ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஒலிம்பிக் சுடரோட்டமும் திபெத் போராட்டமும் - முனைவர் த.செயராமன்

ஒலிம்பிக் சுடரோட்டமும் திபெத் போராட்டமும்

முனைவர் த.செயராமன்

 

கிரேக்க இனத்தின் தொன்மை அடையாளமாக விளங்கி இன்று பன்னாடுகளாலும் ஆர்வத்தோடு பங்கேற்கப்படும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு சீனாவில் நடைபெற

இருக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட்டு 8 முதல் 24ஆம் நாள் வøர (2008) சீனாவில் நடக்க இருக்கும் நிலையில், அதன் முதல் நிகழ்வான ஒலிம்பிக் சுடரோட்டம் தொடங்கிவிட்டது. கடந்த மார்ச் 24ஆம் நாள் கிரீசு நாட்டில் ஏற்றப்பட்ட சுடர் 5 மாத காலத்தில் 19 நாடுகள் வழியாக சீனா வந்தடைய வேண்டும். உலக நாடுகளின் கவனமெல்லாம் சீனாவின் பக்கம் திரும்பியது.உலகத்தில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டி களிலேயே மிகப் பெருமையுடைய ஒலிம்பிக்  விளையாட்டுப் போட்டியைத் தான் நடத்துவதில்

பெருமிதம் கொண்டது சீனா.

 

சீனாவின் பிடிக்குள் சிக்கி, பெயரளவிலான  தன்னாட்சிப் பகுதியாகக் கிடக்கும் திபெத், தனது உரிமைக் குரலை தொடர்ந்து எழுப்பி வருகிறது. ஆனால், உலக நாடுகளின் கவனத்தையெல்லாம் தன்பால் ஈர்க்கும் வகையில், சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் நோக்கில் சீனாவிற்குக் கொண்டு செல்லப்படும் ஒலிம்பிக் சுடர் எங்கு சென்றாலும் அங்கே பலத்த கண்டனக் குரல் எழுப்பி, போராட்டங்களை நடத்தி ஒலிம்பிக் சுடரைsத் திபெத்தின் விடுதலைச் சுடராக மாற்றிக் கொள்ளும் உத்தியை திபெத் கையாள்கிறது. உலக அளவில் போராடிக் கொண்டிருக்கும் பிற தேசிய இனங்களுக்கு போராட்டங்களை வடிவமைக்கும் முறையில் திபெத்திட மிருந்து கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கின்றன.

 

திபெத் போன்ற ஒரு தேசிய இனம் தனது விடுதலை குறித்த போராட்டத்திற்கு ஒலிம்பிக் சுடøர அல்லது ஒலிம்பிக் விளையாட்டுக் களத்தைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு பொருத்தப்பாடு இருக்கிறது. "ஒலிம்பிக்' என்பதே ஒரு இனத்தின் அடையாளம்தான். ஒலிம்பிக் விளையாட்டு என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட கிரேக்கர்களின் தேசியத் திருவிழாதான். கிரீசின் தெற்குப் பகுதியில் கிரேக்கர்களின் தெய்வம் வாழ்ந்ததாகக் கூறப்பட்ட ஒலிம்பியா மலையில், கிரேக்க தெய்வத்தை வழிபட்டுச் சிறப்பிக்கவும், நான்கு ஆண்டுகள் முடிந்து அடுத்த நான்கு ஆண்டுகள் தொடங்குவதைக் குறிக்கவும், சிறிய அரசுகளாகப் பிரிந்து கிடந்த கிரேக்கர்கள் ஒலிம்பிக் விழாவை விளையாட்டு, இசை, இலக்கியம் இவற்றில் போட்டிகளை நடத்திக் கொண்டாடினார்கள்.

