காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு..! செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு..!
செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு
செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள இந்திய அரசைக் கண்டித்து, இன்றும் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 04.10.2016லிருந்து, இதுபோன்று போராட்டங்களில் ஈடுபட்ட சென்னை, தஞ்சை, ஓசூர், குடந்தை, பெண்ணாடம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, புளியங்குடி தோழர்களில், குடந்தை - புளியங்குடி தோழர்கள் மீது மட்டும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களை சொந்த பிணையில் விடுதலை செய்தனர்.
இந்நிலையில், நேற்று (05.10.2016) திருச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள தமிழகக் காவல்துறையினர் அவர்கள் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை சொந்தப் பிணையில் விடுதலை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று (05.10.2016) மாலை, தஞ்சை மாவட்டம் - பூதலூர் ஒன்றியம், செங்கிப்பட்டியில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு தலைமையில், பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் ஆ. தேவதாசு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட தோழர்கள் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
செய்தி பிரிவு.
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
Leave a Comment