ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தொடர்ந்து தமிழர் உரிமைகளை மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்து. . . தமிழர் ஒத்துழையாமை இயக்கம் . . . ! செங்கிப்பட்டியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய விளக்கத் தெருமுனைக் கூட்டம்!

தொடர்ந்து தமிழர் உரிமைகளை மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்து. . . தமிழர் ஒத்துழையாமை இயக்கம் . . . ! செங்கிப்பட்டியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய விளக்கத் தெருமுனைக் கூட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து காவிரிச் சிக்கலிலும், பிற சிக்கல்களிலும் தொடர்ந்து தமிழர் உரிமைகளை மறுத்து வரும் இந்திய அரசுக்கு எதிராக நடைபெறும் “தமிழர் ஒத்துழையாமை இயக்கம்” குறித்த விளக்கத் தெருமுனைக் கூட்டங்கள், தமிழ்நாடெங்கும் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் - பூதலூர் ஒன்றியம் - செங்கிப்பட்டியில், விளக்கத் தெருமுனைக் கூட்டம் 22.10.2016 மாலை 6 மணி அளவில் தமிழ்த் தேசியப் பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் ஆ. தேவதாசு தலைமையில் நடைப்பெற்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தமிழர் தேசிய முன்னணிப் பொதுச் செயலாளர் திரு. அய்யனாபுரம் சி. முருகேசன், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. சிமியோன் சேவியர்ராஜ், மனித நேய மக்கள் கட்சி வணிகப்பிரிவுத் தலைவர் திரு. ஜெ. கலந்தர், தமிழ்த்தேசியப் பேரியக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ. கருணாநிதி, பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் க. காமராசு, செயலாளர் தோழர் ஆ. தேவதாசு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் தெட்சிணாமூர்த்தி, மகளிர் ஆயம் தோழர் சிறீபிரியா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கருத்துரையாற்றினர்.

#TamilsBoycottGovtOfIndia

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 98408 48594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
முகநூல்: www.fb.com/TamilsBoycottGovtOfIndia

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.