 

கி.மு.776 முதல் நடைபெற்றுவந்த ஒலிம்பிக் திருவிழா, கிரேக்கம் ரோமானியரின் கீழ் வந்ததும் ஒழித்துக்கட்டப்பட்டது. கி.பி.394இல் முதலாம் தியோடாஷியஸ் என்னும் ரோமானிய மன்னன்

ஒலிம்பிக் போட்டியை ஒழித்தான். அதன்பிறகு நீண்டகாலம் கழித்து 1896இல் பாரன் பியர்ரி டி குபர்டின் (Baron Pierre de coubertin 1863-1937) என்பவருடைய முயற்சியால் ஒலிம்பிக் விழா மீண்டும் உயிர் பெற்றது. பன்னாட்டு அளவில் நடக்கிறது. கிரேக்க இன அடையாளமான ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வு, இன அடையாளம் பாதுகாப்புக் கோரிப் போராடும் தேசிய இனங்களின் போராட்டக் களமாக மாறுவதில் இயல்பாகவே ஒரு பொருத்தப்பாடு இருக்கிறது.

 

திபெத்

 

"திபெத்' நாடு திபெத்திய மொழியில் "போத்' என்றும் சீன மொழியில் "ஸி சாங்' என்றும் குறிக்கப்படுகிறது. புத்தம் சார்ந்த சமய மரபும், தனி மொழியும், நீண்ட வரலாறும் பண்பாடும் கொண்ட மக்கள் திபெத்தியர்கள். இன்றைய திபெத் சீன நாட்டிற்கு (People's Republic of China ) உட்பட்ட தன்னாட்சிப் பகுதியாக விளங்கு கிறது. 1,200,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இன்றைய திபெத் சீனாவின் இரண்டாவது பெரிய மாநிலம். இது வரலாற்று வழிப்பட்ட திபெத்தின் பரப்பளவில் பாதியே ஆகும். மீதி சீனாவின் பிற மாநிலங்களுடன் சேர்க்கப் பட்டிருக்கிறது. 1949இல் சீனாவில் புரட்சி வென்றது.

 

சீன கம்யூனிஸ்ட் படைகள் வெற்றிபெற்று, சீன மக்கள் ஜனநாயக அரசு ஏற்பட்டது. 1950 அக்டோபர் மாதம் சீனத் துருப்புகள் திபெத்துக்குள் நுழைந்தன. இவ்வாறு திபெத்தின் விடுதலை பெற்ற அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்தது. (விரிவிற்கு:  தமிழர்கண்ணோட்டம் ஏப்ரல்,2008)

 

வலுக்கட்டாயமாகத் திணிக்கப் பட்ட திபெத் ஒப்பந்தம்

 

1951 படைபலத்தால் அழுத்தம் தந்து, திபெத் அமைச்சரவையை ஒரு தூதுக்குழுவை 1951இல் சீனத் தலைநகருக்கு அனுப்பச் செய்தது சீன அரசு. அவர்களுடன் 17 அம்ச ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. அதன்படி, திபெத் சீனப் பகுதியானது. சீனப் படைகள் திபெத்தில் முகாமிட்டன. 1955இல் சீனாவை எதிர்த்து திபெத்தின் முதல்  போராட்டம் வெடித்தது. ஆனால், சீனப்படை புத்த மடாலயங்களை, தூளாக்கியது. புத்தத் துறவிகளைக் கைது செய்து சீனதிபெத் எல்லைப் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தியது.

 

1959 மார்ச் 10ஆம் நாள், தலாய்லாமாவைக் கமுக்கமாக ஒரு விழாவுக்கு சீனத் தளபதி அழைத்தது ஐயத்தைத் தந்தது.. தலாய்லாமாவைக் காக்க அவரது இருப்பிடத்தைச் சுற்றி பல்லாயிரம் மக்கள் நின்றனர். 1959 மார்ச் 17ஆம் நாள் சீனப்படை தலாய்லாமா அரண்மனைக்கு அருகே குண்டுகளை வீசித் தாக்கியது. அன்று இரவே, மாறுவேடம் பூண்டு சில வீரர்களுடன் அரண்மனையை விட்டு

வெளியேறி 31 நாட்கள் பயணம் செய்து 1959 ஏப்ரல் 18 அன்று இந்திய எல்லைக்குள் வந்து சேர்ந்தார் தலாய்லாமா. அவர் தப்பிச் சென்றதை அறிந்த சீன அரசு ஆறுமாத காலம் அடக்கு முறையை ஏவியது. அதில் 87000 திபெத்தியர்கள் கொல்லப் பட்டார்கள்; 25,000 பேர் கைது ஆனார்கள். ஒரு இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி பிறநாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். இந்தியா வந்த தலாய்

லாமாவுக்கும் பிற திபெத்தியர் களுக்கும் இந்தியா தஞ்சம் அளித்தது. இமாசலப் பிரதேசத்தில் தர்மசாலாவில் திபெத் போட்டி அரசை (Tibetan Government in Exile) நிறுவி, தலாய்லாமா உலகம்  முழுவதும் திபெத் விடுதலைக்காக ஆதரவு திரட்டி வருகிறார்.

