ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகமெங்கும் நடைபெற்ற போராட்டங்கள்!


 காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் இன்று (21.07.2014), காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இயங்கும் இந்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டமும், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டங்களும் எழுச்சியுடன் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் வணிகர்களின் ஆதரவோடு முழுமையான கடையடைப்பு அடைப்பு நடைபெற்றது.தஞ்சை

தஞ்சையில், மருத்துவக் கல்லூரி சாலை – பாலாஜி நகரில் இயங்கும் இந்திய அரசின் உற்பத்தி வரிவசூல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது.


மருத்துவக் கல்லூரிச் சாலையில் அமைந்துள்ள இந்திய அரசு உற்பத்தி வரிவசூல் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில், அங்கு பேரணியாக வந்த 1500க்கும் மேற்பட்ட உழவர்களும், பல்வேறு கட்சித் தோழர்களும் அலுவலக வாயிலில் முற்றுகையிட்டனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி உள்ளிட்ட தோழர்கள் காவல்துறை தடுப்பு அரண்களை மீறி உள்ளே நுழைய முயன்றபோது, பலவந்தமாகக் காவல்துறையினரால் இழுத்து வீசப்பட்டனர். ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வராத இந்திய அரசே! தமிழர் வரிப்பணத்தை வசூலிக்காதே’ என ஆர்ப்பாட்டத் தோழர்கள் எழுப்பிய முழக்கம் விண்ணைப் பிளந்து நின்றது.


போராட்டத்தில், ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் திரு. துரை. பாலகிருஷ்ணன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் திரு த.மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி திரு. அயனாவரம் சி.முருகேசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் திரு. கு.கிருஷ்ணசாமி வாண்டையார், முன்னாள் மாவட்டத் தலைவர் திரு. நாஞ்சி கி. வரதராசன், மனித நேய மக்கள் கட்சி மாநில வணிகப் பிரிவுத் தலைவர் திரு கலந்தர், புதியத் தமிழகம் கட்சி மாவட்டத் தலைவர் தஞ்சை திரு. குணா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் திரு. கணேசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவர் திரு எஸ்.எஸ். பாண்டியன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்புப் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர். சுமார் 1500 பேர் முற்றுகைப் போரட்டத்தில் பங்கேற்றனர் அதில் 600 பேர் தளைப் படுத்தப் பட்டனர். அனைவரும் மாலை 5 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்


தஞ்சை மாவட்ட வணிகர்கள், வழக்கறிஞர்கள், சுமையுந்து(லாரி) உரிமையாளர்கள், பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் இணைந்து, தஞ்சை மாவட்டம் முழக்க கடையடைப்பை நடத்தினர்.


சிதம்பரம்
கடலூர் மாவட்டத்தின் முக்கிய நகரான சிதம்பரத்தின் வடக்கு வீதியில் உள்ள இந்திய அரசுத் தலைமை அஞ்சலகம், காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் பல்வேறு அமைப்புத் தோழர்கள் மற்றும் உழவர்களின் துணையுடன் முற்றுகையிடப்பட்டது.


