ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னைத் தலைமைச் செயலகம் முன்றாவது நாள் மறியல்

அரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து நடைபெற்ற...  சென்னையில் மூன்றாம் நாளாக நடைபெற்ற தலைமைச் செயலக மறியல் போராட்டம்!

பள்ளிக் கல்வியில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு கல்வி - வேலை வாய்ப்பில் 80% இட ஒதுக்கீடு வழங்கவும் வலியுறுத்தி, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் ஆகத்து 17 முதல் ஆகத்து 19 வரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு, சென்னைத் தலைமைச் செயலகம் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஆகத்து 17 அன்று தொடங்கி நடைபெற்ற, போராட்டத்தில், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் அய்யா பழ. நெடுமாறன், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இரண்டாம் நாள் போராட்டமான 18.08.2015 அன்று, தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் தியாகு, தமிழர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி, குமுக விடுதலைத் தொழிலாளர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் மா. சேகர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மூன்றாம் நாளான நேற்று (19.08.2015), விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன் தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து, பேரணியாகப் புறப்பட்ட, தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத் தமிழாசிரியர் கழக மேனாள் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், மக்கள் கல்விக் கூட்டமைப்பு பேராசிரியர் பிரபா. கல்விமணி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், பாலாறு பாதுகாப்புக் கூட்டியக்கம் திரு. காஞ்சி அமுதன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தோழர்களும் கைதாகியுள்ளனர்.

பேரணிக்கு முன்னதாக, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து, போராட்ட முழக்கங்களை எழுப்பினர்.

பேரணியை வழிமறித்த காவல்துறையினர், அனைவரையும் தற்போது கைது செய்து, சேப்பாக்கம் பறக்கும் தொடர்வண்டி பூங்காவில் அடைத்துள்ளனர்.

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைமை நிலையச் செயலாளர் தோழர் வினோத் குமார் தலைமையில் அக்கட்சியினரும், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் லேனாகுமார் தலைமையிலான மே பதினேழு இயக்கத் தோழர்களும் இதில் கைதாகியுள்ளனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் ஈரோடு வெ. இளங்கோவன், சேலம் ச. பிந்துசாரன், பழ.நல். ஆறுமுகும், தர்மபுரி செயலாளர் தோழர் விஜயன், தமிழக உழவர் முன்னணித் தலைவர் தோழர் தூருவாசன் உள்ளிட்ட த.தே.பே. தோழர்கள் கைதாகியுள்ளனர்.

தமிழக அரசே! அரசு பள்ளிகளில் ஆங்கிலத்தைத் திணிக்காதே! 
தமிழ்வழிக் கல்வியை அழிக்காதே!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.