 

மாவோ காலத்திற்குப் பிறகு

 

1978இல் டெங் ஜியாவோபிங் (Deng Xiaoping) பதவி ஏற்றார். திபெத் பிரச்சினையைத் தீர்க்க ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொண்டார். திபெத்துக்கு உண்மை அறியும் குழுக்களை அனுப்பி வைக்குமாறு தலாய் லாமாவிடம் தெரிவித்தார்; முழுவிடுதலை என்ற ஒன்றைத் தவிர பிறவற்றைப் பேசித் தீர்க்கலாம்  என்றார்.

 

1979-80 ஆகிய ஆண்டு களில் தலாய்லாமா மூன்று உண்மை அறியும் குழுக்களை அனுப்பி வைத்தார். கண்டறிந்த உண்மைகளோ சீனாவின் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக இருந்தன. சீனக் கம்யூனிச

அரசின் நிலமானிய ஒழிப்பு சீர்திருத்தங்கள் நல்லவையே என்றாலும், திபெத் மக்களின் தேசிய உணர்ச்சி வளர்ச்சியடைந்திருந்தது. 1965இல் பெயரளவிலான தன்னாட்சி அரசை திபெத்தில் சீன

அரசு ஏற்படுத்தியது. ஆனால், திபெத்தியரின் கோரிக்கையை இது நிறைவு செய்யவில்லை. 1980 முதல் திபெத் விடுதலை உணர்வு வளர்ந்து வருகிறது. சீன அரசு சமாதானமாகப் பிரச்சினையைத் தீர்க்க திபெத்தை ஒரு தன்னாட்சி பகுதி Tibet Autonomous Region  ஆக்குவது, மீண்டும் புத்த மடாலயங்களைத் திறப்பது, புதிய துறவிகளைச் சேர்க்க அனுமதிப்பது, திபெத்திய மொழியை எழுத்தில்

அதிகம் பயன்படுத்துவது, சீனர் களுக்குப் பதில் திபெத்தியøர நியமனம் செய்வது; மேலும் வரிகுறைப்பு, குறைந்த விலையில் பொருட்களைக் கிடைக்கச் செய்வது, தகவலமைப்புகள் வளர்ச்சி

ஆகியவற்றைத் திட்டமிட்டது. 1982, 1984 ஆகிய ஆண்டுகளில் தலாய் லாமாவுடன் சீன அரசு இரகசியப் பேச்சு நடத்தியது; அவை பயனில்லாமல் போயின.

 

திபெத்தியரின் கோரிக்கைகள்

 

திபெத் மக்கள் சீன அரசுமுறை போலன்றி ஒரு மேற்கத்திய முறையை ஒத்த சட்டமன்ற ஜனநாயக முறையை விரும்பினர். ஆனால், திபெத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியின்றி வேறு ஒன்றை அனுமதிக்க முடியாது என்று முன்னமே சீன ஆட்சியாளர்கள் கூறியிருந்தார்கள்.மேலும், சிக்கலாகத் தோன்றும் ஒரு கோரிக்கையும் வளர்ந்திருந்தது. திபெத்தை விட்டு வெளியேறியிருந்த திபெத்தியர் "மகா திபெத்' கோரிக்கையைக் கையிலெடுத்தனர். அரசியல் வடிவமான தன்னாட்சித் திபெத் பகுதி மட்டுமின்றி, மேற்கு சீனத்தோடு இணைக்கப்பட்டுள்ள, 18ஆம் நூற்றாண்டில் திபெத் இழந்த பகுதிகளையும் சேர்த்து இனஅடிப்படையில் "மகா திபெத்' அமைக்க வேண்டும் என்று கோரினர். திபெத் விடுதலை அல்லது சுயாட்சி பற்றிய பிரச்சாரம் பன்னாட் டளவில் 1987 முதல் நடைபெறத் தொடங்கியது.

