ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கியுபாவின் சிக்கல்கள் - ஜான் ராட்னூர் ( தமிழில் அமரந்த்தா)


கியுபாவின் சிக்கல்கள்

ரான் ரைட்னூர்

(தமிழில் : அமரந்த்தா)


கியூபப் புரட்சி வென்ற எழுபதாம் நாளில்- 1959 மார்ச் 10ஆம் தேதியன்று ஐசன்ஹோவர்-நிக்ஸன் தலைமையின் கீழிருந்த தேசிய பாதுகாப்புக் கழகம் “கியூபாவில் வேறோர் அரசை நிறுவுவதற்கான ஆணை’’யை நிறைவேற்றியது. கியூபாவின் இளம் தலைவர்கள் மனிதர்களின் ஒருமைப்பாடு என்னும் அரசியலைத் துவங்கி விட்டதுதான் காரணம். ஒருவாரம் கழித்து குடியரசுத் தலைவர் ஐசன்ஹோவர், புலம் பெயர்ந்து வாழும் கியூப மக்களைக் கொண்டு அந்நாட்டின் மீது படையெடுக்க பயிற்சி அளிக்குமாறு மத்திய புலனாய்வுத் துறைக்கு (CIA) ஆணை பிறப்பித்தார். (ஆதாரம்: ஐசன்ஹோவர் எழுதிய “வௌ;ளை மாளிகை ஆண்டுகள் : அமைதிக்கான போர்-1956-61’’)


1961 ஏப்ரலில் பன்றிகள் விளைகுடா மீது வட அமெரிக்க படையெடுப்பு துவங்கி, ஹவானா மீது குண்டுகள் வீசப்பட்டபோது மாபெரும் மக்கள் திரளின் முன்னே ஃபிதெல் காஸ்த்ரோ கியூபப் புரட்சி சோசலிச புரட்சி என்று அறிவித்து மக்களின் ஒப்புதலைப் பெற்றார். படையெடுப்பில் தோற்றுப்போய் குடியரசுத் தலைவர் ஜான் எஃப் கென்னடி கியூபாமீது விதித்த பொருளாதாரத் தடை, இன்றும் தொடர்கிறது.


1967 ஆம் ஆண்டு வியத்நாம் போரில் மூழ்கிக் கிடந்த வேளையில் குடியரசுத்தலைவர் லிண்டன் ஜான்சன், கரிபியத் தீவுகளில் நாங்கள் ஒரு கேடுகெட்ட “கொலைகாரக் குழுமம்’’; நடத்துகிறோம் என்று பத்திரிகையாளர் ஒருவரிடம் கூறியபோது, சிஐஏ குண்டர்களின் உதவியோடு காஸ்த்ரோவைக் கொல்ல முயன்ற செய்தி வெளியாகியிருந்தது.

அதுமட்டுமல்ல: வான் வழியாகவும் நீர்-தரை வழியாகவும் வி‘த்தைத்தூவி, மனிதர்களையும் விலங்குகளையும் பயிர்களையும் அழிக்கத் தொடங்கிவிட்டது. (பார்க்க எனது புத்தகம்: “Backfire: The CIA’s Biggest Burn, Editorial Jose Marti, Havana, 1991).


கியூபா மீதான வட அமெரிக்க ஒடுக்குமுறை குறித்து வாசகர்களுக்கு ஏற்கெனவே தெரியுமென்பதால் அதனுள் நான் செல்லவில்லை அரசியலில் ஜனநாயகமும் தொழிலாளர் கடடுப்பாடும், பாரபட்சமற்ற அனைவர்க்கும் துவான பொருளாதாரக் கொள்கையும் கொண்ட அசலான மார்க்சிய சிந்தனைகள், சோவியத் ஒன்றியமும் கியூபாவின் பிற வர்த்தக நண்பர்கள் அடங்கிய பரஸ்பர பொருளாதார உதவிக்கான கழகமும் (COMECON) வீழ்ந்தபின் ஏன் காணாமலே போய்விட்டன என்று புரியவைக்கவே இதனைக் கூறுகிறேன். அந்நிய தாக்குதல்க்ள மட்டுமின்றி கியூப தேசிய அரசின் தவறான முடிவுகளாலும் வளர்ச்சி குன்றியது. பரஸ்பர பொருளாதார உதவிக் கழகம் வீழ்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, கியூபா தனது 50 வது ஆண்டு வெற்றிவிழாவை கொண்டாடத் தொடங்குகையில், உலகின் ஒரே சோசலிச நாடாகத் திகழ்வதோடு, தனது சோசலிச வேர்களையும். மார்க்சிய சோசலிச கொள்கையையும் விடாமல் கடைப்பிடித்து வருகிறது. ஆனால் “சிறப்புக் காலகட்டத்தில் தாக்குபிடித்து நிற்பதற்கான சலுகைகளாக புகுத்தப்பட்ட முதலாளித்துவவழிமுறைகள் சமூகத்தில் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக இன்று புதிய பணக்காரர்களுக்கும் புதிய ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அகன்று வருகிறது.

