ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நீண்ட நாள் சிறை கைதிகளை விடுவிக்க - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

24 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் 7 தமிழர்களையும், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இசுலாமியர்களையும் விடுதலை செய்!

சிறப்பு முகாம்களை இழுத்து மூடு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

24 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் 7 நிரபராதி தமிழர்களை விடுதலை செய், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல், வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய், சிறப்பு முகாம்களை இழுத்து மூடு, தமிழீழ அகதிகளை அவர்கள் குடும்பத்துடன் வாழ விடு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து, இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (7.06.2015) காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்திற்கு இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்தி தலைமையேற்றார்.

சிறப்புரையாக நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் தோழர் குன்னங்குடி அனிபா, எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் தோழர் தெகலான் பாகவி, இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் தோழர் எஸ்.எம். பாக்கர், மனித நேய மக்கள் கட்சி இணைப் பொதுச்செயலாளர் தோழர் ஹாரூன் ரசீத், இசுலாமிய சனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுக்கூர் மைதீன், தமிழ்த் தேசம் ஆசிரியர் தோழர் தியாகு, இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்கள் உமர்கயான், தமிழரசன் அப்துல்காதர், தமிழ்நாடு மாணவர் நடுவன் சார்பாக பிரிட்டோ உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தென்சென்னை செயலாளர் தோழர் இளங்குமரன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், நடுவன்சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன், தாம்பரம் த.இ.மு. செயலாளர் தோழர் வெற்றித்தமிழன் உள்ளிட்ட தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் சூலை முதல் வாரத்தில் தமிழக நடுவன் சிறைச்சாலைகளை முற்றுகை என அறிவிக்கப்பட்டது.








No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.