ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை! சூலை 21 அன்று தமிழகமெங்கும் போராட்டங்கள்!



காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் சூலை 21 (21.07.2014) அன்று, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இயங்கும் இந்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டமும், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெறுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் அதே நாளில் முழு அடைப்பு நடைபெறுகின்றது.


தஞ்சை
தஞ்சையில், மருத்துவக் கல்லூரி சாலை – பாலாஜி நகரில் இயங்கும் இந்திய அரசின் உற்பத்தி வரிவசூல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம், காலை 10 மணிக்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெறுகின்றது. இதே நாளில், தஞ்சை மாவட்டம் முழுவதும் ஒருநாள் முழு அடைப்பு நடைபெறுகின்றது. போராட்டத்திற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை உள்ளிட்ட பல்வேறு வணிகர் அமைப்புகளும், தொழிலாளர் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

சிதம்பரம்
சிதம்பரத்தில், காலை 10 மணிக்கு வடக்குவீதி தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெறுகின்றது. போராட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, கொள்ளிடம் கீழணைப் பாசன விவசாயிகள் சங்கம், தமிழக உழவர் முன்னணி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழக இளைஞர் முன்னணிஉள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்கின்றன.

திருச்சி
திருச்சியில், காலை 10 மணிக்கு சேவா சங்கம் அருகிலுள்ள இந்திய அரசு உற்பத்தி வரி(எக்சைஸ்) அலுவலகம் முற்றுகைப் போராட்டம் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெறுகின்றது. இப்போராட்டத்தில், பல்வேறு உழவர் மற்றும் தமிழர் அமைப்புகள் பங்கேற்கின்றன.

திருவாரூர்
திருவாரூர் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிடும் போராட்டம், காலை 10 மணிக்கு நடைபெறுகின்றது. தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. வலிவலம் மு.சேரன் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், உழவர் அமைப்புகளும் கலந்து கொள்கின்றன.

நாகை
நாகப்பட்டினம் தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம், காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன் தலைமையில் நடைபெறகின்றது. போராட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு அமைப்பிலுள்ள உழவர் இயக்கங்களும், அரசியல் இயக்கங்களும் பங்கேற்கின்றன.

சென்னை
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், காலை 10 மணிக்கு பல்வேறு கட்சியினர் பங்கேற்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன் தலைமையேற்கிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன்,தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் பா.புகழேந்தி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தோழர் தங்கத்தமிழ்வேலன், தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிக்குமரன், இளம் தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், பூவுலகின் நண்பர்கள் திரு. சுந்தர்ராசன், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம் தோழர் மா.சேகர், உலகத் தமிழ்க் கழகச் சென்னை மாவட்டத் தலைவர் திரு. பா.இறையெழிலன் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.

கிருட்டிணகிரி
கிருட்டிணகிரி மாவட்டம் இராயக்கோட்டை அஞ்சல் நிலையம் எதிரில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் தூருவாசன் தலைமையேற்கிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து, தமிழக உழவர் முன்னணி கொப்பக்கரை கிளைச் செயலாளர் தோழர் இராசேந்திரன், லிங்கணம்பட்டி கிளைச் செயலாளர் தோழர் மு.வேலாயுதம், முகலூர் கிளைச் செயலாளர் தோழர் வெங்கட்ராமன், சஜ்சலப்பட்டி கிளைச் செயலாளர் தோழர் இரவி, கொட்டாயூர் கிளைச் செயலாளர் தோழர் சேட்டு, பெரியத்தோட்டம் கிளைச் செயலாளர் தோழர் சகாதேவன், போனேரி அக்ரகாரம் கிளைச் செயலாளர் தோழர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றுகின்றனர்.

கோவை
கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை செயலாளர் தோழர் இராசேந்திரன் தலைமையேற்கிறார். தந்தைப் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி, கொங்குநாடு சனநாயகக் கட்சித் தலைவர் திரு. ஜி.கே.நாகராஜ், ஆம் ஆத்மி திரு. பொன்.சந்திரன், தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் திரு. க.தங்கராசு, நாம் தமிழர் கட்சி பேராசிரியர் கல்யாணசுந்தரம், தமிழ்நாடு கல்வி இயக்கம் தோழர் திலகர், சமூக ஆர்வலர் வழக்கறிஞர் முருகேசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டன உரையாற்றுகின்றனர்.

ஈரோடு
ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் திரு. குமாரசாமி தலைமையேற்கிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தொடக்கவுரையாற்றுகிறார். ம.தி.மு.க. முன்னாள் மக்களவை உறுப்பினர் திரு. கணேசமூர்த்தி, அனைத்து வணிகர்கள் சங்கக் கூட்டமைப்பு திரு. சிவநேசன், தி.மு.க. நிர்வாகி திரு. சுப்புலட்சுமி ஜெகதீசன், கீழ்பவானி முறைநீர்ப்பாசன விவசாயிகள் கட்டமைப்பு திரு. காசியண்ணன் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் உழவர் அமைப்புத் தலைவர்கள் இதில் உரையாற்றுகின்றனர்.

மதுரை
மதுரை மாவட்ட ஆட்சியரகம் எதிரில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மதுரை செயலாளர் தோழர் ரெ.இராசு தலைமையேற்கிறார். தமிழ்ப்புலிகள் இயக்கப் பொதுச் செயலாளர் திரு. நாகை திருவள்ளுவன், தமிழ்நாடு உழவர் இயக்கம் பொதுச் செயலாளர் திரு. வேலுச்சாமி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட அமைப்பாளர் திரு. இராசபாண்டியன், தமிழ்நாடு மக்கள் கட்சி இணைச் செயலாளர் தோழர் மணிபாவா, தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் செயலாளர் தோழர் கதிர் நிலவன், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் தோழர் செல்வம், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்திக், எஸ்.பி.டி.ஐ. மாவட்டச் செயலாளர் தோழர் முஜிபுர் ராகுமான், முல்லைப் பெரியாறு ஒருபோக விவசாயிகள் சங்கம் - மேலூர் தலைவர் திரு. முருகன், உயர்நீதிமன்றத்தில் தமிழ் போராட்டக் குழு வழக்கறிஞர் பகத்சிங், சமநீதி வழக்குரைஞர் சங்க வழக்கறிஞர் ராசேந்திரன், மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, மக்கள் உரிமைப் பேரவை வழக்கறிஞர் சு.அருணாச்சலம், சித்திரை தானி ஓட்டுநர் சங்கச் செயலாளர் தோழர் இராசேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உரையாற்றுகின்றனர்.

இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் அரண்மனை அருகில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் பேரவை அமைப்பாளர் தோழர் நாகேஸ்வரன் தலைமையேற்கிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பரமக்குடி தோழர் இளங்கோவன், பரமக்குடி திரு. சவுந்திரபாண்டியன், வழக்கறிஞர் பசுமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் இதில் கண்டன உரையாற்றுகின்றனர்.

காவிரி உரிமைக்காக தமிழகமெங்கும் சூலை 21 அன்று ஒரே நாளில் நடைபெறும் இப்போராட்டங்களில், பல்வேறு உழவர் இயக்கங்களும், வணிகர்கள் – வழக்கறிஞர்கள் அமைப்புகளும், பல்வேறு அரசியல் இயக்கத்தினரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.