2005 நவம்பர் 17ஆம் தேதி இரட்டை பொருளாதாரமும், ஒழுக்கத்திலும் சிந்தனையிலும் ஏற்பட்ட ஊழலும் ஏற்படுத்திய விளைவுகளை பற்றி பிடல் காஸ்த்ரோ, “இந்த நாடு, இந்த புரட்சி தன்னைத்தானே அழித்துக்கொள்ள கூடும், ஆனால் அவர்களால் (வடஅமெரிக்கா) ஒருபோதும் தங்களை அழிக்கமுடியாது. நாங்கள் எங்களை அழித்துக்கொண்டால் எங்களுடைய தவறாகவே இருக்கும்’’; என்று கூறினார்.


இன்றைய கியூபாவில் மக்கள் அதிருப்தியுற்று இருக்கும் 4 காரணங்கள்: 1) இரட்டைப் பொருளாதாரம், இரட்டைச் செலாவணி ( கியூபபெஸோ, வடஅமெரிக்க டாலர்) 2) இறக்குமதி மீதான சார்பும் - உள்நாட்டு உற்பத்தி போதாமையும், 3) நிரந்தர குடியிருப்பு பற்றாக்குறையும், இவ்வாண்டின் சூறாவளி ஏற்படுத்திய பெரும் நாசங்களும். 4) ஒரு சில விதிவிலக்குகள் நீங்கலாக பெரும்பாலும் தொழிலாளர் அதிகாரபடுத்துதலின் முன்னேற்றமின்மை.

பெரும்பான்மை மக்கள் நம்பிக்கையிழந்து விட்டார்கள். அடிப்படை தேவைகளுக்காக திருடுகிறார்கள், தனிமனித பேராசைகளின் காரணமாண நுகர்வு பண்பாட்டு படுகுழியில் வீழ்கிறார்கள். புரட்சியின் தலையான கடமையை, பெருகிவரும் இந்த கூட்டம் நிராகரித்துவிட்டது. அது ஷசே’வின் வார்த்தைகளில் சொல்வதானால்- “புரட்சியின் தலையாய - இறுதி இலக்கு அந்நியமாதலிலிருந்து விடுபட்ட மனிதனை உருவாக்குவது’’. மூன்று ஆண்டுகளுக்கு முன் பேசும்பொழுது ஃபிதெல் குறிப்பிட்ட இந்த புதிய வர்க்கம் தனி விவசாயிகள், கைவினைஞர்கள் என தமது வேலையின் மூலம் டாலரில் சம்பாதிக்கும் மக்கள், வெளிநாடுகளில் (குறிப்பாக வடஅமெரிக்காவில்) இருந்து பெருந்தொகைகளை அனுப்பும் உறவினர்களை கொண்ட மக்கள், அதிகரித்து வரும் திருடர்கள் கூட்டம், ஆகியோரை குறிக்கிறது. கியூப பெஸோக்களை மட்டுமே சம்பாதிப்பவர்களால் ‘hம்பு, சோப், உடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், ஒரு சில உணவு பண்டங்கள், வீடுகளை செப்பனிட தேவையான கருவிகள் ஆகியவற்றை வாங்கமுடியாது. உணவு பங்கீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அளவு போதாமையால் நகரங்களில் வாழ்வோர் தமது வருமானத்தை பெருக்கிகொள்ள வேறு வழிகளை நாடவேண்டியிருக்கிறது.