 

திபெத்தை சீனா சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்று  1987இல் அமெரிக்காவிலும் பின்னர் ஸ்ட்ராஸ்பர்கிலும் தலாய்லாமா அறிவித்தார். "மகா திபெத்' தன்னைத் தானே ஆண்டுகொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும், அதன் அரசு வடிவம் மேற்கு உலகைப் போன்று ஜனநாயக உரிமையுடன் கூடியதாக இருக்கவேண்டும், திபெத் பற்றிய அனைத்து முடிவுகளையும் திபெத்தியர்தாம் எடுக்க வேண்டும், திபெத்தைப் பொருத்தவøர சீனா அதன் வெளியுறவுத்துறை, பாதுகாப்பு இவற்றை மட்டுமே நிர்வகிக்கட்டும். வெளிநாடு தொடர்புடையவை களிலும் கூட வணிகம், விளையாட்டு,

கல்வி போன்றவற்றையும் "Foreign Affairs Office " (வெளியுறவுத் துறை அலுவலகம்) மூலம் திபெத்தே நிர்வகிக்கும் என்று தலாய்லாமா கருத்தளித்தார்.

 

ஆனால் இது, 1984லிலேயே சீனாவால் நிராகரிக்கப்பட்ட ஒன்றாகும். 1998இல் ஸ்ட்ராஸ்பர்கில் ((Straus boung தலாய் லாமா டொமினியன் தகுதியைக் கோரினார். திபெத்துக்கு சமயச் சுதந்திரத்தை

அளித்தால் அது திபெத்திய தேசிய உணர்ச்சியை வளர்த்துவிடும் என அஞ்சி சீனா அதை நிறுத்தியது. பண்பாட்டிலும் தாராள உணர்வை நிறுத்தியது என்று கூறிய தலாய் லாமா, சீனாவில் ஹாங்காங்க்கு அளிக்கப் பட்டிருக்கும் தகுதியை திபெத்துக்கு அளிக்க வேண்டும் எனக் கோரினார்.  தலாய்லாமா முழுமையான சுயாட்சியையே கோருகிறார். ஆனால் அதை ஏற்க சீனா தயாரில்லை.

 

திபெத் தன்னாட்சிப் பகுதியின் (Tibet Autonomous Region) அரசு

 

திபெத் தன்னாட்சிப் பகுதி என்பது ஒரு மாநிலத் தகுதிதான். இது மக்களின் அரசு. ஒரு தலைவரின் (Chairman) கீழ் செயல்படுகிறது. இந்த தலைவர் திபெத்தியர். ஆனால் மாநில அரசை ஆட்டுவிக்கும் அதிகாரம் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலரிடம் உள்ளது. அவர்தான் மாநில அரசை கட்டுப்படுத்துகிறார். அவர் எப்போதும் ஒரு "திபெத்தியர் அல்லாதவர்'. வழக்கமாகவே சீனப் பெருந்தேசிய  இனமான ஹான் சைனீஸ் (ஏச்ண இடடிணஞுண்ஞு) இனத்தைச் சேர்ந்தவர். திபெத்தில் 92.8% மக்கள் திபெத் இனத்தவர்; ஹான்சைனீஸ் 6.1%; மீதியுள்ளோர் மோன்பா (Mணிணணீச்), லோபா (ஃடணிஞச்) போன்ற பழங்குடியினர். திபெத்தின் தலைநகர் லாசாவில் சீனர்கள் பெருமளவில் குடியேறினர். இன்று லாசாவில் வாழ்பவர்களின் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் சீனர்கள், ஒரு பகுதிதான் திபெத்தியர்.

