மீத்தேன் திட்டத்தை எதிர்த்து சிதம்பரத்தில் பரப்புரை இயக்கம்
தமிழக இளைஞர் முன்னணி, தமிழக மாணவர் முன்னணி, அக்னிச் சிறகுகள் எழுச்சி இயக்கம் உறுப்பு வகிக்கும் கடலூர் மாவட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் மீத்தேன் எடுப்புத் திட்டத்தைக் கண்டித்து பரப்புரை பயணம் நடைபெற்றது.
சிதம்பரம் வட்டம் கீழ மூங்கிலடிப் பகுதியில் தொடங்கிய இப்பரப்புரைப் பயணத்திற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆ.குபேரன் தலைமை தாங்கினார். மாணவர் முன்னணி நிர்வாகிகள் செ.ரோகேஷ், ஐ.தன்ராஜ், ஆ.யவனராணி, தமிழக இளைஞர் முன்னணி நிர்வாகிகள் இரா.எல்லாளன், சு.சுகன்ராஜ், செ.சத்யா அக்னிச் சிறகுகள் சேவை அமைப்பின் செயலாளர் வே.சுப்பிரமணியசிவா, செயற்குழு உறுப்பினர்கள் செ.மணிமாறன், த.ஜான்பாண்டியன் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்றனர்.
26.07.2014 சனிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் கீழமூங்கிலடியிலிருது, அம்பலத்தாடிக் குப்பம், தையாக்குப்பம் வழியாக சென்று மேலமூங்கிலடி கிராமம் வரையில் மிதிவண்டியில் வீடுவிடாக சென்று மீத்தேன் திட்ட ஆபத்துகள் குறித்த காட்சிப் படங்களை விளக்கிப் பேசியும் துண்டறிக்கைகள் வழங்கியும் பரப்புரை மேற்கொண்டனர்.
இரவு 7.30 மணி அளவில் மீத்தேன் திட்ட ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு வரும் மேலமூங்கிலடிப் பகுதியில் “ பாலைவனமாகும் காவிரி டெல்டா : மீத்தேன் “ என்னும் விழிப்புணர்வு ஆவணப்படம் ஒளிபரப்பப் பட்டது.
முன்னதாக அப்பகுதிக்கு வந்தடைந்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க பரப்புரை குழுவினருக்கு தமிழக உழவர் முன்னணி அமைப்பின் மேலமூங்கிலடி கிளை தலைவர் திரு.இராசேந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஊர் நிர்வாகிகளும், உழவர்களும், திரளான பொதுமக்களும் பங்கேற்றனர்.
Leave a Comment