புகழ்பெற்ற பொருளாதார நிபுணர், முனைவர் ஒமர் எவர்லனி வாழ்நாள் முழுவதும் புரட்சிகர பிரச்சாரமும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் பிரச்சாரமும் செய்து மக்களை ஒழுக்கமாக இருக்கும்படி வலியுறுத்தமுடியாது. அவற்றால்
சோர்ந்துபோகும் மக்கள் சாப்பிட்டாக வேண்டும். ஒவ்வொருவரும் பேரணியில் பங்கேற்க சதுக்கத்திற்கு செல்கிறார்கள். ஆனால் வீடு திரும்பியதும் அரசு தமது தேவைகளை நிறைவு செய்யவேண்டும் என்று கோருகிறார்கள். காரணம் ஒவ்வொரு பல்பொருள் அங்காடியிலும் டாலரும், யுரோவும் கொடுத்துத்தான் பொருட்களை வாங்க வேண்டியிருக்கிறது. வானொலி பெட்டி சின்னமும் முட்டாள்தனமாக பேட்டரியில்தான் இயங்குகிறது. பேட்டரி வாங்க அந்நிய செலவாணி தேவை. அதாவது உள்நாட்டில் ஒருவரின் மாதசம்பளத்தின் பாதியை இதற்கு செலவழிக்க வேண்டும்!

வேலையே செய்திராத இளைஞர்களில் சிலர் ஒரு நாளில் குடிக்கும் பீர்-இன் விலை ஒரு மாத உதவித் தொகையை விட அதிகம். இவ்வினளஞர்கள் வடஅமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத் திற்கும் தங்கள் டி-சட்டைகளில் (T-Shirts) விளம்பரம் செய்கிறார்கள். சித்ரவதை கூடமாக கியூப நிலப்பரப்பில் இயங்கும் வடஅமெரிக்க இராணுவத்தையும், உளவுத் துறையையும் போற்றும் வாசகங்களை உடையில் எழுதிக்கொள்கிறார்கள்.


மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் உள்ளதை விட அதிகமான விலையில் விற்கப்படும் கைபேசிகளில்; எதை எதையோ உளறியபடி இருக்கும் இந்த இளைஞர்கள், தலைமுடியில் வண்ணச்சாயம் பூசிக்கொள்கிறார்கள். புட்டத்தில் பாதித்தெரியும்படி கால்சட்டை அணிகிறார்கள். ஒரு சிலரிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு “இதுதான் பேஷன’; என்றார்கள். புழுத்துக்போன மேற்குலகில் அது சரியாக இருக்கலாம்: மாறுபட்ட வாழ்க்கைமுறையை கொண்ட கியூப மக்கள் எதற்காக அதனை பின்பற்றவேண்டும்? முன்எப்போதைய காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கார்களும், இரு சக்கர வாகனங்களும் ஓடும் கியூப தெருக்களில் மிதிவண்டிகள் அரிதாகிவிட்டன.

பெட்ரோலின் விலை வடஅமெரிக்க விலையைப்போல் இருமடங்கு உள்ளது. சீன மிதிவண்டிகள் வாங்க அந்நிய செலவாணி வேண்டும். படித்த இளைஞர்கள் முதலாளித்துவ நாடுகளுக்கு புலம் பெயர்ந்து செல்வதை சொல்லி கியூப அரசு அழுகிறது. ஆனால் உள்நாட்டில் முனைவர் பட்டம்பெற்ற பல்துறை அறிஞர்கள் உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள் ஆகியோர் அந்நிய செலவாணி ஈட்டுவதற்காக காரோட்டிகளாக மாறிவிட்டார்கள். இவர்களில் சிலர் முறையாக உரிமம் பெற்று வரிக்கட்டி காப்பீடு செய்து காரோட்டுகிறார்கள். வாடகை கார் ஓட்டுபவரின் ஒருநாள் வருமானம் எனது நண்பரும், சிஜர-வினுள் நுழைந்து தகவல் அறிவிப்பதற்காக தன்உயிரைப் பணயம் வைத்தவருமான முன்னாள் கியூப கப்பல் கேப்டனின் மாத ஓய்வூதியத்தை விட அதிகம். இந்த இரட்டை பொருளாதாரமும் அதன் மோசமான விளைவுகளும் கட்டுபாடின்றி வளர்ந்துவிட்டதால் அரசாங்கம் இதைகுறித்து படங்கள் எடுப்பதற்கும் திரைப்படத்துறையை அனுமதித் திருக்கிறது.