 

போராட்டங்களும் ஒடுக்கு முறைகளும்

 

திபெத்தியர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள். 1959இல் தலாய் லாமா தப்பிவந்த பிறகு ஆறுமாத காலம் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.  1987இல் திபெத்திலிருந்து சீனர்கள் வெளியேறக் கோரி, புத்த பிக்குகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது முழுக் கலவரமாக மாறியது. இம்முறை கலவரச் சூழலுக்குக் காரணம் இடதுசாரிகளின் அதிகப் படியான செயல்பாடுகள் என்றும், சீர்திருத்தங்களை அதிகாரிகள் முறையாக அமல்படுத்தாததுதான் என்றும் சீன அரசு கூறிக் கொண்டது. 1988இல் புத்த துறவிகள் போராட்டங்களை நடத்தினார்கள். இதில் இரண்டு கலவரங்கள் வெடித்தன. 1989இல் மார்ச் 5ஆம் நாள், நான்காவது பெரிய கலவரம் லாசாவில் வெடித்தது. சீனா இராணுவச் சட்டத்தை அறிவித்து  ஒடுக்கியது. 1989 ஆம் ஆண்டு ஒடுக்குமுறைக்குப்பின் தலாய்லாமா "தன்னாட்சி' கோரிக்கைக்கு மேல் ஏதும் கேட்க இயலாதவர் ஆனார். 1959இல் திபெத்தை சீனா கைப்பற்றிக் கொண்டதை எதிர்த்து திபெத்தியர்கள் நடத்திய போராட்டத்தின் 49ஆவது ஆண்டு நிறைவு நாள் திபெத்தில் கடைபிடிக்கப்பட்டது. அதுபோன்றே பலநாடு களிலும் தஞ்சம் புகுந்திருந்த திபெத்தியர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள்.

 

சீனாவில் 300 பேர், நேபாளத்தில் 100 பேர், இந்தியாவில் 100 பேர் கைது செய்யப்பட்டனர். 2008 மார்ச் 10 ஆம் நாள் தொடங்கப்பட்ட போராட்டம், திபெத்தில் மார்ச் 14ஆம் நாள் கலவரமாக மாறியது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றமும், ஐரோப்பிய பேரவையும், கலவரத்தையும், சீன அரசின் நடவடிக்கைகளையும் கண்டு தீர்மானங்கள் நிறைவேற்றின. திபெத்தில் அடக்குமுறையை நிறுத்த

வேண்டும், வன்முறையில் ஈடுபடாத போராட்டக்காரர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும், தலாய் லாமாவுடன் சீன அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின.

 

ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை போராட்டக் கருவியாக மாற்றுதல்

 

ஆகஸ்ட் 8ஆம் நாள் சீனாவில் தொடங்க இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் மரபுப்படி, கிரீஸ் நாட்டில் ஒலிம்பியா விலிருந்து ஒலிம்பிக் சுடர் மார்ச் 24ஆம் நாள் ஏற்றப்பட்டு தொடர் ஓட்டம் தொடங்கியது. பெய்ஜிங்ஒலிம்பிக் அமைப்பாளர்கள் சுடர் ஓட்டத்தை இதுவøர நடைபெற்றிராத அளவிற்கு சிறப்பாக நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். மொத்தம் 1,37,000 கிலோமீட்டர் தொலைவிற்கு 19 நாடுகளில் இந்தச் சுடர் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று திட்டம். எதைத் தனது பெருமைக்குரிய ஒன்றாக சீனா கருதியதோ, அதையே தங்கள் போராட்டக் கருவியாக

திபெத்தியர்கள் மாற்றிக் கொண்டார்கள்.

 

ஒலிம்பிக் சுடர் பயணித்த நாடுகளில் எல்லாம் சுடர் வரும் வழிகளில் போராட்டங்கள் நடத்தி, சுடøரக் கைப்பற்ற முனைந்தார்கள். பிரான்சில் பாரிஸ் நகரில், திபெத்திய ஆதரவாளர்களிடமிருந்து

காக்க, ஒலிம்பிக் சுடøர நான்கு முறை அணைக்க வேண்டியதாக இருந்தது. போட்டி தொடங்குமுன் ஏற்றப்படும் ஒலிம்பிக் சுடர், போட்டி நடத்தப்படும் இடத்திற்குக் கொண்டு சென்று, போட்டிகள் முடிந்தபிறகுதான் அணைக்கப்படும். ஆனால் ஒலிம்பிக் சுடøர பத்திரமாகக் கொண்டு செல்லப்படும்பாடு உலகின் கவனத்தைத்  திபெத் மக்கள் மீது திருப்பி விட்டது. பாரிசில் சுடர் ஓட்டம் பாதிவழியில் நிறுத்தப்பட்டு ஒலிம்பிக் சுடர் பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்டது. இலண்டனில் சுடøர வலுக் கட்டாயமாகக் கைப்பற்ற முயற்சிகள் நடந்தன.