”காவிரி இல்லாமல் வாழ்வில்லை களம் காணாமல் காவிரி இல்லை” காவிரி தமிழர் செவிலித்தாய் காவிரி தமிழர் உரிமை சொத்து“, “காவிரி தமிழர் இரத்த ஓட்டம்” அனுமதியோம் அனுமதியோம்! காவிரி தாய்க்கு விலங்கிட்டு சிறைவைக்கும் கன்னடனுக்கு துணைப் போகும் இந்திய அரசுக்கு இங்கே என்ன வேலை? அனுமதியோம் அனுமதியோம், இந்திய அரசு அலுவலகங்கள் இயங்குவதற்கு தமிழர் நாங்கள் அனுமதியோம்” என்று முழக்கங்கள் எதிரொலிக்க 200க்கும் மேற்பட்ட தோழர்கள் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தையொட்டி அங்கு குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்ததினால் தலைமை அஞ்சலக வாயிற்கதவின் அருகில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட தோழர்கள் 120க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையேற்றார். மதி.மு.க மாவட்டச் செயலாளர் திரு. எ.குணசேகரன், மதி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. என்.இராமலிங்கம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. எம்.முகமது அஸ்ஸாம், தமிழக உழவர் முன்னணி குமராட்சி ஒன்றியச் செயலாளர் திரு. தங்க.கென்னடி, கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் திரு என்.ஜெயபாலன், கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் திரு ப.விநாயக மூர்த்தி, தமிழர் தேசிய முன்னணி திரு கீ.செ. பழமலை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரச் செயலாளர் திரு கோ.வி.தில்லைநாயகம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் தோழர் விடுதலைச் செல்வன், முற்போக்கு சிந்தனையாளர் இயக்கச் செயலாளர் திரு விநாயகம், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா, தமிழக இளைஞர் முன்னணி தமிழக துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் உட்பட பல்வேறு அமைப்புத் தோழர்களும், உணர்வாளர்களும் இதில் கைதாயினர்.

திருச்சி
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டுமென வலியுறுத்தி இன்று (21.07.2014), காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் திருச்சியில், சேவா சங்கம் அருகிலுள்ள இந்திய அரசு உற்பத்தி வரி(எக்சைஸ்) அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. போராட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாநகரத் தலைவர் திரு. போஸ் செல்வக்குமார், மறுமலர்ச்சி தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. வெல்லமண்டி சோமு, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் திரு. ஆர்.இராசா சிதம்பரம், மாவட்டத் தலைவர் திரு. ம.ப.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் திரு. என்.கணேசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் தோழர் மூ.த.கவித்துவன், மறுமலர்ச்சி தி.மு.க. தேர்தல் பணிக்குழு உறுப்பினர் புலவர் க.முருகேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் திரு. டி.டி.சி.சேரன், த.தே.பொ.க. குன்றாண்டார் கோயில் ஒன்றியச் செயலாளர் தோழர் சி.ஆரோக்கியசாமி, மகளிர் ஆயம் கொத்தமங்களப்பட்டிச் செயலாளர் திருமதி. க.மாரிக்கண்ணு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் கவிஞர் இராசா இரகுநாதன், மாவட்டத் துணைச் செயலாளர் தோழர் ச.முத்துக்குமாரசாமி, தமிழக இளைஞர் முன்னணி மாநகரச் செயலாளர் தோழர் மு.தியாகராசன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.


திருவாரூர்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டுமென வலியுறுத்தி இன்று (21.07.2014), காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் திருவாரூரில் இந்திய அரசுத் தலைமை அஞ்சலகம் முற்றுகையிடப்பட்டது. போராட்டத்தில், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. வலிவளம் மு.சேரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா.தனபாலன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு திரு. வரதராசன், பாரம்பரிய நெல் இயக்கம் திரு. நெல் செயராமன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் திரு. சி.ஏ.பாலு, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சங்கப் பொருளார் திரு. என் பாலகிருஷ்ணன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு. முப்பால், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத் தோழர் முகிலன், தன்மான வழக்காடும் அவை வழக்கறிஞர் பிரகாசு உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டு கைதாகினர்.

நாகை
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டுமென வலியுறுத்தி இன்று (21.07.2014), காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நாகையில் இந்திய அரசுத் தலைமை அஞ்சலகம் முற்றுகையிடப்பட்டது. காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பொதுச் செயலாளர் தோழர் தனபால் தலைமையில், தலைமை அஞ்சலகம் நோக்கி பேரணியாக சென்ற தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.  மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.செயராமன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் துணைத் தலைவர் திரு. பக்கிரிசாமி, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு. மோகன் உள்ளிட்ட270 பேர் போராட்டத்தில் கைதாகினர். 