அண்மையில்; வெளியான குறையாத நிறைகலம் (Horn of Plenty) என்ற படம் இரட்டைப்பொருளாதாரம் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வினால் உண்டான பேராசையையும் பொறாமையையும் சுற்றியே அமைக்கப்பட்டிருக்கிறதுஉருவாக் கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசு ஊடகம் செய்த பிரச்சாரம் பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வரவில்லை. ஏனென்றால் சம்பந்தப்பட்டவர்கள் பாடம் கற்கவில்லை. பெரும்பான்மை ஊடகங்கள் இந்தப் பிரச்சினைக் குறித்து அலசி ஆராய்ந்து தீர்வு வழங்குவதில்லை. இளைஞர்களுக்கான நாளிதழில் அரசாங்க நிறுவனங்களின் போதாமைகளையும், தோல்விகளையும் குறித்த வாசகர் கடிதங்களில், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் அலசப்படுகின்றன. குறைந்த எண்ணிக்கையில் பதிப்பிக்கப்பட்டாலும் பிரச்சினைகளை ஆழமாக அலசுபவை லா கெசெட்டா, கஃமான் பார்புதா, காமினோஸ் ஆகிய இதழ்கள் இவற்றால் காமினோஸ், மார்ட்டின் லூதர்கிங் நினைவு மையத்தால் பதிப்பிக்கப்பட்டு உள்நாட்டு பெஸோவிற்கு விற்கப்படுவதற்கு காரணம் இந்நிறுவனத்திற்கு ஷஅமைதிக்கான மதபோதகர்கள்’ (Pasters for Peace) போன்ற தோழமை அமைப்புகள் வழங்கும் நன்கொடைதான். தோழர்களிடையே சண்டை கூடாது என்பது பொதுக்கொள்கையாக நீடிக்கிறது என்றாலும் செவிட்டுத்தனமான அதிகாரவர்க்க அமைப்பினால் உற்பத்தியாகும் எதிர்ப்புரட்சி மனோபாவத்தை வெல்ல சில கியூப மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியதாகிறது.

மார்ட்டின் லூதர் கிங் மையமீதான இந்தப் போராட்டத்தின் முக்கிய பாத்திரம் வகிக்கிறது. அதன் இயக்குனர் அருள் திரு. ராவுல் சுவாரெஸ் மக்களின் அபிமானத்தினால் தேசிய சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பாவுலோ ஃப்ரெயின் பங்கேற்பு சமூகவியல் கொள்கைளுக்கேற்ப செயல்பட்டு, சமூகத்தை முன்னேற்றும் திட்டங்களில் தம்மை இணைத்துக்கொள்ள மக்களைத் தூண்டும் சமூக அமைப்பு இதுதான்.

ஆனால் இந்த முன்னேற்ற அமைப்பின் கிளைகள் எட்டு மட்டுமே வடிவானாவில் உள்ளன. அடுத்த அரை நூற்றாண்டு உடல்நலம் குன்றி அரச பதவியை விட்டு ஃபிதெல் விலகியதும், அவர் தம்பி ராவுல் அடுத்த தேர்தலில் வென்றபோது, அவரை புதுமை விரும்பியாகப் பலர் கருதினார்கள். டாலரில்; வருமானம் உள்ளவர்கள் இறக்குமதி செய்யப்பட்ட கைப்பேசி, கணினி, கார், சொகுசான விடுதி அறைகள் உள்பட எதையும் அனுபவிக்கலாம் என்று சில உரிமைகளைப் பரவலாக்கினார். ஆனால் இதனால் பெரும்பான்மை கியூபர்களுக்குப் பயனில்லை. அவர் பதவியில் இருக்கும் காலத்தில் வரலாற்றில் மிக மோசமான நாசம் விளைவித்த சூறாவளிகளின் தாக்குதலால் புதுப் பணக்காரர்களுக்கும் பிற ஏழை மக்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துவிட்டது.