 

ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை எதிர்த்துத் திபெத்தியர்கள் நடத்த விருந்த போராட்டத்துக்குத் தடைவிதிக்க இந்தியா மறுத்து விட்டது. ஆனால் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்  என்று உறுதி அளித்தது. இந்தியாவில் டில்லியில் ஏப்ரல் 17ஆம் நாள் சுடர் எடுத்துச் செல்லப்பட வேண்டும். இந்தியாவில் ஒரு இலட்சம் திபெத்தியர்கள் உள்ளமையாலும் இமாசலப் பிரதேசத்தில் திபெத் தியர்க்கான போட்டி அரசு தலாய் லாமா தலைமையில் செயல் படுவதாலும் விரிவான பாதுகாப்பு  ஏற்பாடுகளை அரசு செய்திருந்தது. பாரிசிலும் இலண்டனிலும் நடந்ததைக் கண்டு, பாதுகாப்பாக நடத்தி முடித்தால் போதும் என்ற நிலைக்கு இந்திய ஒலிம்பிக் அதிகாரிகள் வந்திருந்தனர். எப்போது ஒலிம்பிக் சுடர் வருகிறது என்பது கூட இரகசியமாக வைக்கப்பட்டது.

ஒலிம்பிக் சுடர் வருவதற்கு ஒரு நாள் முன்னதாக திபெத் போராட்டக் காரர்கள், "ஊணூஞுஞு கூடிஞஞுt' என்று  எழுதப்பட்ட மஞ்சள் தலைப் பட்டையை அணிந்து வந்தனர். டில்லியில் 16ஆம் நாள் காலை, சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு வளையத்தை உடைத்து உள்ளே நுழைந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

ஒலிம்பிக் சுடர் எடுத்துச் செல்லப்படும் தூரம் குறைக்கப் பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து இந்தியா கேட் வøர இரண்டு கிலோமீட்டர் மட்டுமே ஒலிம்பிக் சுடர் எடுத்துச் செல்ல

ஏற்பாடானது. ஒலிம்பிக்சுடர் பாகிஸ் தானிலிருந்து நள்ளிரவு 1 மணிக்குக் கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்திலும், ஒலிம்பிக் சுடர்  வைக்கப்பட்ட ஐந்து நட்சத்திர விடுதி முன்பாகவும் திபெத்தியர்கள் போராட்டம் நடத்தினர். ஒலிம்பிக் சுடர் எடுத்துச் செல்லப்படும் நாளுக்கு முதல்நாளே குடியரசுத் தலைவர் மாளிகை யிலிருந்து வரும் இராஜபாதை கார்களுக்கும் பாதசாரிகளுக்கும்

மூடப்பட்டது. பாதைத் தடைகளும் வெடிகுண்டு உணர் கருவிகளும் வைக்கப்பட்டன. மறுநாள் கிளைச் சாலைகளும் மூடப்பட்டன. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. அவ்விடத்தில் முழுவதும்

பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டது. மொத்தம் 17,000 பாதுகாப்புப் படையினர் உதவியுடன் பெய்ஜிங் ஒலிம்பிக் சுடர் டில்லியில் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்லப் பட்டது. அந்த வழியில் இருந்த பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, நிதி அமைச்சர் ஆகியோரின் அலுவலகங்கள் மூடப் பட்டன. எந்த கதவோ சன்னல்களோ திறந்திருக்கவில்லை. எவரும் அப்பகுதிக்கு வர அனுமதிக்கப்பட வில்லை. இந்தியாவின் தலைநகரான டில்லியின் மையமான மத்திய டில்லியின் மிக முக்கியமான இராஜ பாதையில் எவருமே காண முடியாதபடி ஒலிம்பிக் சுடர் ஓட்டம்

நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.

