ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“ஏழு தமிழர் விடுதலை உச்சநீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்” நூல் வெளீயீட்டு விழா – கருத்தரங்கம்.

சிதம்பரத்தில் மிக எழுச்சியுடன் நடைபெற்றஏழு தமிழர் விடுதலை உச்சநீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்நூல் வெளீயீட்டு விழாகருத்தரங்கம்.                                            


தமிழீழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி, ஆயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தும், அதற்கு மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும், தமிழ்நாடு அரசின் அதிகாரங்கள் குறித்தும் சட்ட விளக்கங்களோடு பேசுகின்ற, “ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூலின் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம் உயிர்வலி ஆவணப்பட திரையிடல், சிதம்பரத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.


24.04.2016 மாலை 5.30 மணிக்கு, சிதம்பரம் சபாநாயகர் தெரு, தமிழக உழவர் முன்னணி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் இரா. எல்லாளன் தலைமை ஏற்றார்
தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா வரவேற்றுபேசினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் . முருகன், தோழர் . விடுதலைச்சுடர், பெண்ணாடம் செயலாளர் தோழர் கு. மாசிலாமணி, புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்வின் துவக்கமாக மரண தண்டனைக்கு எதிரானஉயிர்வலிஆவணப்படம் திரையிடப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் .பூ. நடராசன் வாழ்த்துரை வழங்கி படத்தை துவக்கிவைத்தார்.

கருத்தரங்கத்தின் துவக்க நிகழ்வாக தோழர் கி.வெங்கட்ராமன் எழுதியஏழுதமிழர் விடுதலை உச்ச நீதிமன்ற மறுப்புதமிழ்நாடு அரசின் அதிகாரம்நூல் வெளியீடு நடைபெற்றது
பேரறிவாளன் அவர்களின் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மாள் முன்னிலைவகிக்க சந்தனக்காடு தொடரின் இயக்குனரும், திரைப்பட இயக்குநருமான .கௌதமன் அவர்கள் நூலினை வெளியிட்டுப் பேசினார்.
தமிழர் உரிமைப்போராட்டங்களில் பங்கெடுத்து ஆயுள் தண்டனை பெற்று விடுதலை ஆன பெண்ணாடம் தோழர் மாசிலாமணி (புலவர் கலியபெருமாள் தம்பி) அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறை பேராசிரியர் ஜா. இராசா, சீர்காழி நகர பேரியக்கச் செயலாளர் தோழர் கோ. நடராசன் , தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர்கள் திரு.வை.ரா.பாலசுப்ரமணியம், திரு.பழமலை, தமிழக உழவர் முன்னணி மாவட்டத் தலைவர் திரு. .கோ. சிவராமன், மிட் டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் திரு. . மணிவண்ணன் ஆகியோர் சிறப்புப்படி பெற்று கருத்துரையாற்றினார்கள்.

சிதம்பரம் பகுதி மூத்த வழக்குரைஞர் .கோபாலகிருட்டிணன் , சென்னை மத்திய சட்டக் கல்லூரி சட்ட மாணவி செல்வி. .பா. வையவி ஆகியோர் நூல் குறித்து திறனாய்வு உரையாற்றினார்.

நிறைவில், நூல் ஆசிரியரும் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் ஏற்புரையாற்றினார்.
                                                                
தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் . குபேரன் ஒருங்கிணைத்தார். தோழர் சோ. யாழவன் நன்றியுரையாற்றினார்.

முன்னதாக சிதம்பரம் மேலவீதி பெல்காம் அனந்தம்மாள் அரங்கில் நடைபெற இருந்த இந் நிகழ்வு தி.மு. தலைவர் கருணாநிதி சிதம்பரம் வருகையை காரணம் கூறி கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தது.

எனவே, உடனடியாக இடம் மாற்றி இந் நிகழ்வு நடத்தப்பட்டாலும் அரங்கு நிறைந்த கூட்டமாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது. இந்நிகழ்வில், அமைப்புத் தோழர்களும், தமிழின உணர்வாளர்களும், மட்டுமல்லாது ஏராளமான பொது மக்களும் கலந்துகொண்டனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.