தனியாருக்கு அதிக நிலங்களை அளித்தது, விவசாய உற்பத்திக்கு அதிக மான்யம், ஓய்வு வயது வரம்பை பெண்களுக்கு 55லிருந்து 60 ஆகவும், ஆண்களுக்கு 60லிருந்து 65 ஆகவும் உயர்த்தியது போன்ற நடவடிக்கைகளால், ராவுல் கியூபாவை சீனாவின் திசையில் இட்டுச் லெ;சிகறார் என்று கருத்து நிலவுகிறது. தவிர சீனாவுடனான கடனும் வர்த்தகமும் அதிகரித்து, நவீன பேருந்துகள், ரயில்கள் ஆற்றலுக்கும் கட்டமைப்பிற்குமான பல்வேறு உற்பத்திப் பொருட்கள் எனப் பலவற்றை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்வதன் மூலம் மோசமாக சுரண்டப்படுகிறது. சீன மக்களால் உருவாக்கப்பட்ட மலிவான பொருட்களனைத்தையும் கியூபா விலைக்கு வாங்குகிறது.

வட அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்கொண்டு கியூபா தாக்குப்பிடித்து நின்று சோசலிசத்தைக் கடைப்பிடிப்பது ஒன்றே பெரிய சாதனை என்றளவில் அது ஓர் அதிசயம் எனக்கருதி ஆதரவு நல்கும் பிறநாட்டினர் நம்பிக்கை இழக்காமல் இருக்கலாம். ( இது குறித்து வெனிசுவேலா மீது நமது விமர்சனத்தை முன்வைக்க சிறிது காலம் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்) இருந்தாலும் இன்றைய கியூப மக்களில் 7 0மூ பேர் 1959க்குப் பின்னர் பிறந்தவர்கள் என்பதால் அவர்கள் இப்போதுள்ளதைக் காட்டிலும் அதிகமான முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இதையெல்லாம் திரும்பத் திரும்ப முழு முற்றாக இலவசமாகக் கிடைக்கும் மருத்துவ வசதியைச் சொல்லியே சமாளிக்க முடியாது-காரணம் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இன்று கியூபாவில் இந்த சேவை நலிவடைந்துள்ளதற்குக் காரணம் மருந்துவர்கள் பலரும் பிற நாடுகளில் சேவை செய்ய அனுப்பப்பட்டுவிட்டார்கள்.

வெற்றிகரமான புரட்சி என்பது நிரந்தரமான முன்னேற்றத்தை வழங்கவேண்டும். வீடு, உணவு, உடுப்பு போன்ற அடிப்படை வசதிகளைத் தேவைக்கேற்ப வழங்கவேண்டும். இல்லையேல் பொருளாதார வசதிகளுக்காக கியூப மக்களைப்போல தாய்நாட்டைத் துறந்து வெளிநாடுகளுக்குச் சென்றவிடுவது உறுதி. உள்நாட்டில் தங்கியிருப்போரும்- எதிரி நாடான வட அமெரிக்கா உட்பட வெளிநாடுகளிலிருந்து முதலாளித்துவ சுரண்டல் பொருளாதாரத்தின் லாபங்களைப் பெற்றுக் கொள்வதில் மகிழ்ந்திருப்பார்கள். முதலாளித் துவத்தைவிட சோசலிசத்திற்கு அதிக நற்பயன் உண்டு என்று இம்முறையில் மக்களுக்குக் கற்பிப்பது இழிவானது. ஷசிறப்பான சேவையிலும், சிறந்த உற்பத்தியம், அந்நிய செலாவணியில் அதிகமாக சம்பாதிப்போருக்கு மட்டுமே கிடைப்பது ஏன்? தனியார்மயம்(முதலாளித்துவம்) அதிக பயனுள்ளது என்று கருத இதுவே சான்றல்லவா?’ என்று மக்கள் கேட்கிறார்கள். பண்ணைகளையும், தொழிற்சாலைகளையும் நம்பிக்கையுடன் மக்களிடம் ஒப்படைத்து, வெறுப்பிற்குரிய - திறமையற்ற அதிகாரவர்க்கத்தை ஓழித்துக்கட்டி, அசலான பயனுள்ள முறையில் விவாதிப்பதையும் ஜனநாயக முறையில் முடிவெடுப்பதையும் தான் மக்களுக்கு பதிலாகச் சொல்லவேண்டும்.