சென்னை
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு.த.வெள்ளையன் தலைமையேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மத்திய சென்னை மாவட்டத் தலைவர் திரு. தேவரால், தென்சென்னை மாவட்டத் தலைவர் திரு. சவுந்திரராசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் பா.புகழேந்தி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தோழர் தங்கத்தமிழ்வேலன், தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிக்குமரன், இளம் தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், தமிழக மின்துறை பொறியாளர் சங்கத் தலைவர் திரு. காந்தி, ஓவியர் வீரசந்தானம், உலகத் தமிழ்க் கழகச் சென்னை மாவட்டத் தலைவர் திரு. பா.இறையெழிலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தொழிலாளர் சீரமைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் மா.சேகர், புலவர் இரத்தினவேலவர், பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் திரு. காஞ்சி அமுதன், அதிர்வு திரைப்பட்டறை திரு. த.மணிவண்ணன் உள்ளிட்ட திரளான இன உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கிருட்டிணகிரி
கிருட்டிணகிரி மாவட்டம் - இராயக்கோட்டை அஞ்சல் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் தூருவாசன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் முருகப்பெருமாள் துவக்கவுரையாற்றினார். மகளிர் ஆய நடுவண் குழு உறுப்பினர் தோழர் மேரி, தமிழக உழவர் முன்னணி கொப்பக்கரை கிளைச் செயலாளர் தோழர் இராசேந்திரன், முகலூர் கிளைச் செயலாளர் தோழர் வெங்கட்ராமன், சஜ்சலப்பட்டி கிளைச் செயலாளர் தோழர் மாதேஷ், கொட்டாயூர் கிளைச் செயலாளர் தோழர் சேட்டு, பெரியத்தோட்டம் கிளைச் செயலாளர் தோழர் சகாதேவன், போனேரி அக்ரகாரம் கிளைச் செயலாளர் தோழர் சுப்பிரமணி, த.தே.பொ.க. தோழர் சுப்பிரமணி, லிங்கணம்பட்டி தோழர் மு.வேலாயுதம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

கோவை
கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் இன்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன் தலைமையேற்றார். நாம் தமிழர் கட்சி மத்திய மண்டலப் பொறுப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம், தந்தைப் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஓசூர் நகரச் செயலாளர் தோழர் செம்பரிதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநகரச் செயலாளர் தோழர் கோவை சம்பத், கொங்குநாடு சனநாயகக் கட்சி நகரத் தலைவர் திரு. தண்டபாணி, ஆம் ஆத்மி நிர்வாகி திரு. கோப்மா கருப்பசாமி, தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் திரு. க.தங்கராசு, இந்திய தேசிய லீக் கட்சி கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. டிகர் முகம்மது, தமிழ்நாடு கல்வி இயக்கம் தோழர் திலகர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

