ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நிதிநிலை அறிக்கையில் அம்மா ஆய்வு முனைவர் பட்டம்! - விலையில்லா ஆலோசகன்


நிதிநிலை அறிக்கையில் அம்மா ஆய்வு முனைவர் பட்டம்! - விலையில்லா ஆலோசகன்

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2016 – 2017-ஐ 21.07.2016 அன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்ச்செல்வம் அவர்கள் படிக்கும் போது அந்த அறிக்கை முழுவதும் எத்தனை இடங்களில் “புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா” என்ற சொற்கள் வந்துள்ளனவென்று எண்ணியும் அச்சொற்கள் பயன்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள நயம் குறித்து ஆராய்ந்தும் பலர் முனைவர் பட்டம் வாங்க விரும்பக் கூடும்.

அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றிட, ஆட்சியாளர்களின் அருள் – பொருள் பார்வையால் துணைவேந்தர் ஆனவர்கள் தங்கள் பல்கலைக்கழகங்களில் “அம்மா” முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பை, தகுந்த உதவித் தொகையுடன் கொண்டு வரலாம்.

தமிழ்நாடு அரசின் சார்பில் பேச, கருத்துகள் சொல்ல நிதி அமைச்சருக்கு சட்டப்படி உரிமை இருக்கிறது. ஆனால் நடைமுறைப்படி உரிமை இல்லையோ என்னவோ!

தமிழ்நாடு வருமானம் மற்றும் செலவு குறித்த நிதியமைச்சரின் நிதிநிலை அறிக்கை, தன்மானம் செலவு என்ற முறையில் படிக்கப்பட்டதுதான் மிச்சம்!

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.