூப ஆக்கிரமிப்புகளை
உணரத் தொடங்கிவிட்டன
எங்களின் புலன்கள்
உங்களுக்கானத் துதிகளாக
மாற்றப்பட்ட
எம்முன்னவரின்
முழக்கங்களில்
நீங்கள் செய்த
தணிக்கைத்
தந்திரங்களையும்
நாங்கள் அறிவோம்
எங்கள் மரபுவேர்களில்
நீங்கள் கலக்கும்
நச்சுநீரையும்
அறிந்துகொண்டபின்
எப்படிச்
சும்மாயிருப்பது?
எங்கள் நாவுகள்
இனி
எங்களுக்காகப்
பேசப்போகின்றன
Leave a Comment