ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு..! திருச்சி - நரேந்திர மோடி உருவபொம்மை எரிப்பு ஆர்ப்பாட்டம்! மதுரை - இந்திய அரசுத் தலைமை அஞ்சலக முற்றுகை!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு..!
திருச்சி - நரேந்திர மோடி உருவபொம்மை எரிப்பு ஆர்ப்பாட்டம்! - மதுரை - இந்திய அரசுத் தலைமை அஞ்சலக முற்றுகை!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள இந்திய அரசைக் கண்டித்து, இன்றும் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்றும் நேற்று முன்தினமும், இதுபோன்று போராட்டங்களில் ஈடுபட்ட சென்னை, தஞ்சை, ஓசூர், குடந்தை, பெண்ணாடம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, புளியங்குடி தோழர்களில், குடந்தை - புளியங்குடி தோழர்கள் மீது மட்டும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களை சொந்த பிணையில் விடுதலை செய்தனர்.

இந்நிலையில், இன்று (05.10.2016) திருச்சியில் இன்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும், மதுரையில் இந்திய அரசுத் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்ட தோழர்களும் தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்க மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமையில், தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.பா. சின்னத்துரை, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் இராசாரகுநாதன், தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் திரு. நகர். செல்லையா உள்ளிட்ட தோழர்கள் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர்.
மதுரை

மதுரையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு தலைமையில், தல்லாகுளம் இந்திய அரசுத் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்ட பேரியக்கக் கிளைச் செயலாளர்கள் தோழர் கதிர்நிலவன், தோழர் சிவா, மகளிர் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மேரி உள்ளிட்டோர் கைதாகியுள்ளனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.