சென்னை போரூர் அருகே 11 மாடிக் கட்டடம் இடிந்து 8பேர் பலி
சென்னை
போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம்
இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் பெண் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கட்டட இடிபாடுகளில் 40 முதல் 50 பேர் வரை சிக்கியிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
போரூரை
அடுத்துள்ள மவுலிவாக்கம் பகுதியில் 11 மாடிகளை கொண்ட இரண்டு குடியிருப்பு கட்டடங்கள்
புதிதாக கட்டப்பட்டு வந்தன. ப்ரைம் சிருஷ்டி என்ற தனியார் நிறுவனம், இக்கட்டடங்களை
கட்டி வந்தது. மவுலிவாக்கம் பகுதியில் சனிக்கிழமை மாலை, புதிதாக கட்டப்பட்டு வந்த இரண்டு
கட்டடங்களில் ஒரு கட்டடம் முற்றிலும் இடிந்து விழுந்தது.
இதில்
கட்டட தொழிலாளர்கள் உட்பட 100 மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் இருக்க கூடும் என்று அஞ்சப் படுகிறது. காயமடைந்த பலர்,
மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களில் மதுரையைச்
சேர்ந்த மருதுபாண்டி என்பவர் உயிரிழந்தார். இதேபோன்று, சங்கர் என்ற தொழிலாளரும் சிகிச்சை
பலனின்றி பலியானார். கட்டட இடிபாடுகளிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து
மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இரும்புச்சாரங்கள் அதிகமாக இருப்பதால், அவற்றை ஒவ்வொன்றாக
வெட்டியெடுத்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இரவு நேரம் என்பதாலும், மழை பெய்திருப்பதாலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக
தெரிகிறது.
இதனால்
அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 260 பேர் விபத்து நடந்த மவுலிவாக்கம்
பகுதிக்கு வரவழைக்கப்பட்டு மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏரியை ஆக்கரமித்து
கட்டபட்ட கட்டிடன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏரிகளை ஆக்ரமித்து நகரமயம்மாக்கல் என்று சுற்றுசூலையும் அழித்து மக்களை பலியாக்குவதே இந்த நகரமயம்மாக்கல்.
Leave a Comment