சோசலிச அமைப்பையோ, வேறெந்த அமைப்பையோ உண்மையான அதிகாரத்தைப் பெற்று அதை உழைக்கும் வர்க்கம் வழிநடத்தியதில்லை. பெரும்பான்மை மக்கள் முடிவெடுக்கும் நிலையில் இல்லையென்றால் உண்மையான ஜனநாயகம் சாத்தியமில்லை. மார்க்ஸ் கூறியதுபோல் உலக முதலாளித்துவம் தோற்கடிக்கப்பட்டு தூக்கியெறியப்பட்டு அதன்பின் உழைக்கும் வர்க்கம் சோசலிச கட்டுமானத்தைத் தொடங்குகிறவரை இது சாத்தியமில்லை. எதிர்காலத்தில் தாக்குப்பிடித்து நிற்பதற்கு லத்தீன் அமெரிக்காவில் முற்போக்கான பிராந்திய கூட்டணிகள் வேர்பிடித்து வருவது ஒரு நல்ல அடித்தளமாக இருக்கும்; முதலாளித்து;துவம் நிராகரிக்கப்பட்டால் சோசலிசம் வளரவும் இது உதவும். இன்று நம்மீது கவிந்துள்ள உலகப் பொருளாதார நெருக்கடி உலகெங்கிலுமுள்ள உழைக்கும் வர்க்கங்கள் முதலாளித்துவ வழிமுறைகளை நிராகரித்து சோசலிச நிலைமாற்றத்தைத் தொடங்குவதற்கான தலைசிறந்த சந்தர்ப்பமாகலாம்.

ஆனால் அதற்கு முதலாளியின் கைக்கூலியான காவல் துறையினரின் சிறை செல்வதற்கும், துரோகிகளான ப்பாய்களின் கைகளால் மரணிப்பதற்கும் அஞ்சாத தியாகமும் போராட்டமும் தேவை - தயாரான புரட்சிகர சக்திகளும் தேவை. ஆனால் இன்றைய உலக நிலைமையை ஆராய்ந்ததில், பெரும்பாலான நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தினர் இன்னும் இதற்குத் தயாராகவில்லை என்பதால், தமது உடனடித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக வலதுபுறம் - ஏன் பாஸிஸத்தின் புறம்கூட அவர்கள் சாயக்கூடும் என்றே நம்புகிறேன். யங்கரவாதப் போர்களும் வேரோடிப்போன இனவெறியும் கொண்ட ஐரோப்பிய, வட அமெரிக்க, இன்னபிற அரசுகளின் அச்சமூட்டும் பண்பாடு உலகை மீண்டுமொரு புதிய பாசிச காலகட்டத்திற்கு இட்டுச் செல்லக்கூடும். லத்தீன் அமெரிக்காவில் இன்று வேர் பிடித்துள்ள முற்போற்கான பிராந்திய கூட்டணிகள், சோசலிசம் வேர்விடவும், கியூபாவில் உயரிய சோசலிசம், மறுபிறவி எடுக்கவும் உதவும். சுதந்திரமான கண்டமாக லத்தீன் அமெரிக்கா தாக்குப்பிடித்து நிற்கும் என்பதற்கு இந்த முற்போக்கான பிராந்திய கூட்டணிகளே சான்று.

(குறிப்பு: இக்கட்டுரை கியூபப்புரட்சியின் 50 ஆம் ஆண்டு 2009- சனவரியில் தொடங்குவதை ஒட்டி 24.12.2008 ரான் ரைட்னூர் அவர்களால் எழுதப் பெற்றது. ரான் ரைட்னூர் வட அமெரிக்கர். கியூபாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருந்து வெவ்வேறு பொருட்களில் 5 நூல்களை எழுதியவர். இவர் எழுதிய ஷசெயல்படும் புரட்சி: சிறப்புக் காலகட்டத்தில் கியூபா’ என்ற நூல் விரைவில் என்சிபிஎச் வெளியீடாக வரவிருக்கிறது. கியூபப் புரட்சியின் பொன்விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்ட மிகச்சில விருந்தினருள் ரானும் ஒருவர். அச்சமயம் எழுதப்பட்ட கட்டுரை இது).

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.