ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் மாபெரும் பேரணி


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் விவசாயிகள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் புத்தூரில் இருந்து பேரணியாக புறப்பட்டு முக்கிய வீதிகள்
வழியாக சென்று  முழக்கங்கள் எழுப்பிய வண்ணம் நாகப்பட்டினம் தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்களின் கூட்டமைப்பு தலைவர் சேரன் தலைமை தாங்கினார்காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் துரைராசன்தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மணிமொழியன்திருத்துறைபூண்டி நெல் உற்பத்தியாளர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் காவிரி தனபாலன் மற்றும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.