ஈரோடு
ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் இன்று காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் திரு. குமாரசாமி தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தொடக்கவுரையாற்றினார். ம.தி.மு.க. முன்னாள் மக்களவை உறுப்பினர் திரு. கணேசமூர்த்தி, அனைத்து வணிகர்கள் சங்கக் கூட்டமைப்பு திரு. சிவநேசன், பாட்டாளி மக்கள் கட்சி மாநிலத் துணைப் பொதுச்செயலர் திரு. மகேந்திரன், மாவட்டச் செயலார் திரு. ஆறுமுகம், சி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் துரை மாணிக்கம், திராவிடர் விடுதலைக் கழகப் பொறுப்பாளர் தோழர் இரத்தினசாமி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  தந்தைப் பெரியார் திராவிடர் கழகப் பொறுப்பாளர் தோழர் குமரகுருபரன், தமிழ்த் தேசிய நடுவம் தோழர் நிலவன், மக்கள் நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. கண.குறிஞ்சி, இளைஞர் ஒருங்கிணைப்பு இயக்க மாவட்டச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ.இளங்கோவன், கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் திரு. செ.நல்லசாமி, நாம் தமிழர் கட்சி மாவட்ட மகளிரணித் தலைவி தோழர் குமுதவல்லி, இயற்கை வேளாண்மைக் கூட்டமைப்பு திரு. அறச்சலூர் செல்வம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் திரு. துளசிமணி, திரு. முனுசாமி, தற்சார்பு உழவர் இயக்கத் தலைவர் திரு. கி.வெ.பொன்னையன், புரட்சிகர இளைஞர் முன்னணித் தோழர் இரவி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  
மதுரை
மதுரை மாவட்ட ஆட்சியரகம் எதிரில் இன்று காலை நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மதுரை செயலாளர் தோழர் ரெ.இராசு தலைமையேற்றார். தமிழ்ப்புலிகள் இயக்க மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் திரு. முகிலரசு, தமிழ்நாடு உழவர் இயக்கம் பொதுச் செயலாளர் திரு. வேலுச்சாமி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட அமைப்பாளர் திரு. இராசபாண்டியன், தமிழ்நாடு மக்கள் கட்சி இணைச் செயலாளர் தோழர் மணிபாவா, தமிழ்த் தேசக் குடியரசு இயக்கச் செயலாளர் தோழர் கதிர் நிலவன், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் தோழர் செல்வம், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்திக், எஸ்.பி.டி.ஐ. மாவட்டத் துணைத் தலைவர் திரு. கே.சுப்பிரமணியன், சமநீதி வழக்குரைஞர் சங்க வழக்கறிஞர் ராசேந்திரன், மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, நாணல் நண்பர்கள் திரு. தமிழ்தாசன், மக்கள் உரிமைப் பேரவை வழக்கறிஞர் சு.அருணாச்சலம், சித்திரை தானி ஓட்டுநர் சங்கச் செயலாளர் தோழர் இராசேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் அரண்மனை அருகில் இன்று காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் பேரவைத் தலைவர் தோழர் நாகேஸ்வரன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பரமக்குடித் தோழர் இளங்கோவன், பரமக்குடி திரு. சவுந்திரபாண்டியன், கவிஞர் முத்தமிழ், பரம்பை மறவன் கோ, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் திரு. மதுரை வீரன் கார்குடி அங்குச்சாமி, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் திரு. சத்தியராச வளவன், ஒன்றியச் செயலாளர் திரு. இரவி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் இதில் கலந்து கொண்டு  உரையாற்றினர்.

திருநெல்வேலி


திருநெல்வேலியில், பாளை மார்க்கெட் மைதானத்தில் இன்று (21.07.2014) மாலை, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.பாண்டியன் தலைமையேற்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் தோழர் காசி விசுவநாதன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருச்செந்தூர் செயலாளர் தோழர் மு.தமிழ்மணி, ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் தோழர் கலைக்கண்ணன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் லெனா.குமார், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவர் திரு. எஸ்.அகமது நவபி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொறுப்பாளர் தோழர் கபிலன், மத்திய மாநில SC/ST அரசு ஊழியர் சங்கம் திரு. ஹரிராம், திராவிடர் விடுதலைக் கழகக் கொள்கைப் பரப்புரைச் செயலாளர் தோழர் பால்.பிரபாகரன், உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் தென் மாவட்ட அமைப்பாளர் தோழர் நல்வினைச் செல்வன், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் இ.உத்திரம், அம்பேத்கர் நினைவு சமுதாய பணி இயக்க அமைப்பாளர் தோழர் பொற்செழியன், பாலச்சந்திரன் மாணவர் இயக்கத் தோழர் பன்னீர் செல்வம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கசமுத்து, பாவாணர் இயக்கம் திரு. தென்.து.மூக்கையா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகமெங்கும் நடைபெற்ற இவ் ஆர்ப்பட்டாங்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய நம்பிக்கையையும் எழுச்சியும் ஏற்படுத்தியிருக்கிறது. 
No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.