ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இராமேசுவரத்தில் மீனவர்கள் வாய்யை கட்டி பேரணில் ஈடுபட்டள்ளனர்இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 78 தமிழக மீனவர்களை விடுதலை செய்தது.  இதனை தொடர்ந்து ஊர்க்காவல் துறை முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்த 36 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை.

மீதம் உள்ள 42 மீனவர்களும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இராமேசுவரத்தில் நேற்று அனைத்து மீனவர்கள் சங்க ஆலேசானை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீனவர்கள் சிறைபிடிப்பு, விடுதலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படாதது குறித்து விவாதிக்கப்பட்டது. படகுகளை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி இராமேசுவரத்தில் இன்று பேரணியாக செல்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் மீனவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை மேற்கொண்ட இந்திய மத்திய – மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிப்பதோடு இந்திய சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி இராமேசுவரத்தில் இன்று காலை மீனவர்கள் பேரணியாக புறப்பட்டனர். வேர்க் கோடு தேவாலயத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள், வாயில் கறுப்பு துணி கட்டிக்கொண்டு தாலுகா அலுவலகம் வரை சென்றனர்.

இதற்கிடையில் இலங்கையில் நேற்று விடுதலை செய்யப்பட்ட 36 மீனவர்களும் இன்று பகல்தான் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

எனவே அவர்கள் மண்டபம் வர காலதாமதம் ஆகலாம் என கூறப்படுகிறது. நாளை அதிகாலை அவர்கள் வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.