 

முக்கிய அழைப்பாளர்கள் சிலர் இதில் பார்வையாளராகப் பங்கேற்க மறுத்துவிட்டனர். பெய்ஜிங் பூதியா மறுத்ததைப் போலவே, முன்னாள் காவல்துறை அதிகாரி கிரண் பேடி மறுத்துவிட்டார்.

""தில்லியில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடைபெறும் மிக முக்கியச் சாலையை சிறையாக மாற்றி அதில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடத்துவதில் தனக்கு உடன்பாடு இல்லை'' என்று அறிவித்தார்.

அனைத்து சாலைகளும் மூடப்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் உணவுக்காகச் சென்றவர்கள் திரும்ப வரஇயல வில்லை. மாநிலங்கள் அவைக்கு மாலை 3 மணி அளவில் 9

உறுப்பினர்கள் மட்டுமே வந்துசேர முடிந்திருந்தது. அதில் இருவர் அமைச்சர்கள்.

 

வெற்றிகரமாக நடத்தப்பட்ட போட்டி ஒலிம்பிக் சுடர்

 

ஏப்ரல் 17ஆம் நாள் சீனாவுக்குப் பயணிக்கும் ஒலிம்பிக் சுடருக்குப் போட்டியாக, திபெத்தியர்கள் ஒரு ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை நடத் தினார்கள். டில்லி காந்தி சமாதியில் காலையில் திரண்ட திபெத்தியர்கள் அங்கு வழிபாடு நடத்திவிட்டு, போட்டி ஒலிம்பிக் சுடøர ஏற்றி, "திபெத் விøரவில் சுதந்திரம் அடையவும், மனித நேயம் மலரவும்' உறுதிமொழி எடுத்தனர். முன்னதாக திபெத்திய கொடிகளும், திபெத்திய விடுதலைப் பதாகைகளும் எடுத்துச் செல்லப்பட்டன. இந்தத் தொடர் ஓட்டத்தில் புத்தபிக்குகள் தங்கள் பாரம்பரிய உடையணிந்து வந்தனர். ஏராளமான பெண்களும் குழந்தை களும் பங்கேற்றனர். ஆன்மீகத்தலைவர் அக்னிவேஷ், நடிகை மற்றும் சமூக சேவகி நபீஸாஅலி ஆகியோர் பங்கேற்றனர். (தினமணி 18 ஏப்ரல் 2008)

 

போராட்ட களத்தில் திபெத்தியர் வெற்றி

 

போராட்டத்தை முறையாகத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் திபெத்தியர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். உலக நாடுகளின் கவனத்தை சீனாவின் ஒடுக்குமுறை மீது திருப்பியிருக் கிறார்கள்.

இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகள், பெய்ஜிங் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டன.

 

ஒலிம்பிக் விளையாட்டுத் தளத்தை இன உரிமைப் போராட்ட களமாக்கிய கேட்டலோனியர்கள்

 

1992ஆம் ஆண்டு ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெற்றது. பார்சிலோனா உள்ளிட்ட பகுதியைத் தாயகமாகக் கொண்ட கேட்டலன் மக்கள்  இறைமை இழந்து, ஐரோப்பாவின் தெற்குப்பகுதியில் ஐபீரியன் தீபகற்பத்துக்குக் கிழக்கே, பைரினியன் மலைக்குத் தெற்கே,

ஸ்பெயினின் ஆட்சிக்கு உட்பட்டு வாழ்கின்றனர். ஒரு கோடியே இருபது லட்சம் மக்கள் தொகையுள்ள

கேட்டலன் மக்களின் தாய்மொழி "கேட்டலன்'. இவர்களது தாயகம் ஸ்பெயினிலும், பிரான்சிலும் பிரிந்து

கிடக்கிறது. அதாவது, 3 தன்னாட்சிப் பகுதிகளாக ஸ்பெயினுக்கு உட்பட்டும், ஒரு வட்டாரப் பகுதியாக

(கீஞுஞ்டிணிண) பிரான்சுக்கு உட்பட்டும் தாயகம் சிதைந்து கிடக்கிறது. ஸ்பெயினில் மூன்று தன்னாட்சிப்

பகுதிகளிலும் சிறிய அளவில் மட்டுமே அதிகாரம் படைத்த மூன்று பாராளுமன்றங்களைப் பெற்றிருக்கிறார்கள். 

