ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கிருட்டிணகிரியில் தமிழக உழவர் முன்னணி புதியக் கிளைத் தொடக்க விழா!


கிருட்டிணகிரி மாவட்டம் முகலூர் முனியப்பகோயில் பகுதியில், கடந்த 06.07.2014 அன்று தமிழக உழவர் முன்னணியின் புதியக் கிளைத் தொடக்கவிழா சிறப்புற நடைபெற்றது.

நிகழ்வுக்கு, தமிழக உழவர் முன்னணி கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர் தூருவாசன் தலைமையேற்றார். புதிய உறுப்பினர்களுக்கு, தமிழக உழவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் கென்னடி உறுப்பினர் அட்டை வழங்கினார். 

 தென்பெண்ணை கிளைவாய்க்கால் உழவர் அமைப்பு அலோசகர் தோழர் கோ.மாரிமுத்து, த.உ.மு. கொப்பக்கரை கிளைச் செயலாலர் தோழர் இராசேந்திரன், முகலூர் கிளைச் செயலாலர் தோழர் வெங்கட்ராமன்,  தோழர் கோனேரி, அக்ரகாரம் கிளைச் செயலாளர் தோழர் சுப்பிரமணி, லிங்கனம்பட்டி கிளைச் செயலாளர் தோழர் அரிச்சந்திரன், தோழர் பழனி, முகலூர் இரா. செல்வம், சஜ்ஜலப்பட்டி இரவி, மாதேஷ், கொட்டாயூர் சேட்டு, பெரியத்தோட்டம் சகாதேவன், முனியப்பன், லிங்கனம்பட்டி வேலாயுதம், கோவிந்தசாமி, பில்லாரி அகரகாரம் மாரியப்பன், முருகன், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி ஓசூர் நகரச் செயலாளர் தோழர் செம்பருதி, தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் விஜயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு, நிறைவேற்றப்பட்டன. 2400 ஏக்கர் பாசனம் பெறுவதற்கான தென்பெண்ணை கிளை வாய்க்கால் அலியாளம் ஒட்டிலிருந்து லிங்கனப்பட்டி வழியாக கால்வாய் வெட்ட நிதி ஒதுக்க அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை தோழர் முகலூர் வெங்கட்ராமன் முன்மொழிந்தார். வெளி மாநிலத்தவர் விவசாய நிலங்களை வாங்க தமிழக அரசு தடை செய்யவேண்டும் என்று கோரும் தீர்மானத்தை அக்ரகாரம் கிளைத் தோழர் சுப்பிரமணி முன்மொழிந்தார். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை, லிங்கனம்பட்டி தோழர் பூ.கோவிந்தசாமி முன்மொழிந்தார்.

நிறைவில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் சிறப்புரையாற்றினார். தோழர் பூ.கோவிந்தசாமி நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில், 400க்கும் மேற்பட்ட உழவர்களும் திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர். 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.