 

நீண்டகால சுதந்திர வரலாறு பெற்ற கேட்டலன் மக்கள், 1707-1717 ஆகிய குறுகிய காலக்கட்டத்துக்குள்,

ஸ்பானிய காஸ்டைல் அரசு இவர்களது தாயகத்தைக் கைப்பற்றிக் கொண்டதால், தங்கள் இறைமையை

இழந்தார்கள். கேட்டலன் நாடுகளுக்கு "இச்tச்டூணிணடிச்' என்று பெயர். இவர்களது இன அடையாளத்தையும், மொழி யையும் இன்றுவøர பாதுகாத்து வருகிறார்கள். தங்கள் தாயகப் பகுதியில் 1992இல் நடத்தப்பட்ட  பார்சிலோனா ஒலிம்பிக் விழாவில் அதிரடியாகத் தங்கள் கேட்டலோனிய தேசியப் பாடலை இசைத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தனர்.

 

அவ்வகையில் இவர்கள் திபெத்தியர்களுக்கு முன்னோடிகள். போராடும் ஒரு தேசிய இனம் எந்தத்

தளத்தையும் தனது போராட்டக் களமாக ஆக்கிக் கொள்ளும். இதை வைத்து அவர்கள் விளையாட்டுக்கே

விரோதிகள் என்று கருதிவிடக்கூடாது. இது ஒரு போராட்ட உத்தியே ஆகும்.

 

தன்னுரிமை கோரும் திபெத்தியர்கள்

 

தலாய்லாமா தன்னாட்சி கோரிக்கையை முன் வைத்தாலும் தன்னுரிமை அல்லது சுயநிர்ண உரிமைக்கான கோரிக்கை எழாமல் இல்லை. இக்கோரிக்கை பரவலாக இருப்பதன் காரணமாக, 1993ஆம் ஆண்டு சனவரி மாதம் 6 முதல் 10ஆம் தேதி வøர, லண்டனில் பல நாடுகளிலிருந்து சட்டவல்லுனர்கள் ஒன்று கூடிய மாநாடு

திபெத் மக்களின் தன்னுரிமை பற்றி விவாதித்தது. மனித உரிமைப் பிரச்சினைகளுடன், பன்னாட்டுச் சட்டப்படியான தன்னுரிமைக் கோரிக்கையும் ஆய்வு செய்யப் பட்டது.

 

திபெத்தியர்கள் தன்னுரிமை கோருவதற்கான தகுதியுடைய "ஒரு மக்கள்" என்று இம்மாநாடு கூறியது. திபெத் இனம், "ஒரு மக்கள்' என்று அழைக்கப்படுவதற்கான அத்தனைத் தேவைகளையும் நிறைவு செய்வதாகத் தெரிவித்தது. மேலும், ஐக்கிய நாடுகள் அவையின் பொது அவைத் தீர்மானங்கள் எண். 1353, 1723 மற்றும் 2079 ஆகியவை திபெத்திய மக்களை "ஒரு மக்கள்' என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றன. தீர்மானம் எண்.1723 மீண்டும் தீர்மானம் எண் 2079ஆல் உறுதி செய்யப்பட்டது. இத்தீர்மானம் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இது திபெத்தியர்களின் தன்னுரிமையைக் குறிப்பிடுகிறது. திபெத்தியர்கள் ஒரு தேசிய இனம் என்பதை பன்னாட்டு

வøரயறைகளின்படி ஐக்கிய நாடுகள் அவை ஏற்றுக் கொண்ட பிறகு அவர் களுடைய தன்னுரிமையும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். திபெத்தியர் களுடைய தேசிய இனத் தகுதியையும், தன்னுரிமையையும்  ஏற்காத சீனாவுக்கும் ஏனைய மார்க்சியர்களுக்கும் மார்க்சுலெனின் சிந்தனைகள் மீது என்ன மரியாதை இருக்க முடியும்?

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.